கோவை ஈசா பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா

கோவை ஈசா பொறியியல் கல்லூரியில் பொங்கல் விழா கல்லூரி மாணவ _ மாணவிகள் உற்சாகம். கோவை. ஜனவரி.11- கோவை, பாலக்காடு சாலை, நவக்கரையில் அமைந்துள்ளது ஈசா பொறியியல் கல்லூரி. இக்கல்லூரியில் தமிழர்களின் பாரம்பரிய பண்டிகையான பொங்கல் பண்டிகையை முன்னிட்டு கல்லூரியில் மாணவ மாணவிகள் கிராமிய முறைப்படி பொங்கல் விழா வெகு விமரிசையாக நடைபெற்றது. நிகழ்ச்சியின் தலைமை விருந்தினராக கல்லூரி தலைவர் டி.டி.ஈஸ்வரமூர்த்தி, கல்லூரிசெயலாளர் டி.இ. சுஜாதா ஆகியோர் முன்னிலை வகித்தனர். தமிழக பாரம்பரியத்தை பறைசாற்றும் விதமாக பாரம்பரிய சமத்துவ பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. இதற்காக கல்லூரி வளாகத்தில் மாணவ மாணவியர் வண்ண வண்ண தோரணங்கள் கட்டியும் கோலமிட்டும் கிராமிய மணம் கமழ மண் பானையில் புத்தரிசியிட்டு பொங்கல் வைத்து மகிழ்ந்தனர். மேலும் பாரம்பரிய உடையான பட்டு சேலை அணிந்து கிராமத்து பெண்களை நினைவு கூறும் வகையில் மாணவியர்…

Read More