பழனி முருகன் கோயிலில் திருட்டு தனமாக நடந்து கொண்ட குண்டர்கள் மொட்டை அடிக்கும் இடத்திலும் சில குண்டர்கள்

பழனி… முருகனின் திருத்தலம் மட்டும் அல்ல… கொள்ளையர்களின் திருட்டுத்தனம் அதிகம் உள்ள இடமும் அதுதான். ரோப்கார் பகுதியில் புரோக்கர் தொல்லை அது பற்றி ஒருவர் நுகர்வோர் மையத்துக்கு கொடுத்த புகார் பதிவு வாசலிலேயே தலைக்கு நூறு ரூபாய் விஐபி தரிசனம் என சிலர் கூவிட்டு இருந்தாங்க. ரோப்கார் டிக்கட் வாங்க வரிசையில் நின்னா ஒரு மணிநேரம் ஆகும், எங்ககிட்ட பணம் கொடுத்த உடனே கூட்டிட்டு போறோம்னு சொன்னாங்க. ஒன்னும் வேணாம்னு சொல்லிட்டு உள்ளே கூண்டுகளுக்குள் வரிசையில் போய் நின்றுகொண்டோம். உள்ளே எந்த இடத்தில் டிக்கட் கொடுப்பார்கள், எப்பொழுது கொடுப்பார்கள் என்றே தெரியாத அளவுக்கு சுவர் போல எல்லாமுமே அடைக்கப்பட்டு இருந்தது. கொஞ்ச நேரம் பொறுத்து பார்த்துவிட்டு நான் மட்டும் வெளியே வந்தேன். வெளியே பாதுகாவலர் போல கேட் அருகில் நின்ற நபரை கேட்டேன். எப்ப நீக்குவாங்கனு தெரியாதுங்க,…

Read More