KOMIN WINS BRONZE PRIZE for INDIA

KOMIN Natural Mineral Water has won the ‘Bronze Award in the Still Natural Mineral Water Category’ in the International water-tasting competition held in Guangzhou, China. ‘KOMIN Natural Mineral Water’ is the proud product of Sankeshwar Ventures Pvt. Ltd., a leading brand in the field of bottled mineral drinking water. China (Guangzhou) International High-end Drinking Water Industry Expo (WaterExpo) aims to promote the healthy development of the High-end drinking water industry, to advocate the High-end drinking water culture and to cultivate the High-end drinking water brand in the exchanges and cooperation…

Read More

Prawolion Eventz launche

Prawolion Eventz launched on 28th July 2019 Prawolion Eventz Chennai’s newest event management company founded by Prabhakaran PC was launched on 28th July 2019. The launch party saw Chennai’s biggest faces and socialites grace the occasion and congratulate Prabhakaran on the launch. The launch of Prawolion Eventz also coincided with the launch of the Chennai’s largest fashion event- Chennai Fashion Week by ace Fashion Designer Karun Raman and Prabhakaran PC. Chennai Fashion Week brings together leading fashion designers and models across India under one roof providing a dynamic platform of…

Read More

120 surveillance camera to prevent crime in Sundarapuram

சுந்தராபுரத்தில் குற்ற சம்பவங்களை தடுக்க 120 கண்காணிப்பு கேமிரா மாநகர போலீஸ் கமிஷ்னர் சுமித்சரண் துவக்கி வைத்தார் கோவை, ஜூலை 25- கோவை சுந்தராபுரத்தில் மாநகர போலீஸின் மூன்றாம் கண் திட்டத்தில் பொருத்தப்பட்ட 120 கண்காணிப்பு கேமிராக்களின் கட்டுப்பாட்டு அறையினை மாநகர போலீஸ் கமிஷ்னர் சுமித்சரண் திறந்து வைத்தார். கோவை சுந்தராபுரத்தில் வணிகர்கள், அரிமா, ரோட்டரி சங்கங்கள், பொதுமக்கள் சார்பில் 120 கண்காணிப்பு கேமிராக்கள், கோவை, பொள்ளாச்சி, மதுக்கரை, போத்தனூர் ஆகிய சாலைகளில் பொருத்தப்பட்டு, அதன் துவக்க விழா நிகழ்ச்சி, சாரதா மில் சாலையில் நடைபெற்றது. இதில், மாநகர போலீஸ் கமிஷ்னர் சுமித்சரண் தலைமையில் அனைத்து கேமிராக்கள் கட்டுப்பாட்டு அறையுடன் இணைக்கப்பட்டது. முன்னதாக அவர் கேமிராக்கள் கண்காணிக்கும் புறநகர் காவல்நிலையத்தினை ரிப்பன் வெட்டி திறந்து வைத்தார். மேலும், கமிஷ்னர் தொடர்ந்து கண்காணிக்கும் வகையில், இணையதளம் மூலமும் இணைக்கப்பட்டது.…

Read More

The manager of the petition has been arrested

இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு அளிக்க வந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகி கைது கோவை,ஜுலை.26 கோவையில் இலவச மடிக்கணினி வழங்க கோரி மனு அளிக்க வந்த மாணவர்களுக்கு ஆதரவாக வந்த இந்திய மாணவர் சங்க நிர்வாகியை காவல் துறையினர் தரதரவென இழுத்து சென்று தாக்கி கைது செய்தனர். கோவை டவுன்ஹால் பகுதியில் உள்ள சிஎஸ்ஐ ஆண்கள் மேல்நிலைப்பள்ளி மாணவர்களுக்கு இலவச மடிக்கணினி வழங்கப்படவில்லை. இந்நிலையில் இலவச மடிக்கணினி வழங்க கோரி,100 க்கும் மேற்பட்ட அப்பள்ளி மாணவர்கள் கோவை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்திற்கு மனு அளிக்க வந்தனர். அப்போது, மாணவர்களுக்கு ஆதரவாக இந்திய மாணவர் சங்கத்தின் மாவட்ட தலைவர் தினேஷ் ராஜா வந்தார். மாணவர்களிடம் தினேஷ் பேசிக்கொண்டிருக்கும் போது,பேச விடாமல் காவல் துறையினர் தடுத்ததால் வாக்குவாதம் ஏற்பட்டது. இதையடுத்து தினேஷினை காவல் துறையினர் தரதரவென இழுத்து…

