அம்பத்தூர் காவல்  மாவட்டத்தில் 2 சிறுமிகளுக்கு பாலியல் துன்புறுத்தல் கொடுத்த நபர்  போக்சோ சட்டத்தில் கைது. 

 

அம்பத்தூர் காவல் மாவட்டத்திற்குட்பட்ட பகுதியில் வசிக்கும் ஒரு தம்பதியரின் 11 வயது சிறுமி மற்றும் 8 வயது சிறுமி இருவரும் அவர்களின் வீட்டின் அருகில் உள்ள ரமேஷ், வ/49 என்பவரின் வீட்டிற்கு கடந்த (22.05.2021) முன்பு விளையாட சென்ற போது எதிரி ரமேஷ் பாலியல் துன்புறுத்தல் கொடுத்ததாக மேற்படி சிறுமிகள் இருவரும் தங்களது பெற்றோர்களிடம் தெரிவித்துள்ளனர். பின்னர் மேற்படி இரண்டு சிறுமிகளின் பெற்றோர் இன்று (10.06.2021) W-30  பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

 

W-30 பூந்தமல்லி அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, மேற்படி வழக்கில் சம்மந்தப்பட்ட எதிரி ரமேஷ், வ/49, த/பெ.கிருஷ்ணமூர்த்தி, காட்டுப்பாக்கம், சென்னை என்பவரை போக்சோ சட்டத்தில் இன்று (10.06.2021) கைது செய்தனர். 

 

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில் விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட ரமேஷ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613