இரண்டாவது கோவிட்-19 நோய்தொற்று அலை குறைந்து, தடுப்பூசிகளின் வரவு காரணமாக இந்தியாவில் மக்கள் பயணங்களில் ஆர்வம் காட்டுகிறார்கள். இருப்பினும், உடல்நலம் பற்றிய கவலைகள் மற்றும் பயண நெறிமுறைகளில் தொடரும் மாற்றங்கள் ஆகியவை மக்களிடையே பயணம் குறித்த தயக்கத்தை உருவாக்குகிறது. மக்களுக்கு வழிகாட்டுதல்களை வழங்குவதற்கும், மீண்டும் பயணம் செய்வது பாதுகாப்பானது என்ற நம்பிக்கையை வளர்ப்பதற்கும், தாமஸ் குக் இந்தியா & எஸ்ஓடிசி டிராவல் லிமிடெட் டிராவ்ஷீல்ட் மற்றும் ஹாலிடே பர்ஸ்ட் என்னும் இரண்டு புதிய திட்டங்களை அறிவித்துள்ளது.

 

நுகர்வோர் நடத்தைகள் மற்றும் பயணத் தேவைகளை நன்கு புரிந்துகொள்ள, தாமஸ் குக் இந்தியா மற்றும் எஸ்ஓடிசி கடந்த ஜூன் 2021 இல் 4000 வாடிக்கையாளர்களிடம் ஒரு கணக்கெடுப்பு நடத்தியது. இந்த தரவு பகுப்பாய்வுகளை ஆராய்ந்தததில் தளர்வுகளுக்கு பிறகு பயணம் செய்ய விருப்படுபபவர்கள் 69% ஆக இருந்தனர், அதில் உடனடியாக பயணம் செய்ய 18% பேரும், 3 முதல் 6 மாதங்களுக்குள் பயணம் செய்ய 51% பேரும் விருப்பம் தெரிவித்து இருந்தனர். மேலும், பதிலளித்தவர்களில் சுமார் 81% பேர் திரும்பப்பெறக்கூடிய அல்லது கட்டணம் இன்றி ரத்துசெய்யும் பயண திட்டங்களை வலியுறுத்தினர், மேலும் முழுமையாக மறு சுகாதார சீரமைக்கப்பட்ட அறைகளை 52% பேர் தேர்ந்தெடுத்தனர். முழுமையாக தடுப்பூசி போடப்பட்ட ஹோட்டல் ஊழியர்கள் மற்றும் ஓட்டுநர்கள் ஆகியோரை முறையே 48% மற்றும் 34% பதிலளித்தவர்களால் முன்னிலைப்படுத்தப்பட்டனர்.

 

தாமஸ் குக் இந்தியா மற்றும் எஸ்ஓடிசியால் அறிமுகப்படுத்தப் பட்டுள்ள திட்டம் டிராவ்ஷீல்ட். அப்பல்லோ கிளினிக்குகளுடன் இணைந்து, முழுமையான சுகாதார மற்றும் பாதுகாப்பு உறுதிப்படுத்தப்பட்ட பயண திட்டம் டிராவ்ஷீல்டில் கட்டமைக்கப்பட்டுள்ளது. ட்ராவ்ஷீல்ட் ஆன்லைன் கட்டணம் மற்றும் சேவை இடைவினைகள், சுத்திகரிக்கப்பட்ட கிளைகள் மற்றும் தடுப்பூசி போடப்பட்ட பயண ஆலோசகர்கள் உள்ளிட்ட பல்வேறு வகையான வாடிக்கையாளர் நன்மைகளை வழங்குகிறது. இலவச மறு திட்டமிடல் மற்றும் ரத்துசெய்தல், கோவிட்-19 காப்பீட்டுத் தொகை, 24/7 அவசர தொடர்பு உதவி மற்றும் 24/7 டாக்டர்-ஆன்-கால் ஆகியவை இதில் அடங்கும். வாடிக்கையாளர்களுக்கு மிகவும் தேவையான நிதி உதவியை வழங்கும் விதமாக பயணம் முடிந்த பிறகு கட்டணம் செலுத்தும் ஹாலிடே ஃபர்ஸ்ட் திட்டத்தை இந்நிறுவனம் அறிமுகப்படுத்தியுள்ளது. டிராவ்ஷீல்ட் மற்றும் ஹாலிடே ஃபர்ஸ்ட் பயண திட்டங்கள் பயணவாசிகளின் உடல்நலம் மற்றும் பாதுகாப்பிற்கான உறுதிப்பாட்டை ஒருங்கிணைத்து, பயண அனுபவத்தை எளிதாக்குகிறது மற்றும் குறிப்பிடத்தக்க சேமிப்புகளை வழங்குகிறது.

 

இது குறித்து தாமஸ் குக் (இந்தியா) லிமிடெட் நிர்வாக இயக்குனர் திரு மாதவன் மேனன் கூறுகையில், “தாமஸ் குக் மற்றும் எஸ்ஓடிசி ஆகியவற்றில், எங்கள் வாடிக்கையாளர்களின் பாதுகாப்பை நாங்கள் மிகவும் மதிக்கிறோம், மேலும் எங்கள் பயண சேவைகள் உலகளாவிய பாதுகாப்புத் தரங்களை பூர்த்தி செய்வதை உறுதிசெய்ய அதிக முயற்சி செய்கிறோம். பயணர்கள் பாதுகாப்பாக பயணிப்பதற்கான நம்பிக்கையை எங்கள் வாடிக்கையாளர்களுக்கு வழங்குவதற்காக, தாமஸ் குக் மற்றும் எஸ்ஓடிசி இன் உறுதியான பயண பாதுகாப்பு உறுதிப்பாடான டிராவ்ஷீல்ட்-ஐ முன்வைப்பதில் நான் பெருமிதம் கொள்கிறேன். டிராவ்ஷீல்ட் வாடிக்கையாளர் பயணத்தின் ஒவ்வொரு கட்டத்திலும் துல்லியமான உடல்நலம் மற்றும் பாதுகாப்பு நெறிமுறைகளை உறுதிசெய்து, தற்போது நடைமுறையில் உள்ள எங்கள் பாதுகாப்பான பயணத் திட்டத்தை உள்ளடக்கியது. எங்கள் வாடிக்கையாளர்களின் நிதிச் சுமையைக் குறைக்கும் விதத்தில் அவர்களின் பயணம் முடிந்து தீரும் போது கட்டணம் செலுத்தும் தனித்துவமான திட்டததையும் அறிமுகப்படுத்தியுள்ளோம் என்று கூறினார்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613