காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி

காவல்துறையை பெருமைப்படுத்தி படம் எடுத்ததற்காக வெட்கப்படுகிறேன்: இயக்குனர் ஹரி ஞயிறு, 28 ஜூன் 2020 (13:38 IST) காவல்துறையை கம்பீரமாக காண்பிக்கும் படம் என்றதும் அனைவருக்கும் உடனே ஞாபகம் வருவது சாமி மற்றும் சிங்கம் படங்கள் தான். சாமி படத்தின் இரண்டு பாகங்களில் விக்ரமும், சிங்கம் படத்தின் மூன்று பாகங்களில் சூர்யாவும் காவல்துறையை பெருமைப்படுத்தும் வகையில் அபாரமாக நடித்திருப்பார்கள் இந்த நிலையில் காவல்துறையை பெருமைப்படுத்தி 5 படங்கள் இயக்கியதற்கு வெட்கப்படுகிறேன் என இந்த படங்களின் இயக்குநர் ஹரி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. சாத்தான்குளம் விவகாரம் குறித்து ஏற்கனவே பல கோலிவுட் பிரபலங்கள் கருத்து கூறிய நிலையில் தற்போது இதுகுறித்து இயக்குனர் ஹரி அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார் அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது சாத்தான்குளம் சம்பவம் போல் இனி ஒரு கொடூரம் நடந்துவிட கூடாது.…

Read More