மக்கள் சேவை வாகனம் துவக்கம்

மக்கள் சேவை வாகனம் துவக்கம் கோவை.செப். கவுண்டம்பாளையம் கல்பனா கல்யாண மண்டபத்தில் கோவை மக்கள் சேவை மையம் சார்பில் நடமாடும் இ-சேவை மற்றும் நூலகம் துவக்க விழா நடைபெற்றது. இந்த இ-சேவை மற்றும் நூலகத்தினை கொண்ட மக்கள் சேவை வாகனத்தை தமிழக பாஜக மாநில தலைவர் எல்.முருகன் துவக்கி வைத்தார். இந்நிகழ்ச்சியில் தமிழக பாஜக மாநில துணைத் தலைவர் வானதி சீனிவாசன் மற்றும் உறுப்பினர்கள் பலர் கலந்துகொண்டனர்.

Read More

100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர்

100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவர்கள் தி.மு.க.வில் இணைந்தனர் கோவை.செப். கோவை மாநகர் மேற்கு மாவட்டம், கவுண்டம்பாளையம் சட்டமன்ற தொகுதி, பெரியநாயக்கன்பாளையம் மேற்கு ஒன்றியத்தின், நஞ்சுண்டாபுரம் ஊராட்சிக்குட்பட்ட, திருவள்ளுவர் நகரில் தி.மு.க ஊராட்சி மன்ற உறுப்பினர் குமாரசாமி அவர்களின் ஏற்பாட்டில் 100 க்கும் மேற்பட்ட கல்லூரி மாணவ – மாணவிகள் ஒன்றிய கழக பொறுப்பாளர் சி.எம்.கிருஷ்ணகுமார் மற்றும் ஊராட்சி கழகச் செயலாளர் திருநாவுக்கரசு ஆகியோர் முன்னிலையில் தங்களை திராவிட முன்னேற்றக் கழகத்தில் இணைத்துக் கொண்டனர். இது குறித்து பையாகவுண்டர் அவர்களிடம் கூறும்போது நாம் அனைவரும் ஒன்றிணைந்து களப்பணியாற்றி கழகத் தலைவர் மு.க.ஸ்டாலின் அவர்களை முதல்வர் சிம்மாசனத்தில் அமர்த்திட அயராது பாடுபடுவோம் என்றும், விரைவில் அமைய உள்ள கழக ஆட்சி நிச்சயம் மாணவர்களின் நலன் காக்கும் என்று கூறினார். இதில் மாவட்ட பொறுப்புக்குழு உறுப்பினர்கள் துரைசாமி, ரகுபதி, ஆனைகட்டி…

Read More

நல்லறம் அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா

நல்லறம் அறக்கட்டளை சார்பில் அண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா கோவை. செப. மறைந்த அறிஞர் ஆண்ணாவின் 112 வது பிறந்த நாள் விழா தமிழகமெங்கும் இன்று கொண்டாடப்பட்டது. இதனை முன்னிட்டு உள்ளாட்சித் துறை அமைச்சர் எஸ்.பி. வேலுமணி ஆணைக்கிணங்க 93A-டிவிசன் சார்பாக அதன் வட்ட கழக செயலாளர் எஸ்.ஜெகதீஸ் ஏற்பாட்டின் பேரில் அண்ணா 112-ஆவது பிறந்தநாள் விழா மிகவும் சிறப்பாக கொண்டாடப்பட்டது. இவ்விழாவில் குணியமுத்தூர் பகுதி கழக செயலாளர் மதனகோபால் அவர்கள் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டு அண்ணாவின் திரு உருவ படத்திற்க்கு மலர்தூவி மரியாதை செலுத்தினார். நூற்றுக்கணக்கான தூய்மை பணியாளர்களுக்கு இனிப்புடன் மதிய உணவுகளை வழங்கினார். நிகழ்ச்சியில் டிவிசன் செயலாளர் எஸ். ஜெகதீஸ், அறநிலையத்துறை தலைவர் ஈ.கே.பழனிச்சாமி, மற்றும் கழக முன்னோடிகள், கழக நிர்வாகிகள் மற்றும் பொதுமக்கள் கலந்துகொண்டு சிறப்பித்தன்ர்.

Read More

நல்லறம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான அமைப்பு இனிதே துவங்கப்பட்டது.

நீலகிரி மாவட்டம் கூடலூர் பகுதியில் நல்லறம் அறக்கட்டளை சார்பில் இரத்ததான அமைப்பு இனிதே துவங்கப்பட்டது.

Read More

சூலூர் பேரூராட்சியில் அண்ணா திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை

சூலூர் தெற்கு ஒன்றியம் சூலூர் பேரூராட்சியில் அண்ணா திருவுருவப் படத்துக்கு மலர் தூவி மரியாதை சூலூர்.செப். சூலூர் சட்டமன்ற உறுப்பினர் அலுவலகத்தில் இன்று முத்தமிழ் #வித்தகர் முன்னாள் தமிழக முதல்வர் பெருந்தகை அண்ணா 112வது பிறந்தநாளில் அவரின் திருவுருவப் படத்திற்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இந்நிகழ்ச்சியில் அனைத்துலக M.G.R மன்ற துணைசெயலாளர் தோப்பு க.அசோகன், மாவட்ட ஊராட்சி மன்ற தலைவர்சாந்திமதி தோப்பு க.அசோகன், மாவட்ட வழக்கறிஞர் பிரிவு இணை செயலாளர் K.பிரபுராம் மாவட்ட M.G.R. மன்ற துணை செயலாளர் கந்தசாமி, சூலூர் ஒன்றிய பெருந்தலைவர் மாதப்பூர் பாலு, சூலூர் தெற்கு ஒன்றிய கழக துணை செயலாளர் K.M.அங்கமுத்து, சூலூர் தெற்கு ஒன்றிய கழக அவைத்தலைவர் லிங்குசாமி, சூலூர் பேரூராட்சி கழக செயலாளர் கார்த்திகை வேலன், சூலூர் பேரூராட்சி கழக துணை செயலாளர் A. P.அங்கண்ணன் மற்றும்…

