அபூர்வா ஸ்வீட்ஸ் திறப்பு விழா

அபூர்வா ஸ்வீட்ஸ் திறப்பு விழா   கோவை.செப்.13- குனியமுத்தூர், இடையர்பாளையம் பிரிவில் அபூர்வா ஸ்வீட்ஸ் திறப்பு விழா நடைபெற்றது. விழாவினை சமூக ஆர்வலரும், நல்லறம் அறக்கட்டளை யின் தலைவருமான எஸ்.பி.அன்பரசன் குத்து விளக்கேற்றியும், முதல் விற்பனையையும் துவக்கி வைத்தார். அருகில் உடன் குனியமுத்தூர் பகுதி கழக செயலாளர் T. மதனகோபால், கோபாலகிருஷ்ணன், எஸ்.வி.செல்வராஜ் உட்பட பலர் கலந்து கொண்டனர் . இங்கு அரோமாவின் அனைத்து வகையான இனிப்பு வகைகள், நெய் ஸ்வீட்ஸ் மற்றும் கார வகைகள் கிடைக்கும். தகவலுக்கு அபூர்வா ஸ்வீட்ஸ் 9944633478

Read More

ஊட்டியில் பூங்காக்கள் திறக்கப்பட்டன ஊட்டி. செப்.9

ஊட்டியில் பூங்காக்கள் திறக்கப்பட்டன ஊட்டி. செப்.9 நீலகிரி மாவட்டத்தில் உதகை அரசினர் தாவரவியல் பூங்கா , ரோஜா பூங்கா , தொட்டபெட்டா டி கார்டன், குன்னூர் சிம்ஸ் பூங்கா , காட்டேரி பூங்கா ஆகியவற்றை மாவட்ட ஆட்சித்தலைவர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பின்படி திறக்கப்பட்டன. அதன்படி உதகை ,அரசு தாவர இயல் பூங்கா இன்று காலை 7 மணியளவில் திறக்கப்பட்டது. உதகை அரசு தாவரவியல் பூங்கா தோட்டக்கலை உதவி இயக்குனர் ராதாகிருஷ்ணன் கூறும்போது ” உதகை அரசு தாவரவியல் பூங்காவில் பார்வையாளர்கள் உள்ளே நுழைய ஒரு வழியும் ,வெளியேறுவதற்கு இன்னொரு வழியும் தனித்தனியாக ஏற்படுத்தப் பட்டுள்ளது . பூங்காவினுள் நுழைபவர்கள் முககவசம் அணிந்து சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டியது முக்கியமானதாகும் ” என்றார். மேலும் அவர் கூறுகையில்”பூங்கா நுழைவாயிலில் ஒவ்வொரு பார்வையாளரின் உடல் வெப்ப நிலை சோதனை செய்யப்படும்.…

Read More

ரூபாய் 2.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார்

ரூபாய் 2.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்தார் கோவை.செப்.9 கோவை கிணத்துக்கடவு சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மதுக்ரை ஒன்றியத்தில் தமிழக முதலமைச்சர் மற்றும் தமிழக துணை முதலமைச்சர் ஆகியோர் பரிந்துரை யின் பேரில் மதுக்கரை ஒன்றிய பெருந்தலைவர் உதயகுமாரி பாலசண்முகம் தலைமையில் கிணத்துக்கடவு சட்டமன்ற உறுப்பினர் எட்டிமடை சண்முகம் முன்னிலையில் மதுக்கரை ஊராட்சி ஒன்றிய வளாகத்தில் ரூபாய் 2.87 கோடி மதிப்பீட்டில் புதிய கட்டிடம் கட்டும் பணி துவக்கி வைக்கப்பட்டது. இதனை உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி துவக்கி வைத்து அடிக்கல் நாட்டினார் உடன் மதுக்கரைஒன்றியசெயலாளர் சண்முகராஜா மலுமிச்சம்பட்டி ஒன்றிய S.சதீஷ்குமார் மாவட்ட ஆட்சித்தலைவர் இராசாமணி உட்பட அரசு அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

Read More

கோவை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முற்றுகை.

கோவை தொழிலாளர் நல வாரிய அலுவலகம் முற்றுகை. ஓய்வு ஊதியம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தொழிற்சங்கத் தலைவர்கள் தொழிலாளர் நலத் துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். கோவை, செப்.10 கட்டிட கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு மாநில அரசால் நலவாரியம் ஏற்படுத்தப்பட்டு, நலவாரியத்தின் மூலம் பல்வேறு நிதி மற்றும் சமூக பாதுகாப்பு உதவிகள் வழங்கப்பட்டு வருகிறது. கோவை மாவட்டத்தில் சுமார் 1,500க்கும் மேற்பட்ட தகுதியுள்ள, ஓய்வுபெற்ற தொழிலாளர்களுக்கு ஓய்வு ஊதியம் வழங்கப்படாமல் உள்ளது. இது சம்பந்தமாக அனைத்து தொழிற்சங்கத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தி வருகிறார்கள். இந்நிலையில் கடந்த பதினோரு மாத காலமாக தொழிலாளர்களுக்கு வழங்கப்பட்டு வந்த ஓய்வூதியம் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது. எனவே, நிறுத்தி வைக்கப்பட்டுள்ள ஓய்வூதியத்தை உடனே வழங்க வேண்டும், ஓய்வூதியம் கேட்டு விண்ணப்பித்து காத்திருக்கும் 1500 க்கும் மேற்பட்ட தொழிலாளர்களுக்கு உடனடியாக…

