Corona வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன

கடந்த ஆறு மாத காலமாக Corona வைரஸ் தடுப்பு மற்றும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக மத்திய மாநில அரசுகள் பல்வேறு தடைகளை விதித்துள்ளன இதன் காரணமாக அன்றாடம் பிழைப்பு நடத்துபவர்களின் குடும்பங்கள் ஏழை எளிய பொதுமக்கள் மிகவும் பாதிப்புக்குள்ளாகி உள்ளனர் இதனுடைய தாக்கம் உயிரை மாய்த்துக் கொள்ளும் அளவிற்கு சென்றுள்ளது புதுக்கோட்டை நகர்புறத்தில் கடந்த மாதம் ஆட்டோ ஓட்டுனர் தன்னுடைய வாழ்வாதாரத்தை இழந்த நிலையில் தான் பணிபுரிகின்ற அதே இடத்தில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார் இந்த வடு மறைவதற்குல் புதுக்கோட்டை மச்சுவாடி சிவானந்த நகர் இரண்டாம் வீதியை சேர்ந்த பூக்கடை தொழிலாளி கோவிந்தன் வருமானம் இல்லாமல் தவித்து வந்துள்ளார் குடும்பத்தை நடத்த முடியாத துர்பாக்கிய நிலைக்கு சென்ற காரணத்தினால் புதுக்கோட்டையில் உள்ள பல்லவன் குளத்தில் குதித்து தன் உயிரை மாய்த்துக் கொண்டார் கோவிந்தன் இச்சம்பவம் புதுக்கோட்டை மக்கள்…

Read More

வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு…

வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி அம்மன் கோவில்களில் சிறப்பு வழிபாடு… ஆடி 3 ஆவது வெள்ளிக்கிழமை வரலட்சுமி நோன்பு தினத்தையொட்டி போடி பகுதிகளில் உள்ள அம்மன் கோயில்களில் வளையல் அலங்காரம் செய்து வழிபாடு நடத்தப்பட்டது. பக்தா்கள் அனுமதிக்கப்படவில்லை. வரலட்சுமி நோன்பு தினத்தை முன்னிட்டு போடி சீனிவாசபெருமாள் கோயிலில் உள்ள பத்மாவதி தாயாருக்கு சிறப்பு பூஜைகள் நடத்தப்பட்டன. பல்வேறு வாசனை திரவியங்கள், மங்கலப் பொருள்களால் அபிஷேகம் செய்யப்பட்டது. பின்னா் அம்பாள் தாயாருக்கு ஒரு லட்சத்து எட்டு வளையல்களால் அலங்காரம் செய்யப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. மகா தீபாராதனை நடைபெற்றது. தலைமை அா்ச்சகா் சீனிவாச வரதன் என்ற காா்த்திக் மற்றும் அா்ச்சகா்கள் மட்டும் பங்கேற்றனா். இதேபோல் போடி அருகே பத்திரகாளிபுரம் கிராமத்தில் உள்ள பத்திரகாளியம்மனும் வளையல்களால் அலங்கரிக்கப்பட்டு சிறப்பு பூஜை நடைபெற்றது. கோயில் பூசாரிகள், நிா்வாகிகள் மட்டும் சமூக இடைவெளியுடன் பங்கேற்றனா்.…

Read More

காரமடை ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களுக்கு, நாசிக் கவசம் (Nose Mask) மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் மாத்திரைகள் வழங்கப்பட்டது !

மக்கள் நீதி மய்யத்தின் தலைவர், மாண்புமிகு நம்மவர் அவர்களின் ஆணைக்கிணங்க, கோவை வடக்கு மாவட்டச் செயலாளர் திரு.எம்.தம்புராஜ் அவர்களின் அன்பிற்கிணங்க, மேட்டுப்பாளையம் தொகுதி மக்கள் நீதி மய்யத்தின் சார்பில், மேட்டுப்பாளையம் நகரச் செயலாளர் அ.ரசூல்கான் தலைமையில், இன்று (02.08.2020) காரமடை பேரூராட்சி, காரமடை ஒன்றியப் பகுதிகளில் பொதுமக்களுக்கு, நாசிக் கவசம் (Nose Mask) மற்றும் நோய் எதிர்ப்பாற்றல் மாத்திரைகள் வழங்கப்பட்டது ! இந் நிகழ்வில், காரமடை ஒன்றியச்செயலாளர் ஜி.குழந்தைவேலு, காரமடை பேரூராட்சி செயலாளர் கே.ரங்கசாமி, ஒன்றிய இளைஞர் அணி கே.வீரமணி, பேரூராட்சி கிளைச் செயலாளர்கள் ஆர்.மலரவன், சி.மஞ்சுநாதன், சி.கணேசன், மேட்டுப்பாளையம் நகர நற்பணி இயக்க அணி கே.சோமசுந்தரம், உள்ளிட்ட திரளானோர் கலந்து கொண்டனர்! பொதுமக்களிடம் மக்கள் நீதி மய்யம் கட்சியின் சிறப்புகள் குறித்தும், மக்கள் பிரச்சினைகளுக்காக மக்கள் நீதி மய்யம் தொடர்ந்து குரல் கொடுத்து வருவதைப் பற்றியும்…

Read More

நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி அமைச்சர் எஸ் பி .வேலுமணி தொடங்கி வைத்தார்

