இத்தாலியில் பார்வையாளர்களைக் கவர்ந்த பனி வாத்திய நிகழ்ச்சி

இத்தாலியில் பார்வையாளர்களைக் கவர்ந்த பனி வாத்திய நிகழ்ச்சி இத்தாலியில் நடந்த பனிவாத்திய நிகழ்ச்சி பார்வையாளர்களை வெகுவாகக் கவர்ந்தது. சுமார் 10 ஆயிரம் கன மீட்டர் பனியால் உருவாக்கப்பட்ட குகையில் 300 பேர் வரை நிகழ்ச்சிகளை ரசித்தனர். பிரத்யேக உடையணிந்த பார்வையாளர்கள் மற்றும் இசைக் கலைஞர்கள் இந்த நிகழ்ச்சியில் பங்கேற்றனர். பனியால் செய்யப்பட்ட வயலின், கிடார் மற்றும் டிரம்ஸ் போன்ற கருவிகளை இசைத்து பார்வையாளர்களுக்கு பரவசத்தை உண்டாக்கினர். இந்தக் குகையை 9 ஆயிரம் மணி நேரம் செலவழித்து மைனஸ் 32 டிகிரி பாரன்ஹீட்ம வெப்பநிலையில் வைத்திருந்தது சவாலான விஷயமாக இருந்ததாக இதனை உருவாக்கியவர்கள் தெரிவித்துள்ளனர்  

Read More