Read More

21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி கார்த்திக் எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார்

21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் பூங்கா அமைக்கும் பணி கார்த்திக் எம்.எல்.ஏ.துவக்கி வைத்தார் கோவை.செப்.10 கோவை மாநகராட்சி 38 வது வார்டு, பீளமேடு,ஜெய்நகர் பகுதியில், சிங்காநல்லூர் சட்டமன்ற உறுப்பினர் தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து 21 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்பட உள்ள சுற்றுச்சுவர் மற்றும் பூங்கா அமைக்கும் பணிகளை,கோவை மாநகர் கிழக்கு மாவட்ட திமுக பொறுப்பாளர் நா. கார்த்திக் எம்.எல்.ஏ.அவர்கள் அடிக்கல் நாட்டி, துவக்கி வைத்தார்.* *உடன் பீளமேடு பகுதி 1 பொறுப்பாளர் வே.பாலசுப்பிரமணியன், பீளமேடு பகுதி 2 பொறுப்பாளர் மா.நாகராஜ், வட்டக்கழகச் செயலாளர் ஆ.மாடசாமி,கழக நிர்வாகிகள் கழக உடன்பிறப்புகள்,ஜெய்நகர் நலச்சங்க நிர்வாகிகள் தி.கந்தவேல்,த.திலகராஜன்,குழந்தைவேலு, அன்வர் பாஷா, நரசிம்மன், சசிகுமார், முருகேசன், வேணுகோபால், பத்மாவதி,செல்வகுமாரி, ஜெயந்தி,ஆனந்தி.*

Read More

கான்கீரிட் வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை , அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல்

அமைச்சர் நிவாரண உதவி கோவை.செப்.8 கோயம்புத்தூர் மாவட்டம் , கோவை செட்டிவீதியில் எதிர்பாராத விதமாக கான்கீரிட் வீடு இடிந்து விழுந்த விபத்தில் உயிரிழந்தவர்களின் குடும்பத்தினரை , அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி , நிவாரண உதவித்தொகைக்கான காசோலையினை வழங்கினார் . கோயம்புத்தூர் மாவட்டம் , பேரூர் வட்டம் , கொமாராபாளையம் கிராமம் , செட்டிவீதியில் கடந்த ( 06.09.2020 ) அன்று கான்கீரிட் வீடு எதிர்பாராத விதமாக இடிந்து விழுந்ததில் 4 நபர்கள் உயிரிழந்தனர் . அதனைத் தொடர்ந்து அமைச்சர் எஸ்.பி.வே மணி நேரில் சந்தித்து ஆறுதல் கூறி , முதலமைச்சர் பொது நிவாரண நிதி மற்றும் பேரிடர் நிவாரண நிதி ஆகியவற்றிலிருந்து நிவாரண உதவித்தொகையான ரூ .12 இலட்சத்திற்கான காசோலையினை வழங்கினார் . இந்நிகழ்வின் போது சட்டமன்ற உறுப்பினர் அம்மன் கே.அர்ச்சுணன் ,…

Read More

நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறப்பு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு

நீலகிரி மாவட்டத்தில் பூங்காக்கள் திறப்பு ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவிப்பு நீலகிரி. செப்.6 நீலகிரி மாவட்டத்தில் செப்டம்பர் 9-ம் தேதி முதல் சுற்றுலாப் பயணிகள் அனுமதிக்கப்படுவார்கள் என மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா அறிவித்துள்ளார். நாடு முழுவதும் தற்போது கொரோனா அச்சுறுத்தலால் சுற்றுலா தலங்கள் அனைத்தும் கடந்த 6 மாதங்களாக மூடப்பட்டுள்ளன. இந்நிலையில், இந்த ஆண்டு நீலகிரி மாவட்டத்தில் கோடை சீசன் நிகழ்ச்சிகள் ரத்து செய்யப்பட்டன.சுற்றுலா நடவடிக்கைள் முழுவதுமாக முடக்கப்பட்டன. இதனால், சுற்றுலாவை நம்பியிருந்த கடை வியாபாரிகள், சுற்றுலா வாகன ஓட்டுநர்கள் மற்றும் தங்கும் விடுதி உரிமையாளர்கள் பொருளாதார ரீதியாக கடுமையாக பாதிக்கப்பட்டனர். தற்போது பல தளர்வுகள் அறிவிக்கப்பட்டுள்ளதால், மிகவும் பாதிக்கப்பட்ட சுற்றுலாத்துறைக்குத் தளர்வுகள் அறிவிக்கப்படுமா என அத்துறையை சார்ந்தவர்கள் எதிர்பார்த்துக் காத்திருந்தனர். இந்நிலையில், நாளை மறுநாள் (புதன்கிழமை) முதல் நீலகிரி மாவட்டத்தில் உள்ள பூங்காக்களுக்கு இ-பாஸ்…

Read More

சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார்.