நிவாரணப் பொருட்கள் வழங்கும் பணி அமைச்சர் எஸ் பி .வேலுமணி தொடங்கி வைத்தார், புகைப்படம் கோயம்புத்தூர் மாவட்டத்தில் கொரோனா தோற்றால் பாதிக்கப்பட்டு தனிமைப்படுத்தப்பட்ட பகுதிகளில் வசிக்கும் குடும்பங்களுக்கு ரூ. கோடி1 மதிப்பில் அத்தியவசியப் பொருள்கள் வழங்கும் பணியினை கழக அமைப்பு செயலாளரும், கோவை புறநகர் தெற்கு மாவட்ட கழகச் செயலாளரும், நகராட்சி நிர்வாகம், மற்றும் ஊரக வளர்ச்சி மற்றும் சிறப்புத் திட்டங்கள் செயலாக்கத் துறை அமைச்சர் எஸ். பி .வேலுமணி அவர்கள் தொடங்கி வைத்த.அருகில் பகுதி கழக செயலாளர்கள் வி. குணசேகரன், த. மதனகோபால், வார்டு கழக செயலாளர் எஸ் டி .கதிரேசன் தகவல் தொழில்நுட்ப பிரிவு மாவட்ட செயலாளர் ஆர். சசிகுமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

Read More

தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி அவள் வாழ்ந்த இடத்தில் அலங்கரிக்கப்பட்டு

திருப்பூர் மாவட்டம், காங்கயம் வட்டம் மேலப்பாளையத்தில், இன்று (02.08.2020)சுதந்திர போராட்ட வீரர் தீரன் சின்னமலை அவர்களின் நினைவு நாளையொட்டி அவள் வாழ்ந்த இடத்தில் அலங்கரிக்கப்பட்டு வைத்திருந்த திருவுருவ படத்திற்கு மாண்புமிகு கால்நடை பராமரிப்புத்துறை அமைச்சர் திரு உடுமலை கே. ராதாகிருஷ்ணன் அவர்கள் மலர் தூவி மரியாதை செலுத்தினார். அருகில் மாவட்ட ஆட்சித் தலைவர் டாக்டர் கே விஜய கார்த்திகேயன் இ.ஆ.ப. அவர்கள், காங்கயம் சட்டமன்ற உறுப்பினர் திரு உ.தனியரசு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திருமதி திஷா மிட்டல் இ.கா.ப ஆகியோர் உடன் உள்ளனர்..

Read More

முன்விரோதத்தில் கொலை – படகுகள் தீவைப்பு ..!

முன்விரோதத்தில் கொலை – படகுகள் தீவைப்பு ..! கடலூர் மாவட்டத்தில் தேர்தல் முன்விரோதம் காரணமாக முன்னாள் ஊராட்சி மன்றத் தலைவர் தம்பி வெட்டிக் கொலை செய்யப்பட்டதை அடுத்து 25க்கும் மேற்பட்ட படகுகள் தீ வைத்து கொளுத்தப்பட்டன. கடலூர் அடுத்த தாழங்குடா மீனவ கிராமத்தைச் சேர்ந்த முன்னாள் ஊராட்சி மன்ற தலைவர் மாசிலாமணியின் தம்பி மதிவாணன் ஆவார். மாசிலாமணிக்கும், தற்போது ஊராட்சி மன்ற தலைவராக உள்ள மதியழகன் தரப்பினருக்கும இடையே உள்ளாட்சித் தேர்தலுக்கு பிறகு முன்விரோதம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. இந்த நிலையில் நேற்று ஒரு கும்பல் மதிவாணனை வெட்டிக் கொலை செய்து விட்டு தப்பி ஓடிவிட்டது. இதையடுதது கொலை செய்யப்பட்ட மதிவாணனின் ஆதரவாளர்கள் ஆத்திரத்தில் கடற்கரையில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த 25க்கும் மேற்பட்ட படகுகள் மற்றும் மீன்பிடி வலைகளை தீ வைத்து கொளுத்தினர். மேலும் எதிர் தரப்பினரின் வீடுகளில் இருந்த…

Read More

மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொரோனா  தொற்று குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.

கொடைக்கானலில் திண்டுக்கல் மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொரோனா  தொற்று குறித்து பாதிக்கப்பட்ட பகுதிகளில் ஆய்வு மேற்கொண்டார்.  திண்டுக்கல் மாவட்டம் கொடைக்கானலில்  மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி கொடைக்கானலின்  பல்வேறு இடங்களை ஆய்வு மேற்கொண்டார் கொடைக்கானலில் இருநூறுக்கு மேற்பட்டவர்களுக்கு தொற்று  ஏற்பட்டுள்ளதால் கொடைக்கானல் நகர் பகுதியிலும் மற்றும் மேல் மலைப் பகுதிகளிலும் பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றது. இந்நிலையில் கொடைக்கானல் நகராட்சி ஆணையர் நாராயணன் கோட்டாட்சியர் சிவகுமார் வட்டாட்சியர் மற்றும் துணை கண்காணிப்பாளர் ஆத்மநாதன் ஆகியோரும்  மருத்துவ குழுவினரும் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நாளுக்கு நாள் ஆய்வு மேற்கொள்ளப்பட்டு தீவிர கண்காணிப்பு மேற்கொண்டு வந்தனர்  கொடைக்கானலுக்கு வருகை தந்த மாவட்ட ஆட்சித் தலைவர் விஜயலட்சுமி அவர்கள் அண்ணா நகர் பகுதிகளில் மருத்துவ முகாமை தொடங்கி வைத்தார் அதனை தொடர்ந்து தொற்று ஏற்பட்ட  பகுதிகளில்  பரிசோதனை மேற்கொள்ளும்…

Read More