இரு சக்கர வாகனங்கள் மற்றும் மூன்று சக்கர வாகனங்களை உற்பத்தி செய்வதில் உலகளவில் புகழ்பெற்ற நிறுவனமான டி.வி.எஸ் மோட்டார் நிறுவனம் [TVS Motor Company], TVS XL100’’ என்ற பன்னோக்குப் பயன்பாட்டு வாகனங்களை வாங்க எளிய திட்டத்தை அறிமுகப்படுத்தியுள்ளது. வாடிக்கையாளர்களுக்கு எளிதிலும் மலிவான விலையிலும் போக்குவரத்து வசதிகளைச் செய்து தர வேண்டும் என்ற நிறுவனத்தில் கோட்பாட்டிற்கு ஏற்ப, வாடிக்கையாளர்கள் இப்போது ‘TVS XL100i – டச் ஸ்டார்ட்* (TVS XL100i-TOUCH start*) வகை வாகனத்தை வாங்க தினசரி 49 ரூபாய் செலவு செய்தால் போதும் உங்களது அன்றாடப் பயணங்களை எளிதாக்கலாம் என்பதை டி.வி.எஸ். நிறுவனம் கொண்டு வந்துள்ளது. இந்த திட்டத்தின் மூலம், 30 நாட்கள், தினமும் 49 ரூபாய், [ரூ. 49 x 30 நாட்கள்] என மாதத் தவணையாக 1,470 ரூபாய் செலுத்தி இந்த வாகனத்தை வாங்க இயலும். வாடிக்கையாளர்கள் மாதாந்திர தவணைத் தொகையான இ.எம்.ஐ.-யை மட்டுமே செலுத்த வேண்டியிருக்கும் என்பதால் இது தினசரி வசூல் அல்லது மொத்த தொகையை திருப்பிச் செலுத்துதல் போன்ற அம்சங்கள் இதில் அடங்காது.

 

வாடிக்கையாளர்களின் அன்றாட பயணத்திற்காக தனிப்பட்ட போக்குவரத்தை எளிமையாக்குவதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும். டிவிஎஸ் கிரெடிட் சர்வீசஸ், ஸ்ரீராம் ஃபைனான்ஸ், எல் & டி மற்றும் ஐடிஎஃப்சி ஃபர்ஸ்ட் வங்கி [TVS Credit Services, Shriram Finance, L&T and IDFC First Bank] போன்ற நிதி நிறுவனங்களுடன் டி.வி.எஸ். நிறுவனம் இணைந்து செயல்பட்டு வருகிறது, நான்கு வெவ்வேறு தவணைக் காலங்களிலும் ஒரே இஎம்ஐ தொகையே பெறப்படும்.

 

‘TVS XL100’ வாகனத்தை இப்போது வாடிக்கையாளர்கள் எளிதில் வாங்க அவர்களுக்கு ஏற்ற திட்டமாக ‘இப்போது வாங்குங்கள் – பின்னர் செலுத்துங்கள்’ (Buy Now Pay Later)-ஐ டி.வி.எஸ். நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. ‘குறைந்த டவுன் பேமெண்ட் கட்டணமாக ரூ. 7,999-ல் வாகனத்தை வாங்கும் அனுபவம் மற்றும் ‘குறைந்த வட்டி விகிதமான 7.99 சதவீதத்தில் தொடங்கும் வட்டி, போன்ற பல சிறப்புத் திட்டங்கள் ‘TVS XL100’ வாகனத்தை வாங்க வாடிக்கையாளர்களின் வசதிக்காக உருவாக்கப்பட்டுள்ளது.

