ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார்

ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் சாலையோர வியாபாரிகளுக்கு நிவாரண பொருட்கள் வழங்கினார் தற்பொழுது கொரோனா தொற்று ஊரடங்கு உத்தரவினால் பல்வேறு தொழிலாளர்களுக்கும் அனைத்து தரப்பினருக்கும் வாழ்வாதாரம் பாதிப்பு ஏற்பட்டு உள்ளது. இந்த நிலையில் தேனி மாவட்டம் ஆண்டிபட்டி வட்டம் ஆண்டிபட்டியில் பேரூராட்சிக்குட்பட்ட பகுதிகளில் சாலையோர பகுதிகளில் கடைகள் அமைத்திருக்கும் வியாபாரிகளுக்கு வாழ்வாதரத்தினை போக்கும் விதமாக ஆண்டிபட்டி சட்டமன்ற உறுப்பினர் மகாராஜன் அவர்கள் வேல்மணி வணிகவளாகம் முன்பாக நூற்றுக்கும் மேற்பட்டவர்களுக்கு அரிசி பருப்பு மற்றும் மளிகை பொருட்கள் அடங்கிய நிவாரண பொருட்களை சாலையோர வியாபாரிகள் அனைவருக்கும் வழங்கியும் கொரோனா பரவாமல் இருப்பதற்கு இரண்டு முக கவசங்களையும் வழங்கினார். மேலும் இந்த நிகழ்ச்சியில் திமுக மாவட்ட துணைச் செயலாளர் ராஜாராம் மாவட்ட கவுன்சிலர் வளர்மதி மகாராஜன் மாவட்ட நெசவாளர் அணி ராமசாமி மற்றும் கழக நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

Read More