திருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார்

திருப்பூர் மாநகர் பகுதியில் புதிய காவல் ஆணையர் கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றார் .திருப்பூர் மாநகர் பகுதியில் மதநல்லிணக்கத்தை பேணுவதற்கும் குற்றச்செயல்களை குறைப்பதற்கும் நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் கூறியுள்ளார் . திருப்பூர் மாநகர் பகுதியின் புதிய காவல் ஆணையராக கார்த்திகேயன் இன்று பொறுப்பேற்றுகொண்டார் .இதற்கு முன்பாக திருப்பூர் மாநகர காவல் ஆணையராக இருந்த சஞ்சய்க்குமார் பணி மாறுதல் ஆகி வேறு பகுதிக்கு சென்றுள்ளார் .புதிய ஆணையர் கார்த்திகேயன் இதற்கு முன்பாக கோவை சரக டிஐஜி ஆக இருந்தார் .தற்போது ஐஜி ஆக பதவி உயர்வு பெற்று திருப்பூர் மாநகர் பகுதியின் புதிய காவல் ஆணையராக பொறுப்பேற்றுக் கொண்டார் .இதுவரை அவிநாசி பகுதி டிஎஸ்பி ஆகவும் ஒருங்கிணைந்த கோவை மாவட்டத்தின் எஸ்பி பதவியையும் வகித்து வந்த கார்த்திகேயன் தற்பொழுது காவல் ஆணையராக பதவி ஏற்றுள்ளார் . பதவியேற்ற பிறகு…

Read More

குப்பைமேடாக காட்சி அளிக்கும் மயூரநதி..!

குப்பைமேடாக காட்சி அளிக்கும் மயூரநதி..! கடலூர் மாவட்டம் வேப்பூர் அடுத்த நல்லூரில் மிகவும் பிரசித்தி பெற்ற ஸ்ரீ வில்வனேஸ்வரர் திருக்கோவில் உள்ளது இவ்வூருக்கு தனி சிறப்பு தருவது மூன்று நதிகள் ஆலயத்திற்கு வடபுறம் மணிமுத்தாறு, கோமுகி நதியும் கிழக்கு நோக்கிப் பாய்கிறது ஆலயத்திற்கு முன்புறம் மயூரநதி கிழக்கு நோக்கி பாய்ந்து ஆலயத்தின் முன்பாக இவை மூன்றும் கூடிடும் சிறப்பு கொண்ட தளம் ஆகும். ஆற்றில் போட்டாலும் அளந்து போடு என்பார்கள் ஆனால் இங்கோ அளவுக்கு அதிகமாக ஊராட்சிகளில் இருந்து சேகரிக்கப்படும் குப்பைகள் கொட்டப்பட்டு வருகிறது. தற்போது கோவிலுக்கு முன்பு உள்ள மயூரநதி   ஆக்கிரமிப்புகளாலும், ஊராட்சியில் இருந்து சேகரிக்கப்படும் கழிவுகளாலும் அதன் முழு பொலிவை இழந்து வருகிறது. இதனால் இக்கோயிலுக்கு முன்பு உள்ள வரலாற்று சிறப்புமிக்க இந்த ஆற்றின் இருபுறங்களிலும் கழிவுகள் மற்றும் குப்பைகள் சூழ்ந்து காணப்படுவதால் அப்பகுதிக்கு…

Read More

ஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம்

உத்தமபாளையத்தில் ஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடி பணிகள் தொடக்கம் உத்தமபாளையம்: தேனி மாவட்டம் கூடலூர், கம்பம் ,உத்தமபாளையம், சின்னமனூர், சீலையம்பட்டி, கோட்டூர், வீரபாண்டி வரையில் 14, 707 ஏக்கர் பரப்பளவில் இருபோக நெற்பயிர் விவசாயம் நடைபெறும். இதற்கு முல்லை பெரியாறு பாசன நீரை முக்கிய நீர் ஆதாரம் ஆகும். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை தீவிரம் ஆகாத நிலையில் முல்லைப் பெரியாறு அணைக்கு நீர்வரத்து குறைந்து பாசனத்திற்கு தண்ணீர் திறக்க முடியாத சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இதனையடுத்து உத்தமபாளையம் சின்னமனூர் பகுதியிலுள்ள சில விவசாயிகள் ஆழ்துளை கிணறு மூலமாக முதல் போக நெல் சாகுபடிக்கான பணியை துவங்கியுள்ளனர். முதல் கட்டமாக நாற்றங்கால் அமைத்து வருகின்றனர். அதனைத்தொடர்ந்து நடவுக்கு தேவையான நிலத்தை சீர்படுத்தும் பணிகளை செய்கின்றனர். ஆனால் முறைப் பாசனம் செய்யும் பெரும்பான்மையான விவசாயிகள் பருவ மழையை எதிர்பார்த்து…

