பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் !!

திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் !! நீட் தேர்வை ரத்து செய்யப்படாததை கண்டித்தும், காவிரி நதிநீர் உரிமையில் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும் , தமிழக ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் மிரட்டும் அராஜக போக்கை கைவிட கோரியும், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருவதோடு, தமிழக வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க துணை போகும் , பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, திராவிட இயக்கங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்,

Read More