இந்தியாவில் மாநில வாரியாக பொதுமுடக்கத்தின் மீது பல தளர்வுகளை படிப்படியாக செயல்படுத்த மேற்கொள்ளப்பட்டு வரும் முயற்சிகளைத் தொடர்ந்து, பணி நிமித்தம் காரணமாக புலம்பெயர்ந்த பணியாளர்கள் தங்களது சொந்த ஊர்களிலிருந்து தாங்கள் பணி செய்யும் ஊர்களுக்கு மீண்டும் திரும்பத் தொடங்கியுள்ளனர். பொதுமுடக்க காலத்தில், ப்ரீபெய்ட் பயன்படுத்தும் மொபைல் வாடிக்கையாளர்கள் பல்வேறு காரணங்களால் ரீசார்ஜ் செய்ய முடியாமல் போகும் சூழல் உருவானது.

 

 

 

ரீசார்ஜ் செய்ய முடியாமல் போன இதுபோன்ற அனைத்து வாடிக்கையாளர்களும் தற்போது மீண்டும் வேலையைத் தொடங்குவதால், Vi அவர்களை இந்தியாவின் அதிவேகமான 4G நெட்வொர்க்கிற்கு அழைக்கிறது. இந்தியாவின் முன்னணி தொலைத் தொடர்பு சேவை நிறுவனமான Vi, குறைந்த வருமானம் உடைய குழுவைச் சேர்ந்த இந்த வாடிக்கையாளர்களை மீண்டும் இணைக்கும் நோக்கத்துடன் புதிய சலுகைகளை அறிவித்துள்ளது இச்சலுகையின் மூலம் Vi எண்ணிலிருந்து மற்றொரு Vi எண்ணிற்கு அழைப்பதில் 50 அழைப்பு நிமிடங்களுடன் [50 Vi to Vi calling minutes], டேட்டா பயன்பாடுகளுக்காக 50MB டேட்டாவையும் வழங்குகிறது. 15 நாட்கள் வரை இந்த சிறப்பு சலுகையின் பலன்களை Vi வாடிக்கையாளர்கள் பெறமுடியும். செல்லுபடியாகும். அதற்கு பிறகு வாடிக்கையாளர்கள் தங்களுக்கு விருப்பமான மதிப்புள்ள ரீசார்ஜ் பேக்குகளுடன் ரீசார்ஜ் செய்யலாம்.

 

 

 

இச்சலுகைகளைப் பெற வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், அதன் பலன்களைப் பெறவும் Vi வாடிக்கையாளர்கள் கீழ்கண்ட வழிமுறைகளில் அன்லாக் 2.0-ஐ பெறலாம்.

 

 

 

* உங்களது Vi மொபைல் எண்ணிலிருந்து கட்டணமில்லா டோல் ஃப்ரீ IVR 121153 எண்ணிற்கு அழைக்கலாம் அல்லது USSD Code-க்கு *444*75# என்று டைப் செய்து அனுப்பலாம்.

 

* உங்களது மொபைல் எண்ணிற்கு வரும் எஸ்.எம்.எஸ்-ல் குறிப்பிட்டுள்ளபடி வழிமுறைகளைப் பின்பற்றவும்.

 

* உங்களுக்கு இச்சலுகையைப் பெற வாய்ப்புள்ளதா என்பதை அறிந்து கொள்ளவும், சலுகையை ஆக்ட்டிவேட் செய்யவும், அருகிலுள்ள ரீடெய்லர் கடையை அணுகவும்.

 

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613