தாராபுரம் அலங்கியம் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல்

  தாராபுரம் அலங்கியம் குடிநீர் கோரி பொதுமக்கள் சாலை மறியல் திருப்பூர். ஆகஸ்ட் 11- திருப்பூர் மாவட்டம் அலங்கியம் சாலையில் பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டதால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது. தாராபுரம் எஸ்.பி.நகர் பகுதியில் ஒரு மாதமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி பெண்கள் பலர் திரண்டு வந்து காலிக்குடங்களுடன் தாராபுரம் அலங்கியம் சாலையில் அடிப்படை வசதி கோரியும், குடிநீர் சரியாக வராத காரணத்தாலும் 40 க்கும் மேற்பட்ட பெண்கள் காலிகுடங்களுடன் சாலை மறியலில் ஈடுபட்டனர். குடிநீர் செல்லும் மெயின் குழாய்களில் பல இடங்களில் உடைப்பட்டதால், அதில் இருந்து தண்ணீர் வீணாக வெளியேறி வருகிறது. இதுகுறித்து கூட்டுக்குடிநீர் திட்ட அதிகாரிகளுக்கு பல முறை புகார்கள் தெரிவித்தும், அவர்கள் எந்த நடவடிக்கைகளும் எடுக்கவில்லை. மேலும் எஸ்.பி.நகர் பகுதியில் ஒரு மாதமாக சரியாக குடிநீர் வினியோகம் செய்யப்படவில்லை எனக்கூறி…

Read More