வேடசந்தூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்த டிஜிபி !!

வேடசந்தூர் பகுதியில் திடீர் ஆய்வு செய்த டிஜிபி !! திண்டுக்கல் மாவட்டம் முழுவதும் கொரோன தொற்று அதிகமாக பரவிவரும் நிலையில் நேற்று திடீர் என்று ஆத்தூர் பகுதியில் ஆய்வு செய்த டிஜிபி முத்துச்சாமி அவர்கள் அங்கு பணியில் இருந்த காவலர்களிடம் பாதுகாப்பாக இருந்து மக்கள்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் தங்கள் பணிகளை செய்ய அறிவுரை வழங்கினார் . #மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் #பொதுச் செயலாளர் வி பாலமுருகன் #Mithran Press

Read More

ஆத்தூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து !!

ஆத்தூர் அருகே பள்ளத்தில் லாரி கவிழ்ந்து விபத்து !! லாரி ஓட்டுனர் உயிர் தப்பினார் . திண்டுக்கல் மாவட்டம் ஆத்தூர் அருகே பாலையங்கோட்டை பிரிவில் திண்டுக்கல்லில் இருந்து தேனி நோக்கி சென்று கொண்டிருந்த லாரியானது ஓட்டுனரின் கட்டுப்பாட்டை இழந்து சாலையோர பள்ளத்தில் கவிழ்ந்தது இதில் அதிஷ்டமாக ஓட்டுனர் உயிர் தப்பினார் .   #மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் #பொதுச் செயலாளர் வி பாலமுருகன் #Mithran Press  

Read More

அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது.

கடலூர் மாவட்டம் வேப்பூர் வட்டம் நகர் கிராமத்தில் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் உள்ளூர் கிரிக்கெட் போட்டி நடைபெற்றது. இப்போட்டியில் வெற்றி பெற்ற லெவன் ஸ்டார் அணியினருக்கு முதல் பரிசை ஓட்டுனர் சி.கருப்பையா வழங்கினார், இரண்டாம் பரிசை கக்கன்ஜி ராக்கர்ஸ் அணியினருக்கு பொன் சோமு மற்றும் மு.வெங்கடேச மூர்த்தி அவர்கள் பரிசு வழங்கினார். உடன் சி.பாண்டியன் ந.ஜெய்சங்கர் க.பரமசிவம் சி.பாக்கியராஜ் கெ.வேல்முருகன் பெ.வெங்கடேசன் ச.மணிகண்டன் ரா.பாலா மற்றும் பலர் அம்பேத்கர் நற்பணி மன்றம் சார்பில் கலந்து கொண்டனர். இப்போட்டியில் அனைவரும் முக கவசம் அணிந்து கொண்டும் சமூக இடைவெளி கடைப்பிடித்தும் விளையாடினார்கள். #மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் #பொதுச் செயலாளர் வி பாலமுருகன் #Mithran Press

Read More

வேப்பூர் அருகே தார்சாலை அமைக்க பூமிபூஜை

வேப்பூர் அருகே தார்சாலை அமைக்க பூமிபூஜை கடலூர் :    நல்லூர் ஒன்றியம் வரம்பனூர் ஊராட்சியில் 35 இலட்சம் ரூபாய் மதிப்பீட்டில் தார் சாலை அமைக்க பூமி பூஜை போடப்பட்டது. நல்லூர் ஒன்றியம் வரம்பனூர்லிருந்து-நாரையூர் வரை 35 லட்சம் மதிப்பில் இரண்டு கிலோமீட்டர் தூரத்திற்கு புதிய தார்சாலை அமைக்கும் பணிக்காக பூமி பூஜை போடப்பட்டது நல்லூர் ஒன்றிய சேர்மன் செல்வி ஆடியபாதம் தலைமை தாங்கி பூமி பூஜை போட்டு பணிகளை துவக்கி வைத்தார்,வரம்பனூர் ஊராட்சிமன்ற தலைவர் செல்வி சாமிதுரை அவர்கள் முன்னிலை வகித்தார். மேலும் நிகழ்ச்சியில் ஒன்றிய கவுன்சிலர் சிவக்குமார், துணைத்தலைவர் முத்துலட்சுமி மணிகண்டன், செயலாளர் செல்ல வேல், வார்டு உறுப்பினர்கள் மற்றும் கிராம பொதுமக்கள் பலர் கலந்து கொண்டனர்.. நிகழ்வில் பங்கேற்ற அனைவரும் முகக்கவசம் அணிந்து சமூக இடைவெளியை பின்பற்றினர்..   #மித்ரன் பிரஸ் – மீடியா…

Read More

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..!