Read More

புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் அறிவிப்பு

புதுக்கோட்டை மாவட்டத்தில் 4 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை மாலை 5 மணி வரை மட்டுமே கடைகளை திறக்க முடிவு மளிகை உள்ளிட்ட அத்தியாவசிய பொருட்கள் கடைகள் காலை 6 மணி முதல் மாலை 5 மணி வரை கடைகளை திறந்து இருக்கும் என்றும் மற்ற வணிக கடைகள் காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மட்டுமே செயல்படும்…… புதுக்கோட்டை மாவட்ட வர்த்தக கழகம் அறிவிப்பு

Read More

அரசு அனைத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம்

வந்தவாசி மற்றும் தெள்ளாறில், அரசு அனைத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோரி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் தேசிய எதிர்ப்பு தின ஆர்ப்பாட்டம் திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசி மற்றும் தெள்ளாறில், அரசு அனைத்து துறையில் உள்ள காலிப் பணியிடங்களையும் நிரப்ப கோருவது உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க மாவட்ட செயலாளர் பிரபு தலைமையில் நடைபெற்றது. புதிய ஓய்வூதியத் திட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.ஊழியர்களின் ஓய்வுபெறும் வயது உயர்த்தப்பட்டதை திரும்ப பெறவேண்டும்.புதிய வேலை நியமன தடைச்சட்டத்தை ரத்து செய்ய வேண்டும்.கொரோனோ தடுப்பு மற்றும் சேவைப் பணியில் ஈடுபட்டு மரணம் அடைந்தவர்களுக்கு ஏற்கனவே அரசு அறிவித்தபடி 50 இலட்ச ரூபாயும்,குடும்பத்தில் ஒருவருக்கு அரசுப்பணியும் வழங்க வேண்டும் உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் முழக்கங்கள் எழுப்பப்பட்டன. நிர்வாகிகள் புருஷோத் கார்த்திகேயன் தெள்ளார் வட்டார வளர்ச்சி…

Read More

செய்யாறு அருகே வாழ்குடை,செங்காடு,கொருக்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன்

செய்யாறு அருகே வாழ்குடை,செங்காடு,கொருக்கை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் மகளிர் குழுக்களுக்கு 1கோடியே 31 இலட்சத்து 70 ஆயிரம் கடன் உதவி- செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் வழங்கினார் . திருவண்ணாமலை மாவட்டம், செய்யாறு அடுத்த வாழ்குடை, கொருக்கை, செங்காடு தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கங்கள் சார்பாக மகளிர் குழுக்களுக்கு கடன் உதவி வழங்கும் நிகழ்ச்சி செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் தலைமையில் நடைபெற்றது. இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்ட செய்யாறு சட்டமன்ற உறுப்பினர் தூசி மோகன் , வி.எல்.தனி வாழ்குடை தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்கம் சார்பில் கோவிட் கடனுதவியாக 17 குழுக்களை சேர்ந்த 213 நபர்களுக்கு 10 இலட்சத்து 65 ஆயிரமும், நேரடி கடனாக 17குழுக்களை சேர்ந்த 208நபர்களுக்கு 85 இலட்சமும், வி.எல் தனி 204 செங்காடு…

Read More

அதிமுக நிர்வாகிகளுக்கு கொரோனோ நிவாரண உதவி-மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ வுமான தூசி மோகன் வழங்கினார்.

வந்தவாசியில், அதிமுக நிர்வாகிகளுக்கு கொரோனோ நிவாரண உதவி-மாவட்ட செயலாளரும் எம்.எல்.ஏ வுமான தூசி மோகன் வழங்கினார். திருவண்ணாமலை மாவட்டம், வந்தவாசியில், அண்ணா திராவிட முன்னேற்றக் கழக நிர்வாகிகளை சந்தித்த திருவண்ணாமலை வடக்கு மாவட்ட கழக செயலாளரும்,செய்யாறு சட்டமன்ற உறுப்பினருமான தூசி மோகன் தன் சொந்த செலவில் கொரோனோ நிதிஉதவி வழங்கினார். அதிமுக ஒன்றிய கழக நிர்வாகிகள், கிளைக்கழக நிர்வாகிகள் உள்ளிட்டோர்களுக்கு கொரோனோ நிதிஉதவி வழங்கிய மாவட்ட செயலாளர் தூசி மோகன், கொரோனோ தாக்கம் அதிகமாவதால்,பாதுகாப்பாக இருக்கும்படி நிர்வாகிகளுக்கு அறிவுறுத்தினார். அப்போது, எம்.ஜி ஆர் மன்றம் ஜே.பாலுமுதலியார், மாவட்ட அம்மா பேரவை செயலாளர் பாஸ்கர் ரெட்டியார், ஒன்றிய செயலாளர்கள் எம்.கே.ஏ லோகேஷ்வரன், அர்ஜுனன், பச்சையப்பன்,தங்கராஜ் , திருவண்ணாமலை 22வது வார்டு மாவட்ட கவுன்சிலர் கஸ்தூரி ஏகாம்பரம் , கலையரசு, மற்றும் நகர செயலாளர் ஓட்டல் பாஷா,அம்மா பேரவை மேகநாதன்,…

