ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த எச்.ஏ.எல். நிறுவன ஊழியர் கைது

இந்திய போர் விமானம் குறித்து ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த எச்.ஏ.எல். நிறுவன ஊழியர் கைது இந்திய போர் விமானம் குறித்து, பாகிஸ்தான் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ-க்கு உளவு பார்த்த நபர் ஒருவரை, நாசிக்கில் வைத்து, மகாராஷ்டிர காவல்துறையின் தீவிரவாத தடுப்பு பிரிவினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட நபர் நாசிக்கில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தில் உற்பத்தி பிரிவில் வேலைபார்ப்பவர் என்பது தெரிய வந்துள்ளது. கைது செய்யப்பட்ட நபரிடம் இருந்து 3 மொபைல் போன்களும், 5 சிம்கார்டுகளும், 2 மெமரி கார்டுகளும் பறிமுதல் செய்யப்பட்டு தடயவியல் ஆய்விற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது. அரசு ரகசியங்கள் பாதுகாப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்ட இந்த நபர் 10 நாள் போலீஸ் கஸ்ட டியில் வைக்கப்பட்டுள்ளார்,

Read More