Read More

பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு திமுக கட்சியின் முக்கிய பிரமுகர்கள் மாலை அணிவித்தனர்,

சுயமரியாதை சுடரொளி  பேரறிஞர் அண்ணா அவர்களின் 112வது பிறந்த நாளை முன்னிட்டு சென்னை தெற்கு மாவட்டம், சோழிங்கநல்லூர் கிழக்குப் பகுதி,185 வட்டம் பாலவாக்கத்தில் கழகத்தின் சார்பில் அன்னாரது திருவுருவப் படத்திற்கு இன்று மலரஞ்சலி செலுத்தியபோது…

Read More

பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் !!

திருப்பூரில் பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து, பாசிச எதிர்ப்புக் கூட்டமைப்பு சார்பில் ஆர்ப்பாட்டம் !! நீட் தேர்வை ரத்து செய்யப்படாததை கண்டித்தும், காவிரி நதிநீர் உரிமையில் தமிழகத்துக்கு தொடர்ந்து துரோகம் இழைக்கப்பட்டு வருவதைக் கண்டித்தும் , தமிழக ஊடகங்களையும், ஊடகவியலாளர்களையும் மிரட்டும் அராஜக போக்கை கைவிட கோரியும், ஸ்டெர்லைட் போன்ற திட்டங்களுக்கு ஆதரவு அளித்து வருவதோடு, தமிழக வளங்களை கார்ப்பரேட்டுகளுக்கு தாரை வார்க்க துணை போகும் , பாரதிய ஜனதா கட்சியை கண்டித்து பாசிச எதிர்ப்பு கூட்டமைப்பு சார்பாக திருப்பூர் மாநகராட்சி முன்பு நடைபெற்ற ஆர்ப்பாட்டத்தில் எஸ்டிபிஐ கட்சி, பாப்புலர் பிரண்ட் ஆப் இந்தியா, திராவிட இயக்கங்கள் உட்பட ஏராளமானோர் கலந்து கொண்டனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான கோஷங்களை எழுப்பினர்,

Read More

காற்றாலை நிறுவனமானது சட்டவிரோதமாக எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் மேற்படி மின் வழிப்பாதை அமைத்து வருகிறது.

    திருப்பூர் மாவட்டம் தாராபுரம் வட்டம் சங்கரண்டாம்பாளையம் உள்வட்டம் இதில் வடுகபாளையம் கிராமம் இச்சிப்பட்டியில் உள்ள காமேஸா என்ற தனியார் காற்றாலை நிறுவனத்தின் மின் நிலையத்தில் இருந்து வடமேற்க்கே உள்ள ராசிபாளையம் தமிழக அரசு மின் வாரி மின் நிலையத்தை இணைக்கும் விதமாக மேற்படி காமேஸா காற்றாலைநிறுவனம் உயர் மின் கோபுரம் அமைத்து மின் வழி பாதை அமைத்து வருகிறது. இதில் என்னவென்றால் கொழுமங்குழி கிராமம் புல எண்.545 என்ற பூமியிலும் மின் கோபுரம் அமைத்துள்ளது மேற்படி இந்த பூமியானது தூரம்பாடி குலமாணிக்கேஸ்வரன் கோவிலுக்கு பாத்தியப்பட்டு உதவி ஆணையர் இந்து சமய அறநிலைய பாதுகாப்பு துறை கோவை அவர்களின் கட்டுப்பாட்டில் உள்ளது. இவ்வாறு இருக்கும் நிலையில் மேற்படி காமேஸா என்ற தனியார் காற்றாலை நிறுவனமானது சட்டவிரோதமாக எவ்வித அரசு அனுமதியும் இல்லாமல் மேற்படி மின் வழிப்பாதை…

Read More

எதிர்ப்பாற்றல் ஹோமியோபதி மருந்து கோவை.செப்.12

எதிர்ப்பாற்றல் ஹோமியோபதி மருந்து கோவை.செப்.12 நல்லறம் அறக்கட்டளையின் சார்பாக கோவை சிங்காநல்லூர் சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட நீலிகோணாம் பாளையம், அண்ணாநகர், விவேகானந்தா நகர், மற்றும் சுற்றுவட்டார பகுதி மக்களுக்கு நல்லறம் அறக்கட்டளையின் சார்பாக பொதுமக்களுக்கு கோவிட்-19 நோய் எதிர்ப்பாற்றல் ஹோமியோபதி மருந்துகளை நல்லறம் அறக்கட்டளையின் தலைவர் எஸ்.பி.அன்பரசன் அண்ணன் வழங்கினார். உடன் தெற்கு சட்டமன்ற தொகுதி உறுப்பினர் அம்மன் கே அர்ஜுனன், அறக்கட்டளையின் தலைமை ஒருங்கிணைப்பாளர் மகா கணபதி ஜுவல்லர்ஸ் சுரேஷ்குமார் மற்றும் நிர்வாகிகள் பொதுமக்கள் கலந்து கொண்டனர்.

Read More