காரமடையில் ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி பொருட்கள்

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி பொருட்கள் கொரனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா எனும் திட்டத்தை ஆரம்பித்து உள்ளார். இதனால் பெரும்பாலான மக்கள் பயனைடைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக காரமடை பகுதியில் நீலகிரி மாவட்ட மத்திய அமைச்சர் ஆ.ராசா ஆணைக்கிணங்க நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சியில் கோவை வடக்கு மாவட்ட செயலாளர் சி.ஆர்.ராமச்சந்திரன் அவர்களின் வழிகாட்டுதலின்படி மேட்டுப்பாளையம் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட காரமடை பேரூராட்சியில் உள்ள முடிதிருத்தும் தொழிலாளிகள் சலவைத் தொழிலாளிகள், மகளிர் அழகு நிபுணர்கள், வாகன ஓட்டுனர்கள் சங்க நிர்வாகிகள் மற்றும் உறுப்பினர்கள், நடைபாதை வியாபாரிகள் உட்பட 700க்கும் மேற்பட்டோருக்கு கழக தலைமைச்…

Read More

அனுமதி பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகின்றது

கோவை திருப்பூர் மாவட்ட எல்லையான காரணம்பேட்டையில் திருப்பூர் போலீசார் தீவிர சோதனை. இ- பாஸ் பெற்ற வாகனங்கள் மட்டும் அனுமதிக்கப்படுகின்றன. அனுமதி பெறாத வாகனங்கள் திருப்பி அனுப்பபடுகின்றது.இரண்டு கிலோ மீட்டர் தூரத்திற்கு வாகனங்கள் அணிவகுத்து நிற்கும் காட்சி

Read More

கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு

கிணற்றில் வாலிபர் சடலம் மீட்பு கோவை.மே.20- சிங்கநல்லூர் பகுதியில் உள்ள கிணற்றில் இருந்து அழுகிய நிலையில் வாலிபர் சடலம் மீட்கப்பட்டது. சடலத்தை கைப்பற்ற போலீசார் விசாரனை நடத்தி வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் இறந்தவர் கோவை சிங்காநல்லூர் பகுதியை சேர்ந்த கணேசன் என்பவரின் மகன் அருண்குமார் என்பதும்,மாநகராட்சி ஒப்பந்த ஊழியராக பணியாற்றி வந்ததும் தெரியவந்துள்ளது.

Read More

குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜை

கோவை மாவட்டம் ,காரமடை ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட தோலம்பாளையம் ஊராட்சியில் ரூ.40 லட்சம் மதிப்பீட்டில் முத்துக்களூரிலிருந்து தோலம்பாளையம் வரை புதிய குடிநீர் குழாய் அமைக்க பூமி பூஜையை மேட்டுப்பாளையம் சட்டமன்ற உறுப்பினர். ஓ.கே.சின்னராஜ் துவக்கி வைத்தார்.

Read More

கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள,

கழக தகவல் தொழில்நுட்பப் பிரிவு மண்டலச் செயலாளர்களாக நியமிக்கப்பட்டுள்ள, திரு.அஸ்பயர் K.சுவாமிநாதன் (சென்னை மண்டலம்), திரு.M.கோவை சத்யன் (வேலூர் மண்டலம்), திரு.சிங்கை G ராமச்சந்திரன் (கோவை மண்டலம்), திரு.V.V.R.ராஜ் சத்யன் (மதுரை மண்டலம்) ஆகியோர் நேரில் சந்தித்து வாழ்த்து பெற்றனர்.

Read More