திருடு போன 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு உயர் ரக இருசக்கர வாகனங்கள் மீட்பு

திருடு போன 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு உயர் ரக இருசக்கர வாகனங்கள் மீட்பு திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரத்தில் திருடப்பட்ட சுமார் 3 லட்சம் மதிப்புள்ள இரண்டு இருசக்கர வாகனங்களை ஒட்டன் சத்திரம் போலீசார் மீட்டனர் திண்டுக்கல் மாவட்டம் ஒட்டன்சத்திரம் அருகே உள்ள மூலச்சத்திரம் பகுதியில் கடந்த 14ஆம் தேதி இயற்கை செக்கு எண்ணெய் தயாரிக்கும் தனியார் நிறுவனம் முன்பதாக ஒட்டன்சத்திரம் கம்பளிநாயக்கன்பட்டியை சேர்ந்த பாலச்சந்திரன் (22) த.பெ. முருகேசன் என்பவரது இருசக்கர வாகனம் நிறுத்தப்பட்டு இருந்தது, இந்தநிலையில் வேலை முடிந்து திரும்பி வந்து பார்த்தபோது தனது இருசக்கரம் திருடு போனது கண்டு அதிர்ச்சி அடைந்தார் மேலும் இதுகுறித்து ஒட்டன்சத்திரம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. அதேபோல கடந்த 23 ஆம் தேதி அன்று ஒட்டன்சத்திரம் புது அத்திக்கோம்பை யில் உள்ள சிவகுமார் (26) த.பெ சுப்பிரமணி…

Read More

கையுந்து போட்டி பரிசளிப்பு விழா

கையுந்து போட்டி பரிசளிப்பு விழா கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த சேப்பாக்கம் ஊராட்சியில் கைப்பந்து போட்டி நடைபெற்றது கையுந்து போட்டியில் வெற்றி பெற்ற எம் புதூர் கிராமத்தைச் சேர்ந்த வீரர்களுக்கு முதல் பரிசை ஊராட்சி மன்றத் தலைவர் திருமதி. தெய்வானை தீனதயாளன் அவர்கள் வழங்கினார், இரண்டாம் பரிசை சேப்பாக்கம் அணியினருக்கு ஒன்றிய கவுன்சிலர் ந. ஏழுமலை அவர்கள் வழங்கினார், மூன்றாம் பரிசை உடற்கல்வி ஆசிரியர் பாலமுருகன் அவர்கள் வழங்கினார்.. மேலும் போட்டிகள் அனைத்தையும் உடற்கல்வி ஆசிரியர் திரு. காந்தி அவர்கள் தலைமை தாங்கி நடத்தி வைத்தார். மேலும் ரஞ்சித், சந்திப், உதயநிதி, அஜய், அஜித் ஆகியோர்கள் போட்டி நடத்த ஏற்பாடு செய்தனர் இப்போட்டியில் பல்வேறு கிராமத்தைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள் பங்குபெற்று விளையாடினர்.

Read More

வீர துர்க்கை அம்மன் கோவிலில் 7 அடி நீளமுள்ள பாம்பு

பழனி அடிவாரம் தேவஸ்தானம் அலுவலகம் அருகில் உள்ள வீர துர்க்கை அம்மன் கோவிலில் 7 அடி நீளமுள்ள பாம்பு பிடிப்பட்டது. பாம்பை பிடித்தவர் ஹலோ டெய்லர் நடராஜன். அருகில் கோயில் நிர்வாக அதிகாரிகள் மற்றும் பூசாரியும் உடன் இருந்தார்கள். இவர்கள் இந்த பாம்பை வனத்துறை அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர்.

Read More

பாலத்திற்காக தோண்டபட்ட பாலத்தில் தவறி விழுந்து பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார்.

திண்டுக்கல் மாவட்டம் பழனி அமரபூண்டி to பழைய ஆயக்குடி செல்லும் சாலை நேற்று இரவு ப. ஆயக்குடி 2வது வார்டு சேர்ந்த மங்காண்டிதுரை என்பவர் பாலத்திற்காக தோண்டபட்ட பாலத்தில் தவறி விழுந்து பலத்த காயங்களுடன் உயிர் தப்பினார். ஏற்கனவே கடந்த 12.07.2020 இதே பள்ளத்தில் விழுந்து மாணவன் சதீஷ்குமார் உயிரிழந்தார் எண்பது குறிப்பிடதக்கது. எனவே இன்னும் பல உயிர்களை காவு வாங்க காத்திருக்கும் இந்த பள்ளத்தினை மூடாமல் அரசு மெத்தனம் காட்டுகிறது ……. பொது மக்கள் சார்பில் அரசும் நெடுஞ்சாலை துறையும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டுமெனகேட்டுக்கோள்கிறோம்

Read More

காவல் நிலையத்தில் உதவி ஆணையர் M.S. பாஸ்கர் அவர்களை பக்கிரீத்து பண்டிகையை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்தனர்

தேதி: 01.08.2020 அன்று மதியம் சென்னை ராயப்பேட்டை காவல் நிலையத்தில் உதவி ஆணையர் M.S. பாஸ்கர் அவர்களை பக்கிரீத்து பண்டிகையை முன்னிட்டு மித்ரன் பிரஸ் மீடியா அசோசியேஷன் நிர்வாகிகள் சந்தித்தனர், தலைவர், பொதுச் செயலாளர் V. பாலமுருகன், துணைத் தலைவர் M. அன்பரசன், ஒருங்கிணைப்பாளர் K. ரஷீத், மக்கள் ஊடகம் ஆசிரியர் B. தீபக், தின சங்கு நிருபர் K. பிரிமியர், மக்கள் ஊடகம் நிருபர் குமார், மக்கள் சிந்தனை நிருபர் V. பிரபாகரன் ஆகியோர் கலந்து கொண்டனர் பிறகு உதவி ஆணையாளர் அவர்கள் பத்திரிகையாளர்களுக்கு ஆலோசனை கொடுத்தார் மற்றும் முக கவசம்,ஜின் கோவிட் வைட்டமின்-C மாத்திரைகளும் கொடுத்து சங்க நிர்வாகிகளை வாழ்த்தினார்…

Read More