தளர்வுகளற்ற முழு ஊரடங்கு..! தமிழ்நாட்டில், ஜூலை மாதத்தின் ஒவ்வொரு ஞாயிற்றுக்கிழமையிலும், எவ்வித தளர்வுகளும் அற்ற தீவிர முழு ஊரடங்கு கடைபிடிக்கப்படும் என முதலமைச்சர் அறிவித்திருந்தார் இதன்படி பால் விநியோகம், மெடிக்கல்கள், மருத்துவமனைகள் தவிர, மற்ற அனைத்து கடைகளும் அடைக்கப்பட்டிருக்கும் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதன் காரணமாக கடலூர் மாவட்டத்தில் வேப்பூர், மங்களூர், சிறுபாக்கம், நல்லூர் உள்ளிட்ட பகுதிகளில் கடைகள், பெட்ரோல் பங்குகள், மதுக்கடைகள் அடைக்கப்பட்டு பொது மக்களின் ஒத்துழைப்போடு பொது மக்களின் நடமாட்டம் குறைந்து காணப்படுகிறது. அவசர மருத்துவத் தேவைகளுக்கு தவிர, மற்ற தேவைகளுக்காக வீட்டை விட்டு பொதுமக்கள் வெளியில் வர வேண்டாம் என  வேப்பூர் காவல் ஆய்வாளர்  கவிதா அவர்கள் கேட்டுக் கொண்டுள்ளார்.   #மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் #பொதுச் செயலாளர் வி பாலமுருகன் #Mithran Press

Read More

வேப்பூரை மிரட்டும் கொரோனா வைரஸ்

வேப்பூரை மிரட்டும் கொரோனா வைரஸ் உலகையே அச்சுறுத்தி வேகமாக பரவி வரும் உயிர்கொல்லி நோயான கொரோனா வைரஸ் நாளுக்கு நாள் அதிகரித்து வரும் நிலையில் வைரஸ் தொற்று பொதுமக்களிடம் பரவி விடக்கூடாது என்பதற்காக மத்திய மாநில அரசுகள் பல்வேறு கட்டுப்பாடுகளையும் வழிகாட்டு நெறிமுறைகளையும் வழங்கி வருகிறது. இந்நிலையில் கடலூர் மாவட்டம் வேப்பூர் தாலுக்கா அரசு மருத்துவமனையில் பணிபுரியும் அரசு மருத்துவர் ஒருவருக்கு இரு தினங்களுக்கு முன்பு வைரஸ் தொற்றுஉறுதியான நிலையில் தற்போது மீண்டும் அம்மருத்துவமனையில் பணிபுரியும் மருத்துவர் ஒருவருக்கும் மருத்துவமனை ஊழியர் மூவருக்கும் வைரஸ் தொற்று உறுதியானதால் தற்போது பாதிக்கப்பட்ட நான்கு நபர்களையும் தனிமைப்படுத்தி சிகிச்சை அளித்து வருகின்றனர். வேப்பூர் மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் இச்சம்பவத்தினால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது.. #மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் #பொதுச் செயலாளர் வி பாலமுருகன் #Mithran…

Read More

தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்.! கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் NRG வேலையில் சட்டமன்ற உறுப்பினர், மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையிட கூடாது என்றும் தலைவருக்கான வேலையை அந்த அந்த தலைவரே செய்ய வேண்டும் , ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி கடிதம் பெற்று வண்டல் மண் எடுக்க வட்டாச்சியர் அவர்கள் அனுமதி வழங்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிந்துரைக்கும் பயனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும், தொகுப்பு வீடுகள் மற்றும் பசுமை வீடுகள்.மற்றும் PMY வீடுகள் கட்டுவதற்க்கு அரசே மணல் வழங்க வேண்டும், கொரோனா நிதியை  இரண்டு லட்சம் ரூபாய் (200000) உடனே அந்த அந்த ஊராட்சி மன்ற வங்கி கணக்குக்கு  அனுப்ப வேண்டும் என மேற்கண்ட…

Read More

நல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பாக covid-19 விழிப்புணர்வு