 

கடந்த பல ஆண்டுகளாக, ‘TVS XL100’ வாகனம் வலுவான கட்டமைப்புடன், திறன் வாய்ந்த பன்னோக்குப் பயன்பாட்டு வாகனமாகவும், பணத்திற்கு சிறந்த மதிப்பை வழங்கும் வாகனமாகவும் திகழ்ந்து வருகிறது. இந்த காரணங்களால் வணிக நிறுவனங்களின் உரிமையாளர்கள், வர்த்தகர்கள் மற்றும் விவசாயிகள் பயன்படுத்தும் மிகச் சிறந்த இரு சக்கர வாகனமாக ‘TVS XL100’ திகழ்கிறது. எளிதான ஆன்-ஆஃப் சுவிட்ச், விருப்பத் தேர்வான யூ.எஸ்.பி சார்ஜர் [easy on-off switch, optional USB charger] மற்றும் சொகுசு அளிக்கும் சவாரி அனுபவம் போன்ற சிறந்த மற்றும் எளிதில் பயன்படுத்த ஏதுவான அம்சங்களால் இந்த வாகனம் அலுவலகத்திற்குச் செல்வோர், பெண்கள் மற்றும் மூத்த குடிமக்கள் மத்தியிலும் கணிசமான ஆதரவைப் பெற்று அவர்களாலும் இது அதிகம் பயன்படுத்தப்படுகிறது.

 

‘TVS XL100’ வாகனம், ஆற்றல்மிக்க ’ஈகோ த்ரஸ்ட் ஃப்யூயல் இன்ஜெக்ஷன்’ (EcoThrust Fuel Injection} ET-Fi – தொழில்நுட்பத்துடன் வருகிறது, இது 15 சதவீதம் அதிக மைலேஜ் மற்றும் ஒருங்கிணைந்த மற்றும் அமைதியான ஸ்டார்ட்டிங்கை செயல்படுத்தும் ஒருங்கிணைந்த ஸ்டார்டர் ஜெனரேட்டர் (Integrated Starter Generator – ISG -ஐ.எஸ்.ஜி) உடன் மேம்பட்ட தயாரிப்பாக ‘TVS XL100’ அறிமுகமாகி உள்ளது. 99.7 CC நான்கு-ஸ்ட்ரோக் எஞ்சின் [99.7cc four-stroke engine] மூலம் அதிகபட்சமாக 3.20 கிலோவாட் (4.3 php) சக்தியை 6000 rpm-மில் [maximum power of 3.20kW (4.3 bhp) @6000 rpm] வழங்குவதுடன் அதிகபட்ச டார்க் 6.5 nm -மை 3500 rpm [a maximum torque of 6.5 Nm@3500 rpm].-மில் வழங்குவது இதன் சிறப்பம்சமாகும்.

 

‘TVS XL100’ வாகனங்கள் ஐந்து வகைகளில் கிடைக்கிறது: ‘TVS XL100’ ஹெவி டியூட்டி கிக் ஸ்டார்ட் (TVS XL100 Heavy Duty Kickstart), ‘TVS XL100’ ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட் * (TVS XL100 Heavy Duty i-TOUCHstart*), ‘TVS XL100’ ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட்* வின் எடிஷன் (TVS XL100 Heavy Duty i-TOUCHstart* Win Edition), ‘TVS XL100’ கம்ஃபோர்ட் கிக் ஸ்டார்ட் (TVS XL100 Comfort Kickstart) மற்றும் ‘TVS XL100’ கம்ஃபோர்ட் ஐ-டச்ஸ்டார்ட் *. (TVS XL100 Comfort i-TOUCHstart*) ஆகிய ஐந்து வேரியண்ட்களில் சந்தையில் கிடைக்கின்றன. அண்மையில் அறிமுகப்படுத்தப்பட்ட ‘TVS XL100’ ஹெவி டியூட்டி ஐ-டச்ஸ்டார்ட்* வின் எடிஷன் [TVS XL100 Heavy Duty i-TOUCHstart* Win Edition] வாகனம், டிலைட் ப்ளூ மற்றும் பீவர் பிரவுன் [Delight Blue & Beaver Brown] வண்ணங்களில் வருகிறது.

 

‘TVS XL100’ வாகனத்தின் விலை ரூ. 41220 என்ற தொடக்க விலையில் கிடைக்கிறது, (எக்ஸ் ஷோரூம் தமிழ்நாடு விலை)

 

மேலும் விவரங்களுக்கு, https://www.tvsxl.com/ இணையதளத்தைப் பார்க்கலாம்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613