நல்லறம் அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா

நல்லறம் அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா கோவை. செப. மறைந்த அறிஞர் ஆண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆணைக்கிணங்க 93A-டிவிசன் சார்பாக அதன் வட்ட கழக செயலாளர் எஸ்.ஜெகதீஸ் ஏற்பாட்டின் பேரில் அண்ணா 112-ஆவது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் குணியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அண்ணாவின் திரு உருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புடன் மதிய உணவுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டிவிசன் செயலாளர் எஸ். ஜெகதீஸ், அறநிலையத்துறை தலைவர் ஈ.கே.பழனிச்சாமி, மற்றும் கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தன்ர்.

Read More

நல்லறம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான அமைப்பு இனிதே துவங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான அமைப்பு இனிதே துவங்கப்பட்டது.

Read More

நல்லறம் அறக்கட்டளை சார்பாக ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கி வருகின்றனர்

நல்லறம் அறக்கட்டளையுடன் இணைந்து பேரூர் தமிழ் மன்றம் மற்றும் ஆதினம் சார்பாக பொதுமக்களுக்கு அந்தந்த பகுதிகளுக்கே சென்று நேரடியாக ஓமியோபதி மருந்துகள் வழங்கும் திட்டம் கோவையில் துவங்கப்பட்டது, கொரோனா தடுப்பு நடவடிக்கையின் ஒரு பகுதியாக ஹோமியோபதி மருந்தான ஆர்சனிகம் ஆல்பம் எனும் ஓமியோபதி மருந்தை அளிக்கலாம் என தமிழக அரசு அறிவித்திருந்தது.இந்நிலையில் கோவை நல்லறம் அறக்கட்டளை சார்பாக ஓமியோபதி மருந்தான ஆர்சனிக் ஆல்பம் மாத்திரைகளை பொதுமக்களுக்கு தொடர்ந்து இலவசமாக வழங்கி வருகின்றனர். இந்நிலையில் இதன் தொடர்ச்சியாக பேரூர் தமிழ் மன்றம் மற்றும் ஆதினத்துடன் இணைந்து பேரூர் மற்றும் அதன் சுற்றுவட்டார பகுதிகளில் வசிக்கும் பொதிமக்களின் இருப்பிடத்திற்கே வாகனத்தில் சென்று இந்த மருந்துகளை வழங்கும் திட்டம் பேரூர் தமிழ் கல்லூரியில் துவங்கப்பட்டது.இதற்கான நிகழ்ச்சியில் பேரூராதினம் தவத்திரு மருதாசல அடிகளார் மற்றும் நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் அண்ணன் எஸ்.பி.அன்பரசன் அறக்கட்டளையின்…

Read More

நல்லறம் அறக்கட்டளை சார்பாக நிவாரண உதவி

நல்லறம் அறக்கட்டளை சார்பாக நிவாரண உதவி கோவை செல்வபுரம் 76 வது வார்டுக்குட்பட்ட CGV நகர் பகுதியில் ஒருவருக்கு கொரோனோ தொற்று பாதிப்பு அறிகுறி இருந்ததால் சிகிச்சைக்காக கோவை இஎஸ்ஐ அனுமதிக்கப்பட்டார். அதனால் அடைக்கப்பட்ட அந்த பகுதியில் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டு அவதிப்பட்ட மக்களுக்காக உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்பி வேலுமணி அறிவுறுத்தலின்படி நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்பி.அன்பரசன் சார்பாக 76 வது வார்டு கழக களப்பணியாளர் SR.குமார் ஏற்பாட்டின்படி, நல்லறம் அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சுரேஷ்குமார், எஸ்ஆர் குமார் தலைமையில் 50 குடும்பங்களுக்கு அரிசி,சர்க்கரை மற்றும் அத்தியாவசிய மளிகை பொருட்கள் வழங்கப்பட்டன. நிகழ்ச்சியில் நல்லறம் முருகவேல், கோவை CBM சிவா, ஆவின் முத்து, சீனிவாசன், கீர்த்தி, மகேந்திரன், சாய் ஃபோட்டோஸ் சிவா, சந்தோஷ்,சரவணகுமார், வடிவேல், பிஜூ, நந்தகுமார், மாநகராட்சி அதிகாரிகள் ராமு, சூப்பர்வைசர் பரமசிவம் ஆகியோர் பங்குபெற்றனர். நல்லறம்…

Read More

நல்லறம் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம்

நல்லறம் அறக்கட்டளை சார்பில் மருத்துவ முகாம் கோவை.ஜூன்.26 நல்லறம் அறக்கட்டளை சார்பில் ஹோமியோபதி மருந்து மற்றும் கபசுர குடிநீர் வழங்கும் நிகழ்ச்சி கோவையில் இன்று நடைபெற்றது. கொரோனா வைரஸ் அச்சுறுத்தலில் இருந்த கோவை மெல்ல மெல்ல அதில் இருந்து மீண்டது. ஆனால், ஜூன் முதல் வாரத்தில் இருந்து வெளியூரில் இருந்து கோவை வரும் நபர்கள் மூலமாக கோவையில் கொரோனா வைரஸ் பரவல் அதிகரித்து வருகிறது. நேற்று மட்டும் கோவையில் 29 பேருக்கு கொரோனா வைரஸ் உறுதி செய்யப்பட்டது. இந்த வைரசுக்கு இன்னும் முறையான மருந்து கண்டுபிடிக்கப்படாத நிலையில் கபசுர குடி நீரை அருந்த தமிழக அரசு பரிந்துரைத்துள்ளது. அதன்படி, கோவை குனியமுத்தூரில் உள்ள அறம் வளர்த்த மாரியம்மன் கோயில் அருகே நல்லறம் அறக்கட்டளை சார்பில் கபசுர குடி நீர் மற்றும் ஹோமியோபதி மருந்து வழங்கும் முகாம் இன்று…

Read More

நல்லறம் அறக்கட்டளை சார்பில் கொரனா விழிப்புணர்வு நாடகம்

நல்லறம் அறக்கட்டளை சார்பில் கொரனா விழிப்புணர்வு நாடகம் கோவை. ஜூன். 14- கோவையில் சிறப்புடன் செயல்பட்டு வருவது நல்லறம் அறக்கட்டளை ஆகும். இதன் நிறுவனர் எஸ்.பி.அன்பரசன் ஆவார். உலகமெங்கும் கொரனா வைரஸ் ருத்ரதாண்டவம் ஆடி வருகின்றது. இதனை கருத்தில் கொண்டு அ.தி.மு.க.வினர் நிவாரண பொருட்களை வழங்கி வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக குனியமுத்தூரில் தமிழக உள்ளாட்சி த்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணியின் வேண்டுகோளை ஏற்று குனியமுத்தூரில் கொரானா வைரஸ் தடுப்பு நடவடிக்கை முன்னிட்டு பொது மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் படி விழிப்புணர்வு நாடகம் நடைபெற்றது. நல்லறம் அறக்கட்டளையின் தலைவரும் சமூக ஆர்வலர்ரூமான எஸ்.பி.அன்பரசன் கலந்துகொண்டு விழாவினை துவக்கி வைத்தார். குழந்தைகள் கட்டாயம் முககவசம் அணிவது, குழந்தைகள் கைகுலுக்குவதை தடுப்பது, தனிமனித இடைவெளியை கடைப்பிடிப்பதன் பற்றுதலை நடனங்கள் மூலம் வெளிப்படுத்தினார்கள். இந்த விழிப்புணர்வு பிரச்சாரத்தில் 88 ஆவது டிவிசன் செயலாளர்…

Read More