கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் சென்னையில் ஆலோசனை

கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் சென்னையில் ஆலோசனை கொரோனா தடுப்பு நடவடிக்கை தொடர்பாக முதல்வர் பழனிசாமி சென்னையில் ஆலோசனை நடத்தி வருகிறார். டிஜிபி திரிபாதி, தலைமைச்செயலாளர் சண்முகம், அனைத்து துறை செயலாளர்களுடன் ஆலோசனையில் ஈடுப்பட்டுள்ளார். கொரோனா மேலும் பரவாமல் தடுக்க 21 நாள் ஊரடங்கு உத்தரவை சிறப்பாக செயல்படுத்துவது பற்றி ஆலோசனை செய்து வருகிறார்.  

Read More

கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும்- சந்திரசேகர ராவ்.

கண்டதும் சுட உத்தரவிட வேண்டிவரும்- சந்திரசேகர ராவ். தெலங்கானாவில் மக்கள் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்கவில்லை என்றால் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம்-முதல்வர் சந்திரசேகர ராவ்.* _தெலங்கானாவில் கொரோனா வைரஸ் பரவாமல் இருக்க ஊரடங்கு அமலில் உள்ள நிலையில் பொதுமக்கள் அரசுடன் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் என முதல்வர் சந்திரசேகர ராவ் தெரிவித்துள்ளார். இல்லாவிட்டால் போலீசாருக்கு துப்பாக்கி சூடு நடத்தும் அதிகாரம் வழங்கப்படும். இல்லை என்றால் ராணுவம் அழைக்கப்படும். அதுபோன்ற நிலையை பொதுமக்கள் ஏற்படுத்த வேண்டாம் அரசு எடுத்துவரும் நடவடிக்கைகள் பொதுமக்கள் ஒத்துழைப்பு அளிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்._

Read More

பட்டாளம் மார்க்கெட் மக்கள் அதிக அளவில் கூடியதால் வியாபாரம் செய்தவர்களை தடியால் அடித்து கடைகளை அப்புறப்படுத்தினர்

சென்னை பட்டாளம் மார்க்கெட்! சென்னை பட்டாளம் மார்க்கெட் மக்கள் அதிக அளவில் கூடியதால், சாலை ஓரங்களில் காய்கறி, பழ வியாபாரம் செய்த கடைகளை அப்புறப்படுத்தியும், வியாபாரம் செய்தவர்களை தடியால் அடித்து கடைகளை அப்புறப்படுத்தி வருகின்றனர். அங்குள்ள மீன் மார்க்கெட்க்குள் சென்று மீன் வியாபாரத்தை நிறுத்த சொல்லி போலீசார் வலியுறுத்தினர். அங்கு மீன் வாங்க வந்தவர்களையும் துரத்தி அனுப்பினர். பொதுமக்கள் அச்சம் ஏற்பட்டு பலர் காய்கறி வாங்காமல் வீட்டிற்கு புறப்பட்டு சென்றனர். கொரோனா வைரஸ் பரவதை கொஞ்சம் கூட பயப்படாமல் வீதியில் உலா வருவதும் ஆங்காங்கே கும்பல் கும்பலாக வெளியே அரட்டை தனம் செய்வதும் புளியந்தோப்பு போலீசார் அடிக்கினால் மேலும் சிறப்பாக இருக்கும். பிரதான சாலையை விட தெருக்களில் தான் வீட்டினுல் இருக்காமல் வெளியில் நிற்பவர்களை பூஜைகள் போட்டால் தான் இவர்கள் திருந்துவார்கள். புளியந்தோப்பு போலீசாரின் கையில் தான்…

Read More