  இன்று   கடலூர் மாவட்டம் நல்லூர் வடக்கு ஒன்றியம் சார்பாக covid-19 விழிப்புணர்வு முகாம் நடைபெற்றது முகாமினை வட்டார வளர்ச்சி அலுவலர் காமராஜ் மற்றும் நல்லூர் ஒன்றிய துணைச் சேர்மன் பிகே தங்கராஜன் ஜன் மேரி கலந்துகொண்டு கபசுர குடிநீர் வழங்கினார்கள் முகக் கவசங்கள் வழங்கினார்கள் இந்த நிகழ்ச்சியில்பல பஞ்சாயத்து தலைவர் கலந்து கொண்டார்கள் இந்த நிகழ்ச்சியினை அருமை சகோதரர்மன்னம்பாடி ஈரநிலம் அறக்கட்டளையின் தலைவர்திருவாளர் தமிழரசன் முன்னின்று தொகுத்து வழங்கினார் நன்றி வணக்கம்உங்கள் நண்பன் சிறப்பு நிருபர் பாபுஜி   #மித்ரன் பிரஸ் – மீடியா அசோசியேஷன் #பொதுச் செயலாளர் வி பாலமுருகன் #Mithran Press

Read More

திருப்பூரில் கண்டுபிடிப்பு இந்தியாவிலேயே முதன்முறையாக கிருமிகளை அழிக்கும் மருத்துவ பாதுகாப்பு கவச உடை

திருப்பூரில் கண்டுபிடிப்பு இந்தியாவிலேயே முதன்முறையாக கிருமிகளை அழிக்கும் மருத்துவ பாதுகாப்பு கவச உடை சூலூர். ஜுலை.7 திருப்பூரில் கின்சி நிட் இண்டர்நேஷனல் பின்னலாடை எனும் நிறுவனம் 30 ஆண்டுகளுக்கும் மேலாக செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனம் ஏற்றுமதி மற்றும் பின்னலாடை தொழிலில் திருப்பூரில் முன்னிலை வகிக்கிறது. இது குறித்து இதன் உலகின் பல்வேறு நாடுகளுக்கும் எங்களது தரமான தயாரிப்புகள் ஏற்றுமதி செய்யப்பட்டு வருகிறது. இந்தியாவிலேயே முதன்முறையாக கிருமிகளை அழிக்கும் மருத்துவ பாதுகாப்பு கவச உடையை திருப்பூர் பின்னலாடை நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது.இந்த ஆடையை துவைத்து மீண்டும், மீண்டும் பயன்படுத்தும் வகையில் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இது குறித்து கின்சி நிட் இண்டர்நேஷனல் பின்னலாடை நிறுவனத்தின் நிர்வாக இயக்குனர் எஸ்.பரமசிவம், வர்த்தக பிரிவு இயக்குனர் விக்டர் மணிராஜ் ஆகியோர் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில், கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதில் மருத்துவர்கள் , செவிலியர்கள்…

Read More

ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் கபசுர கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது.

பொன்னமராவதி அருகே மேலைச்சிவபுரியில் ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் பொதுமக்களுக்கு தொடர்ந்து மூன்று நாட்கள் கபசுர கசாயம் வழங்கும் முகாம் நடைபெற்றது. புதுக்கோட்டை மாவட்டம் பொன்னமராவதி ஒன்றியம் மேலைச்சிவபுரி ஊராட்சியில் பொன்னமராவதி ராயல் லயன்ஸ் சங்கம் சார்பில் பொது மக்களுக்கு நோய் எதிர்ப்பு சக்தி அதிகரிக்கவும் கொரோனாவிலிருந்து விடுபடவும் கபசுர கசாயம் வழங்கப்பட்டது. முகாமிற்கு ராயல் லயன்ஸ் சங்கக்தலைவர் ராஜேந்திரன் தலைமை வகித்தார். சங்கச்செயலாளர் ரத்தினம் மற்றும் பொருளாளர் ரமேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் சுற்றுவட்டார பகுதி பொதுமக்கள் சுமார் ஆயிரத்திற்கும் மேற்பட்டோருக்கு கபசுர கசாயம் வழங்கி துவக்கி வைக்கப்பட்டது. முகமானது தொடர்ந்து மூன்று நாட்கள் நடைபெறுகின்றது. இதில் வட்டாட்சியர் திருநாவுக்கரசு, மேலைச்சிவபுரி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தின் சித்த மருத்துவர் சொர்ண சுகந்தி, வர்த்தகர் சங்கத் தலைவர் பழனியப்பன், கிராம நிர்வாக அலுவலர் ஆரோக்கியராஜ்,…

Read More