தூத்துக்குடி மாவட்டத்தில் கடந்த வாரம் சிறப்பாக பணியாற்றிய காவல் ஆய்வாளர் உட்பட 20 காவல்துறையினருக்கு மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் வெகுமதி வழங்கி பாராட்டினார். கடந்த 25.08.2020 அன்று செய்துங்கநல்லூர் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட கால்வாய் பகுதியில் புளியங்குளத்தை சேர்ந்த செல்லையா மகன் முருகன் (31) என்பவரை வழிமறித்து அரிவாளால் தாக்க முயன்ற எதிரிகள் 4 பேரை அடையாளம் கண்டு அவர்களை கைது செய்வதற்கு உதவியாக இருந்த ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய ஆய்வாளர் திரு. ஜோசப் ஜெட்சன், ஸ்ரீவைகுண்டம் உட்கோட்ட தனிப்பிரிவு உதவி ஆய்வாளர் திரு. இன்னோஸ் குமார், செய்துங்கநல்லூர் காவல் நிலைய தனிப்பிரிவு தலைமைக் காவலர் திரு. பூர்ணராஜ், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய தனிப்பிரிவு முதல்நிலைக் காவலர் திரு.சுப்பிரமணியன், ஸ்ரீவைகுண்டம் காவல் நிலைய காவலர்கள் திரு. செந்தில் முருகன் மற்றும் திரு.…

Read More

தூத்துக்குடி மாவட்ட காவல்துறை காவலர் சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 வது நாள் நினைவு அஞ்சலி

தூத்துக்குடி மாவட்ட வல்லநாடு அருகில் மணக்கரையில் பதுங்கிருந்த ரவுடி துரைமுத்து பிடிக்கும் பொழுது நாட்டு வெடிகுண்டு விசியதில் மரணமடைந்த தூத்துக்குடி மாவட்ட காவல்துறை காவலர் சுப்பிரமணியன் அவர்களுக்கு 16 வது நாள் நினைவு அஞ்சலி வகையாக தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் திரு. எஸ். ஜெயக்குமார் அவர்கள் தலைமையில் மலர் தூவி அஞ்சலி செலுத்தப்பட்டது. கடந்த 18.08.2020 அன்று துரைமுத்து என்ற ரவுடியை பிடிக்கச் சென்றபோது, ரவுடி தன் கையில் வைத்திருந்த நாட்டு வெடிகுண்டை வீசியதில் காவலர் தெய்வத்திரு. சுப்பிரமணியன் அவர்கள் வீர மரணமடைந்தார். அவர் வீரமரணமடைந்து இன்று (02.09.2020) 16வது தினம் என்பதால் தமிழ்நாடு அனைத்து ஓய்வு பெற்ற காவல்துறையினர் நலச்சங்கம், தூத்துக்குடி மாவட்டம் சார்பாக காவலர் சுப்பிரமணியன் அவர்களின் வீர தீர செயலை…

Read More

அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி 7 இடங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்……

    பொதுமக்களுக்கு இடையூராக உள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி 7 இடங்களில் பொதுமக்கள் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்…… திருப்பூர் மாநகராட்சிக்குட்பட்ட சிங்கார வேலன் நகர் பகுதியில் அமைந்துள்ள அரசு மதுபானக் கடையை அகற்றக்கோரி பொதுமக்கள் பல மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர் . மாற்று இடம் பார்த்து கடையை அப்புறப்படுத்த வேண்டும் என மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டும் கடையை அப்புறப்படுத்தாதைக் கண்டித்தும் அதேபோல் ஜீவா நகர் பகுதியில் புதிதாக டாஸ்மாக் கடை அமைக்கப்பட்டதை மாற்றக் கோரியும் சிங்காரவேலன் நகர் ஜீவா காலனி ஆகிய பகுதிகளை சேர்ந்த பொதுமக்கள் சிங்காரவேலன் நகர் ஜீவா காலனி உள்ளிட்ட 7 இடங்களில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களுடன் பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட வட்டாட்சியர் மற்றும் டாஸ்மாக் நிர்வாகிகள் ஒரு வார காலத்தில் கடையை அப்புறப்படுத்த நடவடிக்கை…

Read More