சென்னையில் சட்டவிரோத செயல்களில் ஈடுபடுவோர் மற்றும் சட்டத்திற்கு
புறம்பாக பணம் வைத்து சூதாட்டத்தில் ஈடுபடும் நபர்களை கண்காணித்து கைது செய்ய
சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப., அவர்கள்
உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர்,
அந்தந்த காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதியில் தீவிரமாக கண்காணித்து உரிய
நடவடிக்கைகள் மேற்கொண்டு வருகின்றனர்.
இதன் தொடர்ச்சியாக R-5 விருகம்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர்
தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில் நேற்று
(03.06.2021) மாலை சுமார் 06.45 மணியளவில் விருகம்பாக்கம், யாதவால் தெருவில்
உள்ள தேவி கருமாரியம்மன் தியேட்டரின் உள்புறம் சென்று கண்காணித்தபோது, அங்கு
சிலர் பணம் வைத்து சீட்டுக்கட்டுகளுடன் சூதாட்டத்தில் ஈடுபட்டது தெரியவந்தது.
அதன்பேரில், மேற்படி இடத்தில் சட்டவிரோதமாக சூதாட்டத்தில் ஈடுபட்ட
1.புனிதன், வ/33, த/பெ.சுப்பிரமணியன், எண்.12/6, கம்பர் தெரு, காந்திநகர்,
சாலிகிராமம், சென்னை, 2.முகமது ஆசீப், வ/32, த/பெ.இனயத்துல்லா, எண்.51/2,
மஸ்ஜித் தெரு, சாலிகிராமம், சென்னை, 3.கிருஷ்ணன், வ/36, த/பெ.கோவிந்தசாமி,
எண்.103/31, ஒட்டய் பிள்ளையார் கோயில் தெரு, விருகம்பாக்கம், சென்னை,
4.அசாருதீன், வ/32, த/பெ.ஜைனுலாதீன், எண்.289, வேலன் நகர் மெயின்ரோடு,
வளசரவாக்கம், சென்னை, 5.மணிகண்டன், வ/40, த/பெ.கோபால், எண்.105/57,
காமராஜர் சாலை, விருகம்பாக்கம், சென்னை, 6.ராஜேஷ், வ/35, த/பெ.ரூபேஷன்,
எண்.120/43, தாங்கல் உல்வாயில் தெரு, விருகம்பாக்கம், சென்னை ஆகிய 6 நபர்களை
கைது செய்தனர். அவர்களிடமிருந்து சூதாட்டத்திற்கு பயன்படுத்திய பணம் ரூ.2,200/-
மற்றும் 1 சீட்டுக்கட்டு பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 6 நபர்கள் மீதும், உரிய சட்ட
நடவடிக்கைகள் எடுக்கப்பட்டது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613