1. சென்னை, தண்டையார்பேட்டையைச் சேர்ந்த சண்முகப்பிரியா என்பவர் 01.6.2021
    அன்று மாலை தண்டையார்பேட்டை பகுதியில் சென்று கொண்டிருந்தபோது, அவ்வழியே
    இருசக்கர வாகனத்தில் வந்த 2 நபர்கள் சண்முகபிரியாவின் செல்போனை பறித்துக் கொண்டு
    தப்பிச் சென்றனர். இது குறித்து சண்முகபிரியா H-3 தண்டையார்பேட்டை காவல் நிலையத்தில்
    புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு
    அப்பகுதியில் பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்து வந்தனர்.
    இந்நிலையில், பழைய வண்ணாரப்பேட்டையைச் சேர்ந்த அம்மு, க/பெ.பிரபாகரன்
    என்பவர் நேற்று (02.6.2021) தண்டையார்பேட்டை, எம்.சி.எம்.கார்டன் 1வது தெருவில் நடந்து
    சென்று கொண்டிருந்தபோது, இருசக்கர வாகனத்தில் வந்த ஒரு நபர் அம்முவின் செல்போனை
    பறித்துக் கொண்டு தப்பிச் சென்றார். இது குறித்து அம்மு H-3 தண்டையார்பேட்டை காவல்
    நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை
    மேற்கொள்ளப்பட்டது.
    H-3 தண்டையார்பேட்டை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான
    காவல் குழுவினர் 2 சம்பவ இடங்களிலும் தீவிர விசாரணை செய்து, அப்பகுதியில்
    பொருத்தியிருந்த சிசிடிவி கேமரா பதிவுகளை ஆய்வு செய்தபோது, 2 சம்பவங்களிலும் ஒரே
    நபர் ஈடுபட்டுள்ளார் என தெரியவந்ததின்பேரில், மேற்படி செல்போன் பறிப்பு சம்பவங்களில்
    ஈடுபட்ட ராஜு (எ) ராஜசேகர், வ/21, த/பெ.சுப்ரமணி, எண்.402, ஜீவா நகர், 4வது தெரு, புது
    வண்ணாரப்பேட்டை, சென்னை என்பவரை கைது செய்தனர். பின்னர் ராஜசேகர் கொடுத்த
    தகவலின்பேரில், மற்றொரு குற்றவாளியான யுவராஜ், வ/21, த/பெ.முனுசாமி, மங்கம்ம்ள்
    தோட்டம் 2வது தெரு, புது வண்ணாரப்பேட்டை என்பவரையும் கைது செய்தனர்.
    அவர்களிடமிருந்து புகார்தாரர்களின் 2 செல்போன்கள் மற்றும் குற்றச் செயலுக்கு
    பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
    விசாரணையில், குற்றவாளிகள் ராஜசேகர் மற்றும் யுவராஜ் ஆகியோர் சேர்ந்து
    புகார்தாரர் சண்முகபிரியாவிடம் செல்போன் பறித்துச் சென்றதும், அம்மு என்பவரிடம்
    ராஜசேகர் தனியாக இருசக்கர வாகனத்தில் சென்று செல்போன் பறித்துச் சென்றதும்
    தெரியவந்தது. மேலும் விசாரணையில் குற்றவாளி ராஜசேகர் கடந்த 2020ம் ஆண்டு T-5
    திருவேற்காடு காவல் நிலைய எல்லையில் உள்ள ஒரு வெல்டிங் கடையில் வேலை செய்து
    வந்தபோது, முதலாளி இருசக்கர வாகனத்தில் வைத்திருந்த ரூ.2 லட்சம் பணத்தை
    திருடியதற்காக கைது செய்யப்பட்டவர் என்பது தெரியவந்தது.
    விசாரணைக்குப் பின்னர் 2 குற்றவாளிகளும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு,

    இருவரும் நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613