Read More

Reel in the audio file of the reel

ரீல் படத்தின் ஆடியோ கோவையில் ரிலீஸ் !!! கோவை,ஜுலை.26 புதுமுகங்கள் நடிப்பில் உருவாகியுள்ள ரீல் படத்தின் ஆடியோ கோவையில் வெளியிடப்பட்டது. சின்ன கோடம்பாக்கம் என்று அழைக்கப்படும் கோவையில் முழுவதுமாக எடுக்கப்பட்ட திரைப்படம் ரீல்.கிராமம் மற்றும் நகர பின்னணியை கொண்டு உருவாகியுள்ள இப்படத்தில் புதுமுகங்கள் உதய் ராஜ், அவந்திகா மற்றும் கலக்கபோவது யாரு சரத் உள்ளிட்டோர் நடித்துள்ளனர். இப்படத்தின் ஆடியோ வெளியீட்டு விழா கோவையில் உள்ள தனியார் அரங்கில் நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் இப்படத்தின் பாடல்கள் மற்றும் ட்ரைலர் வெளியிடப்பட்டன. இதை தொடர்ந்து இப்படத்தின் ஆடியோ வெளியிடப்பட்டது. இதை தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய படத்தின் தயாரிப்பாளர் கேப்டன் மேத்யூஸ், புதுமையான கதைகளத்தை கொண்டு உருவாகியுள்ள இப்படம் நிச்சயம் வெற்றி பெறும் தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில் கே.ஜி நிறுவனத்தின் நிறுவனர் பக்தவக்சலம் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்

Read More

On behalf of the Rajini People’s Forum Sample rocket recipe training

ரஜினி மக்கள் மன்றம் சார்பில் மாதிரி ராக்கெட் செய்முறை பயிற்சி கோவை, ஜுலை.25- கோவை மாவட்ட ரஜினி மக்கள் மன்றம் சார்பில் நீலிக்கோணம்பாளையம், கிருஷ்ணாபுரம் பகுதியில் உள்ள ஊராட்சி ஒன்றிய நடுநிலைப் பள்ளியில் மாதிரி ராக்கெட் செய்முறை பயிற்சி நடத்தப்பட்டது. அரசு பள்ளி மாணவர்களிடையே விஞ்ஞானம் குறித்த ஆர்வம் உருவாக்கும் நோக்கத்தோடு மாதிரி ராக்கெட் பயிற்சி வகுப்பை ரஜினி மக்கள் மன்றத்தினர் நடத்தினர். பயிற்சி பற்றி முகாம் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த ரஜினி மக்கள் மன்றத்தின் மாவட்ட நிர்வாகி மெட்டலார்ஜிக்கல் ஜி.செந்தில்குமார் பேசும்போது, நாங்கள் இளம் விஞ்ஞானிகளை உருவாக்கும் நோக்கில் இவ்வாறு செயல்பட்டு வருகின்றோம். தற்போது அரசுப் பள்ளிகளின் தரம் உயர்ந்து கொண்டு செல்கிறது. முதன் முறையாக சென்ற வருடம் நாங்கள் ஈச்சனாரி கணேசபுரம் அரசுப் பள்ளியில் துவங்கினோம். இந்த வருடம் இந்த பள்ளியில் 2&ம் ஆண்டு துவக்கியுள்ளோம்.…

Read More

Countamani’s daughter is heartbroken

நெஞ்சை நெகிழ வைக்கும் கவுண்டமணி மகள்… இதுவரை சிக்காத புகைப்படம் உள்ளே..!பொதுவாக கவுண்டமணி தனது குடும்பத்தை பற்றியோ வாரிசுகளின் புகைப்படங்களையோ வெளியுலகத்திற்கு காட்டியது இல்லை. அது ஒருபுறமிருக்கட்டும். சென்னை அடையாறு அரசு புற்று நோய் காப்பகத்தில் சிகிச்சை பெற்று வரும் ஆதரவற்ற முதியவர்கள் மற்றும் சிறு குழந்தைகளுக்கு ஒரு தம்பதி ஒவ்வொரு மாதமும் உதவி வருகிறது. இதுவரை அவர்கள் யார் என்கிற விபரம் காப்பகத்தில் உள்ளவர்களுக்கு தெரியாது.இப்போது அவர்கள் யார் அவர்கள் என்பது தெரிய வந்து காப்பகத்தில் இருப்பவர்களே நெகிழ்ந்து விட்டனர். பாதிக்கப்பட்ட நோயாளிகளுக்கு உதவுவது நடிகர் கவுண்டமணியின் மகள் மற்றும் மருமகன். கவுண்டமணி மகள் சுமித்ரா, அவரது கணவர் வெங்கடாசலம். ஆகிய இருவரும் எந்தவித பிரதிபலனும் எதிர்பார்க்காமல் அவர்களுக்கு உதவி வந்திருக்கிறார்கள். இத்தனை நாட்களாக உதவியது கவுண்டமணி மகளா என வியந்து விட்டனர். எம் ராமச்சந்திரன்…