Read More

தேசூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் விருத்தாசலத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபருக்கு கொரோனோ

வந்தவாசி அருகே, தேசிய மயமாக்கப்பட்ட வங்கியில் பணிபுரியும் 28 வயது வாலிபருக்கு கொரோனோ தொற்று திருவண்ணாமலை மாவட்டம், தேசூரில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கி இயங்கி வருகிறது. இதில் பணிபுரியும் விருத்தாசலத்தைச் சேர்ந்த 28 வயது வாலிபருக்கு கொரோனோ தொற்று ஏற்பட்டுள்ளது. அதனால் தேசூரில் தங்கியிருந்த அறை உள்ள தெரு உள்ளிட்ட இடங்களில் தடுப்பு ஏற்படுத்தப் பட்டுள்ளது. அந்த பேரூராட்சியின் முதல் தொற்று என்பதால் அந்த ஊரில் உள்ள கடைகள் 3 நாட்கள் அடைக்கப்பட்டுள்ளன.வங்கி செயல்படாததால் அந்த பகுதியின் வாடிக்கையாளர்கள் பாதிப்படைந்துள்ளனர்.

Read More

பிக்மீகொ N 95 லெமூரியா வெட்டி வேர் முகக்கவசங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர்.

      தமிழ்நாட்டை சேர்ந்த ஈ காமஸ் நிறுவனமான பிக்மீகொ அவர்களின் சொந்த தயாரிப்பான லெமூரியா முகக்கவசங்களை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த நிறுவனம் ஒன்பது வகையான முகக்கவசங்கள் தயாரிப்பு செய்து சந்தைபடுத்தியுள்ளது. இவர்களின் தயாரிப்புகள் சுமார் 50 முறை துவைத்து பயன்படுத்தக்கூடியது. உலக சுகாதார மையம் உட்பட அனைத்து தரச்சான்றுகளும் பெற்ற ஒரே இந்திய தயாரிப்பு இது. இவர்களின் தொழிற்சாலை முறைப்படி மத்திய மாநில அரசு வழிகாட்டுதல்கள் படி பாதுகாப்புடன் தயாரித்து இந்தியா முழுவதும் தூதஞ்சல் மூலம் அனுப்பிவைக்கபடுகிறது. மேலும் மேக் இன் இந்தியா திட்டத்தின் கீழ் இந்நிறுவனம் இயங்கி வருகிறது. இந்த வகையான முகக்கவசங்கள் இருபது ரூபாய் முதல் கிடைக்கும் எளிய மக்களுக்கு தரமான பொருட்களை சேர்க்க வேண்டும் என்பது இந்த நிறுவனத்தின் தாரக மந்திரமாகும். பாதுகாப்பு மற்றும் பொதுநல சேவை அடிப்படையில் மிகக் குறைந்த…

Read More

தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்.!

தலைவர்கள் கூட்டமைப்பு கூட்டம் ஐந்து தீர்மானங்கள் நிறைவேற்றம்.! கடலூர் மாவட்டம் நல்லூர் ஒன்றிய அனைத்து ஊராட்சி மன்ற தலைவர்கள் கூட்டம் நல்லூர் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் நடைபெற்றது. கூட்டத்தில் NRG வேலையில் சட்டமன்ற உறுப்பினர், மேயர்கள் மற்றும் அரசியல்வாதிகள் தலையிட கூடாது என்றும் தலைவருக்கான வேலையை அந்த அந்த தலைவரே செய்ய வேண்டும் , ஊராட்சி மன்ற தலைவரின் அனுமதி கடிதம் பெற்று வண்டல் மண் எடுக்க வட்டாச்சியர் அவர்கள் அனுமதி வழங்க வேண்டும், ஊராட்சி மன்ற தலைவர்கள் பரிந்துரைக்கும் பயனாளிகளுக்கு வீடு வழங்க வேண்டும், தொகுப்பு வீடுகள் மற்றும் பசுமை வீடுகள்.மற்றும் PMY வீடுகள் கட்டுவதற்க்கு அரசே மணல் வழங்க வேண்டும், கொரோனா நிதியை  இரண்டு லட்சம் ரூபாய் (200000) உடனே அந்த அந்த ஊராட்சி மன்ற வங்கி கணக்குக்கு  அனுப்ப வேண்டும் என மேற்கண்ட…

Read More