திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் தொகுதியில் திராவிட முன்னேற்ற கழகம் சார்பாக கட்சியின் உறுப்பினர் சேர்க்கை நடைபெற்றது. தாராபுரம் தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள மாற்றுக் கட்சிகளை சேர்ந்த தொண்டர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்திற்கு இணைவதை கட்சிகளின் செயல்பாடு களில் ஒரு பகுதியாக தாராபுரம் அண்ணா சிலையில் ஒரு நிகழ்ச்சியாக திமுக ஏற்பாடு செய்திருந்தது. திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவரான ஸ்டாலின் அவர்களின் செயல் திட்டங்களின் ஒரு பகுதியான “எல்லோரும்நம்முடன் இணையுங்கள்” என்ற வாசகத்தின் அடிப்படையில் இணைய வழியில் உறுப்பினர் சேர்க்கை நடைபெறுகிறது இதில் தாராபுரம் விழுதுகள் அறக்கட்டளையின் நிறுவனர் வீரமணி அவர்கள் திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைந்தார் அவரை தொடங்கும் 200க்கும் மேற்பட்ட பிற கட்சிகளில் இருந்து உறுப்பினர்கள் தங்களை திமுகவில்இணைத்துக் கொண்டதாக திமுகவினர் தெரிவித்தனர். இந்த நிகழ்ச்சியானது திமுகவின் தாராபுரம் நகரச் செயலாளரான…

Read More

பொதுமக்களின் குறைகளை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை

பொதுமக்கள் நலன் கருதி, பொதுமக்களின் குறைகளை உயர் அதிகாரிகள் நேரடியாக விசாரணை மேற்கொண்டு தீர்வுகாணும் வகையில், பொதுமக்களுக்கும் காவல்துறையினருக்கும் நல்ல நட்புறவு ஏற்படும் வகையில் தமிழ்நாடு சட்டம் ஒழுங்கு கூடுதல் இயக்குனர் ராஜேஷ்தாஸ் இ.கா.ப. உத்தரவின் பேரில் திருப்பூர் மாநகர காவல் ஆணையர் க.கார்த்திகேயன்.இ.கா.ப., தலைமையில் காவல் துணை ஆணையர், (சட்டம் & ஒழுங்கு) க.சுரேஷ்குமார், மேற்பார்வையில் பொதுமக்கள் குறை தீர்க்கும் சிறப்பு முகாம் வலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்திலும், மங்கலம் சாலையில் உள்ள பேரடைஸ் ஹாலிலும் நடைபெற்றது. வலையங்காட்டில் உள்ள சுப்பராயகவுண்டர் திருமண மண்டபத்தில் வடக்கு சரகத்தில் உள்ள வடக்கு காவல் நிலையம், அனுப்பர்பாளையம் காவல் நிலையம், 15 வேலம்பாளையம் காவல் நிலையம், திருமுருகன்பூண்டி காவல் நிலையம், மற்றும் வடக்கு அனைத்து மகளிர் காவல் நிலையங்களில் 80 புகார் மனுக்கள் தொடர்பாக மனுதாரர்களும், எதிர்மனுதாரர்களும்…

Read More

பாபரி மஸ்ஜிதின் அநியாயத் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம்

  திருப்பூர் தெற்கு மாவட்டம் தாராபுரம் நகரத்திற்கு உட்பட்ட அலங்கியம் கிளையில் பாபரி மஸ்ஜிதின் அநியாயத் தீர்ப்பை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது நகர தலைவர் சாதிக் பாட்சா அவர்கள் தலைமையில் நடந்த கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு கண்டன உரை இரா முருகானந்தம் செய்தித் தொடர்பாளர் இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் சிதம்பரம் அவர்கள் திராவிடர் கழகம் மற்றும் தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகத்தின் தலைமை கழக பேச்சாளர் ரெக்ஸ் ரபீக் அவர்கள் கண்டன உரையாற்றினார்கள் மடத்துக்குளம் கடத்துார் உடுமலை பேட்டை தாராபுரம் மற்றும் கிளை கழக நிர்வாகிகள் திரளாக கலந்து கொண்டனர்,

Read More

தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம்

    திருப்பூர் மாவட்டத்தில் உள்ள கண்ணிபிரான் காலனியில் நட்சத்திர ஹோட்டலில் தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சிப் பள்ளி கூட்டமைப்பின் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது. IDTR எனப்படும் ஓட்டுனர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவன மானது மிகப்பெரிய அளவில் திருவண்ணாமலை மாவட்டத்தில் உள்ள புதூர் என்னும் இடத்தில் 33 ஏக்கர் பரப்பளவில் மிகப்பெரிய அளவில் இதற்கான கட்டமைப்பு வசதிகளை ஏற்படுத்தும் செயல்பாடுகள் ஆனது தமிழக அரசின் ஒத்துழைப்போடு தற்போது தொடங்கப்பட்டுள்ளது என்றும் இந்த ஓட்டுனர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனமானது ஓட்டுனர் பயிற்சி பள்ளி வைத்துள்ள உரிமையாளர்களின் வாழ்வாதாரம் ஆனது கணிசமான முறையில் உயரக்கூடும் என்று தென்னிந்திய ஓட்டுனர் பயிற்சி பள்ளியின் கூட்டமைப்பின் தலைவரான சண்முகம் அவர்கள் தெரிவித்தார். மேலும்ஓட்டுனர் பயிற்சி பள்ளிகளை புதிதாக துவங்க இருக்கும் உரிமையாளர்களுக்கும் இந்த ஓட்டுனர் பயிற்சி ஆராய்ச்சி நிறுவனமானது மிகப்பெரிய அளவில் ஒத்துழைப்பு அளிக்கும்.…

Read More