ஜெ.ஜெ.நகர் பகுதியில் சாலையில் கிடந்த பணம் ரூ.50,000/-ஐயும், மாம்பலம்
பகுதியில் ATM மையத்தில் கிடந்த பணம் ரூ.10,000/-ஐயும் நேர்மையாக காவல்
நிலையத்தில் ஒப்படைத்தவர்களுக்கு சென்னை பெருநகர காவல் ஆணையாளர்

வெகுமதி வழங்கி பாராட்டு.

பணம் இழந்தவர்கள் உரிய சான்றுடன் காவல் நிலையத்தை அணுக வேண்டுகோள்.
சென்னை, அண்ணாநகர், மேற்கு விரிவாக்கம், ஜீவன் பீமா நகர், எண்.10041 என்ற
முகவரியில் வசித்து வரும் ஸ்டாலின் கண்ணா, வ/45, த/பெ.ராமதாஸ் என்பவர் நெற்குன்றத்தில்
National Institute of Hotel Management என்ற கல்வி நிறுவனத்தை நடத்தி வருகிறார். ஸ்டாலின்
கண்ணா நேற்று (02.6.2021) மதியம் சுமார் 12.15 மணிக்கு, அவரது காரில் ஜெ.ஜெ.நகர், TVS
காலனி, லோட்டஸ் ரெசிடென்சி அருகில் சென்று கொண்டிருந்தபோது, அங்கு சாலையில்
ரூபாய் நோட்டுக்கட்டு ஒன்று கிடந்ததை கண்டு எடுத்து பார்த்தபோது, அதில் பணம் ரூ.50,000/-
இருந்துள்ளது. பணத்திற்கு உரிமையாளர் யார் என தெரியாததால் ஸ்டாலின் கண்ணா
அப்பணத்தை எடுத்துச் சென்று, V-3 ஜெ.ஜெ.நகர் காவல் நிலையத்தில் ஒப்படைத்தார்.
இதுபோல R-1 மாம்பலம் காவல் நிலைய தலைமைக் காவலர் பிரேம்குமார் (த.கா.26385)
என்பவர் இன்று (03.6.2021) அதிகாலை சுமார் 06.30 மணியளவில் ரோந்து பணியில், தி.நகர்
சாலையிலுள்ள யூனியன் பேங்க் ஆப் இந்தியா வங்கியின் ATM மையத்தில் தணிக்கை செய்ய
சென்றபோது, அங்கு ரூ.10,000/- கேட்பாரற்று கிடந்துள்ளது. காவலர் பிரேம்குமார்
அப்பணத்தை எடுத்து விசாரணை செய்தபோது, யாரும் அப்பணத்திற்கு உரிமையாளர் யார் என
தெரியவில்லை. ஆகவே, தலைமைக் காவலர் பிரேம்குமார் மேற்படி பணம் ரூ.10,000/-ஐ R-1
மாம்பலம் காவல் நிலைய ஆய்வாளரிடம் ஒப்படைத்து உரியவரிடம் ஒப்படைக்க
நடவடிக்கைகள் மேற்கொண்டார்.
மேற்படி சம்பவங்களில் கீழே கிடந்த பணத்தை கண்டெடுத்து நேர்மையாக காவல்
நிலையத்தில் ஒப்படைத்து, மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக செயல்பட்ட அண்ணாநகரைச்
சேர்ந்த ஸ்டாலின் கண்ணா மற்றும் R-1 மாம்பலம் காவல் நிலைய தலைமைக் காவலர்
பிரேம்குமார் ஆகியோரை, சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால்,
இ.கா.ப., அவர்கள் இன்று (03.6.2021) நேரில் அழைத்து பாராட்டி வெகுமதி வழங்கி
கௌரவித்தார்.
இதுவரையில் பணம் இழந்தவர்கள் குறித்த விவரம் கிடைக்கப் பெறவில்லை. எனவே,
பணத்தை இழந்தவர்கள் உரிய சான்றுகளுடன் V-3 ஜெ.ஜெ.நகர் மற்றும் R-1 மாம்பலம் காவல்
நிலைய ஆய்வாளர்களிடம் தொடர்பு கொண்டு பெற்றுக் கொள்ளும்படி கேட்டுக்
கொள்ளப்படுகின்றனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613