பொதுமக்களின் குறைகளை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை

பொதுமக்கள் நலன் கருதி, பொதுமக்களின் குறைகளை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகாணும் வகையில், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்ல நட்புறவு ஏற்படும் வகையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் இ.கா.ப. உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன்.இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர், (சட்டம் & ஒழுங்கு) க.சுரேஷ்குமார், மேற்பார்வையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் வலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்திலும், மங்கலம் சாலையில் உள்ள பேரடைஸ் ஹாலிலும் நடைபெற்றது. வலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்தில் வடக்கு சரகத்தில் உள்ள வடக்கு காவல் நிலையம், அனுப்பர்பாளையம் காவல் நிலையம், 15 வேலம்பாளையம் காவல் நிலையம், திருமுருகன்பூண்டி காவல் நிலையம், மற்றும் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 80 புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும்…

Read More