உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும்

  உயர்நீதிமன்ற மதுரை கிளையில் ஜூன் 1-ம் தேதி முதல் நேரடியாக வழக்கு விசாரணை நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஜூன் 1 முதல் காலை 10.30 மணி முதல் பிற்பகல் 1.30 மணி வரை நேரடியாக வழக்குகள் விசாரிக்கப்படும். பிற்பகல் 2.30 மணி முதல் 4.45 மணி வரை இருதரப்பும் விருப்பம் தெரிவித்தால் காணொலியில் விசாரணை நடைபெறும் என உயர்நீதிமன்ற மதுரை கிளை பதிவாளர் தமிழ்ச்செல்வி அறிவித்துள்ளார்_

Read More

ஒரே நாளில் 7 பிரபலமான கடைகள் பூட்டி சீல்

  செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரத்தில் அரசின் விதிமுறைகளை மீறி ஏசி பயன்படுத்திய பிரபலமான 7 கடைகளை வருவாய் துறை அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனா். செங்கல்பட்டு மாவட்டம் கொரோனா வைரஸ் பரவலில் தற்போது சென்னைக்கு அடுத்து மாநிலத்தில் இரண்டாம் இடத்தில் உள்ளது.இந்நிலையில் செங்கல்பட்டு மாவட்டம் தாம்பரம் நகராட்சி பகுதிகளில் பல கடைகள் அரசின் வழிகாட்டு முறையை கடைப்பிடிக்காமல் செயல்படுவதாக மாவட்ட வருவாய் அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதையடுத்து இன்று மாவட்ட வருவாய் அதிகாரிகள்,நகராட்சி அதிகாரிகள் போலீஸ் பாதுகாப்புடன் சோதணை நடத்தினா்.மேற்கு தாம்பரம் முடிச்சூா் சாலையில் உள்ள பிரபலமான தனியாா் டிப்பாா்ட்மெண்ட் ஸ்டோா்(மோா்),தாம்பரம் ராஜாஜி சாலையில் உள்ள திருமண அழைப்பிதழ்கள் நிலையம்,பா்ணிச்சா்,வீட்டு உபயோகப்பொருட்கள் விற்பனை கடைகள்(கிரியாஸ்) என்று மொத்தம் 7 வியாபார நிறுவனங்கள் அரசு நிபந்தணைகளை மீறி,குளிா்சாதன வசதிகளுடன் இயங்கின.அதோடு வாடிக்கையாளா்கள் சமூக இடைவெளியை கடைப்பிடிக்காமல்,மாஸ்க்குகளும் அணியாமல் இருந்தனா்.இதையடுத்து…

Read More

போலீஸ் அதிகாரிகளை பெருமைப்படுத்தும் விதமாக ‘சிகப்பு கம்பள வரவேற்பு’ தந்திடும் விழா

    மாநகர காவல் துறை நிகழ்ச்சி சென்னை நுங்கம்பாக்கம் சரகத்திர்க்கு உட்பட்ட சூளைமேடு காவல் நிலையத்தில் – கொரணவிலிருந்து மீண்டு பணிக்கு திரும்பிய போலீஸ் அதிகாரிகளை பெருமைப்படுத்தும் விதமாக ‘சிகப்பு கம்பள வரவேற்பு’ தந்திடும் விழாவில் 30.5.2020 போலீஸ் துணை கமிஷனர் திரு. தர்மராஜன் IPS அவர்கள், போலீஸ் உதவி கமிஷனர் திரு. முத்து வேல் பாண்டி அவர்கள், சட்டம் ஒழுங்கு ஆய்வாளர். திரு. அனந்த் பாபு , குற்றப்பிரிவு ஆய்வாளர் திருமதி.பிரசித்தீபா, சட்டம் ஒழுங்கு உதவி ஆய்வாளர்கள் திருமதி.ஜான்சிராணி, திரு.இராமகிருஷ்ணன், திரு.மாரீஸ்வரன், செலவி.திலகவதி, காவல் ஆளினர்கள் மற்றும் பொதுமக்கள் ஆகியோர் உதவி ஆய்வாளர் திரு. பாலகுரு , உதவி தலைமை காவலர் 43796 திரு முத்து இப்ராஹிம் , முதல் நிலை காவலர் 43290 திரு ஆனந்த் , ஆயுதப்படை காவலர் 51205 திரு…

Read More

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி

ஒன்றிணைவோம் வா திட்டத்தின் மூலம் நிவாரண உதவி பொருட்கள் பல்லடம். மே.29- கொரனா வைரஸ் தொற்று நோய் உலகம் முழுவதும் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் தமிழகம் முழுவதும் உள்ள மக்கள் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகியுள்ளனர். இதற்கு தி.மு.க.தலைவர் மு.க.ஸ்டாலின் ஒன்றிணைவோம் வா எனும் திட்டத்தை ஆரம்பித்து உள்ளார். இதனால் பெரும்பாலான மக்கள் பயனைடைந்து வருகின்றனர். இதன் ஒரு பகுதியாக திருப்பூர் மாவட்டம் பல்லடம் பகுதியில் நிவாரண பொருட்களை வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது. பல்லடம் சட்டமன்ற தொகுதி சவர தொழிலாளர்களுக்கு பல்லடம் ஒன்றிய திமுக சார்பில் கொரானா பேரிடர் நலத்திட்ட உதவிகள் பல்லடம் ஒன்றிய தி.மு.க. அலுவலகத்தில் தி.மு.க.தலைவர் ஸ்டாலின் ஆணைக்கினங்க மாவட்ட செயலாளர் க.செல்வராஜ் தலைமையிலும், ஒன்றிய செயலாளர் சு.கிருஷ்ணமூர்த்தி ஏற்பாட்டிலும் 600 பேருக்கு 10 கிலோ அரிசி, மளிகை பொருட்கள், காய்கறி வழங்கும்…

