அரும்பாக்கம் பகுதியில் லாரி மற்றும் கார்களில் கர்நாடக மாநில
மதுபாட்டில்களை கடத்தி வந்தவர்களில் ஒருவர் கைது. சுமார் 3,408

மதுபாட்டில்கள், 1 லாரி மற்றும் 3 கார்கள் பறிமுதல்.
சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக
மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களை கண்டறிந்து
கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,.
அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர்
தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சட்ட
விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும், முழு
ஊரடங்கையொட்டி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை
செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.
இதன் தொடர்ச்சியாக, மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு ஆய்வாளர் திருமதி.மஞ்சுளா
மற்றும் K-8 அரும்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல்
குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் காவல் குழுவினர் நேற்று (02.06.2021)
இரவு சுமார் 10.40 மணியளவில், அரும்பாக்கம், பூந்தமல்லி நெடுஞ்சாலை, நடுவாங்கரை
மேம்பாலம் அருகில் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வந்த ஒரு
லாரி மற்றும் 3 கார்களை நிறுத்தி விசாரணை செய்து கொண்டிருந்தபோது, மேற்படி
வாகனங்களில் வந்தவர்கள் தப்பியோடியுள்ளனர். உடனே காவல் குழுவினர் துரத்திச்
சென்று ஒரு ஓட்டுநரை பிடித்து விசாரணை செய்தனர்.
விசாரணையில் மேற்படி 1 லாரி மற்றும் 3 கார்களில் கர்நாடக மாநில
மதுபாட்டில்களை கடத்திச் சென்றது தெரியவந்ததின்பேரில் நேபால் மாநிலத்தைச் சேர்ந்த
லாரி ஓட்டுநர் சோனுசிங், வ/39, த/பெ.இறல்சிங், எண்.81, சேத்துபட்டு, சென்னை
என்பவரை கைது செய்தனர். மேலும் மதுபாட்டில்கள் கடத்தி வந்த 1 லாரி மற்றும் 3 கார்கள்
பறிமுதல் செய்து, வாகனத்தில் இருந்த 36 பெட்டிகளில் 1000 ML அளவு கொண்ட 324 மது
பாட்டில்களும், 17 பெட்டிகளில் 750 ML அளவு கொண்ட 204 மது பாட்டில்களும், 60
பெட்டிகளில் 180 ML அளவுக் கொண்ட 2,880 மது பாட்டில்களும் என மொத்தம் 3,408 மது
பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டது.
மேலும் விசாரணையில் குற்றவாளிகள் கர்நாடக மாநிலத்தில் இருந்து மது
பாட்டில்களை கடத்தி, சென்னையில் உள்ள பல்வேறு பகுதிகளுக்கு விற்பனைக்காக
கொண்டு வந்தது தெரியவந்தது. மேலும் தப்பியோடிய தலைமறைவு குற்றவாளிகளை
பிடிக்க காவல் குழுவினர் விரைந்துள்ளனர்.
விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட குற்றவாளி சோனுசிங், நீதிமன்றத்தில்
ஆஜர் செய்யப்படவுள்ளார்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613