Read More

It has been raining for the past few days in the settlement area

குடியாத்தம்: வேலூர் மாவட்டம், குடியாத்தம் பகுதியில் கடந்த சில தினங்களாக மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் இரவு 16 மி.மீ மழை பதிவானது. இந்நிலையில், குடியாத்தம் வனப்பகுதிக்கு உட்பட்ட பைலகுண்டா பகுதியில் இருந்து கொண்டபல்லி குடியிருப்பு பகுதியில் திடீரென 8 யானைகள் நுழைய முயன்றது. அப்போது, அப்பகுதியில் ரோந்து பணியில் இருந்த குடியாத்தம் வனத்துறையினர் யானைகளை பட்டாசு வெடித்தும், மேளம் அடித்தும் விரட்டும் முயற்சியில் ஈடுபட்டனர். தொடர்ந்து, 3 மணி நேர போராட்டத்திற்கு பிறகு யானைகளை மீண்டும் காட்டுக்குள் விரட்டி அடித்தனர்.இச்சம்பவம் அப்பகுதியில் பெரும் பரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதேபோல், கடந்த 23ம் தேதி இரவு திருப்பத்தூர் அடுத்த ஜவ்வாதுமலை புங்கம்பட்டு நாடு பகுதியில் கொத்தூர் என்ற கிராமத்தில் நுழைந்து வீடு, வாழைத் தோட்டத்தை சேதப்படுத்திய ஒற்றைக்கொம்பன் யானையை வனத்துறையினர் நேற்று வசந்தபுரம் காப்புக்காட்டுக்குள் விரட்டினர்.

Read More

Water opening from Karnataka dams

பென்னாகரம்: கர்நாடக அணைகளில் இருந்து தண்ணீர் திறப்பு காரணமாக, ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து 8,000 கனஅடியாக அதிகரித்துள்ளது. இதை தொடர்ந்து மேட்டூர் அணை நீர்மட்டம் உயரத் தொடங்கியுள்ளது. கர்நாடக மாநிலத்தில், காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை பெய்து வருவதால், அங்குள்ள கபினி, கிருஷ்ணராஜசாகர் அணைகளுக்கு நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதையடுத்து, அந்த அணைகளில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கனஅடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. இந்த தண்ணீர், தமிழக எல்லையான பிலிகுண்டுலு வழியாக, ஒகேனக்கல்லுக்கு வருகிறது. நேற்று முன்தினம் காலை நிலவரப்படி, விநாடிக்கு 7,500 கனஅடியாக இருந்த நீர்வரத்து நேற்று காலை, விநாடிக்கு 8,000 கனஅடியாக அதிகரித்தது. இதையடுத்து சுற்றுலா பயணிகளின் பாதுகாப்பை கருதி, ஒகேனக்கல்லில் பரிசல் இயக்க நேற்று 3வது நாளாக தடை நீடித்தது. இதேபோல், மேட்டூர் அணைக்கு கடந்த 23ம் தேதி விநாடிக்கு 7,000 கனஅடியாக நீர்வரத்து…

Read More

Silver falls due to continuous rain in Kodaikanal

கொடைக்கானல்: கொடைக்கானலில் தொடர் மழையால் வெள்ளி நீர்வீழ்ச்சி அருவியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மலைகளின் இளவரசியான திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானலில் கடந்த 2 நாட்களாக தொடர்ந்து மழை பெய்து வருகிறது. நேற்று முன்தினம் மட்டும் கொடைக்கானல் போட் கிளப்பில் 16 மி.மீ மழை பதிவாகி உள்ளது. நேற்றும் 3 மணி நேரம் மழை வெளுத்து வாங்கியது. பகல் 12.30 மணியளவில் துவங்கிய சாரல் மழை பின்னர் வலுவடைந்து இடியுடன் கூடிய மழை பெய்தது. தொடர் மழை காரணமாக கொடைக்கானலில் உள்ள வெள்ளி நீர்வீழ்ச்சி உள்ளிட்ட அருவிகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மேலும் கொடைக்கானலின் குடிநீர் ஆதாரமான மனோரத்தினம் சோலை அணை மற்றும் நீர்நிலைகளில் நீர்மட்டம் உயர்ந்து வருகிறது. மேலும் நகரின் மையத்தில் உள்ள நட்சத்திர ஏரியும் வேகமாக நிரம்பி வருகிறது. இதனால் விவசாயிகள், பொதுமக்கள் மகிழ்ச்சியடைந்துள்ளனர்.

Read More