Read More

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 4 வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு

தமிழகத்தில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் 4 வழித்தடங்களில் இயக்கப்படும் சிறப்பு ரயில்களுக்கான முன்பதிவு தொடங்கியுள்ளது. மதுரை – விழுப்புரம், திருச்சி – நாகர்கோவில், காட்பாடி – கோவை, கோவை – மயிலாடுதுறை வழித்தடங்களில் ஜூன் ஒன்றாம் தேதி முதல் சிறப்பு ரயில்கள் இயக்கப்பட உள்ளன.

Read More

19 காலகட்டத்துக்குப் பிறகு திட்டங்களின் நிலைமை! நிதியமைப்பும் தொழிலாளர் நிலைமையும் மறுதொடக்கத்தின் வேகத்தைக் குறைக்கின்றன!

இந்தியாவில் மேற்கொள்ளப்பட்டு வந்த மற்றும் புதிய திட்டங்கள் குறித்த தகவல்களைத் தொகுத்துவரும் இந்தியாவின் மிகப்பெரிய ஆன்லைன் நிறுவனமான ப்ராஜக்ட்ஸ் டுடே, தேசிய அளவில் நிபுணர்களைக் கொண்டு கருத்துக்கணிப்பு ஒன்றை நடத்தியது. இத்திட்டங்களை மேற்கொண்டு வருபவர்கள் நடப்புச் சூழல் குறித்து என்ன நினைக்கின்றனர், அவர்களது பார்வை என்ன, ஊரடங்கு காலகட்டத்துக்குப் பிறகு எந்தெந்த திட்டங்களில் முதலீடு மேற்கொள்ளப்படும் ஆகியன குறித்து இந்த கருத்துக்கணிப்பு நடத்தப்பட்டது. இந்தியாவில் மேற்கொள்ளப்படும் திட்டங்களில் தொடர்புடைய நபர்களில் இருந்து (முதலீட்டாளர்கள், திட்ட வடிவமைப்பாளர்கள், ஆலோசகர்கள், ஒப்பந்ததாரர்கள்) தேர்ந்தெடுக்கப்பட்ட 233 பேர் இந்த கருத்துக்கணிப்புயில் பங்கேற்றனர்.   ,                                                      …

Read More

மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது

தூத்துக்குடி மாவட்டத்தில் ஆற்று மணல் திருட்டில் ஈடுபட்டவர் குண்டர் தடுப்புச் சட்டத்தின் கீழ் கைது தூத்துக்குடி மாவட்டம் திருவைகுண்டம் தலுகாவில் உள்ள முறப்பநாடு காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கலியாவூர் பகுதியை சேர்ந்தவர் கணபதி மகன் ஆறுமுகம்(49). இவர் கடந்த 16.02.2020 அன்று கலியாவூர் தாமிரபரணி ஆற்றுப்படுகையில் சட்டவிரோதமாக ஆற்று மணல் திருடியுள்ளார். இதுகுறித்து முறப்பநாடு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து ஆறுமுகத்தை கைது செய்தனர். மேற்படி எதிரி ஆறுமுகத்தை குண்டர் சட்டத்தின் கீழ் கைது செய்து நடவடிக்கை மேற்கொள்ள முறப்பநாடு காவல்நிலைய ஆய்வாளர் திரு. பார்த்திபன், தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அவர்களுக்கு அறிக்கை சமர்ப்பித்தார் பின் தூத்துக்குடி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. அருண் பாலகோபாலன் இ.கா.ப அவர்கள் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் திரு. சந்தீப் நந்தூரி இ.ஆ.ப. அவர்கள் எதிரி ஆறுமுகம்…

Read More

பிரசன்னா சுவாமிகள் கண்டன அறிக்கை

  கோவை.மே.28- கோவை சலிவன் வீதியில் உள்ள ஸ்ரீ வேணு கோபால சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி திருக்கோவிலில் மர்ம நபர்கள் மாமிசம் வீசி சென்றுள்ளது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதையடுத்து இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜுன் சம்பத் ஆணைக்கிங்க இந்து மக்கள் கட்சி மாநில துணைத் தலைவர் மற்றும் ஜோதிடரணி தலைவர் பிரசன்னா சுவாமிகள் மற்றும் மாநில அமைப்புச் செயலாளர் கணபதி ரவி ஜி சென்று பார்வையிட்டனர்.மற்றும் பிரசன்னா சுவாமிகள் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த போது: கோவை சலிவன் வீதியில் அமைந்துள்ள வேணு கோபால சுவாமி திருக்கோவில் மற்றும் ஸ்ரீ ராகவேந்திரா சுவாமி திருக்கோவிலில் மர்ம நபர்கள் மாமிசம் வீசி சென்றது கண்டிக்கத்தக்கது. உடனடியாக காவல் துறை நடவடிக்கை எடுத்து மர்ம நபர்களை கைது செய்யவேண்டும் என்று இந்து மக்கள் கட்சி…

Read More