சென்னை, பள்ளிக்கரணை, காமகோடி நகர், எண்.1-E, 9வது தெரு, என்ற
முகவரியில் வசித்து வரும் ஆஷிக் பாஷா, வ/28, த/பெ.ஜாபர்அலி என்பவர் கடந்த
2.6.2021 அன்று இரவு 8.45 மணியளவில் வேளச்சேரி தாம்பரம் மெயின் ரோட்டில்
உள்ள இந்தியன் ஆயில் பேட்ரோல் பங்க் அருகே செல்போனில் பேசியபடியே
வாக்கிங் சென்று கொண்டிருந்த போது, அவ்வழியே இருசக்கர வாகனத்தில் வந்த 2
நபர்கள், மேற்படி ஆஷிக்பாஷாவிடம் செல்போனை பறித்துக்கொண்டு
தப்பிச்சென்றனர். ஆஷிக் பாஷா சுதாரித்து கொண்டு குற்றவாளிகள் தப்பிச்சென்ற
இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை குறித்து வைத்துக்கொண்டு, இது குறித்து
ஆஷிக்பாஷா S-10 பள்ளிக்கரணை காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில்
வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.
S-10 பள்ளிக்கரணை காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர் தலைமையிலான
காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்தனர். மேலும் குற்றவாளிகள் தப்பிச்சென்ற
இருசக்கர வாகனத்தின் பதிவு எண்ணை வைத்தும், அப்பகுதியில் உள்ள சி.சி.டி.வி
பதிவுகள் சார்ந்து விசாரணை செய்து மேற்படி செல்போன் வழக்கில் சம்பந்தப்பட்ட
1.ஜேம்ஸ், வ/20, த/பெ.செல்வம், எண்.6/603, S.கொளத்தூர் மெயின் ரோடு, சின்ன
கோவிலம்பாக்கம் 2.கனகதர்ஷன், வ/19, த/பெ.ஆனந்தன், எண்.7/126, ஓம்சக்தி நகர்,
5வது குறுக்கு தெரு, கோவிலம்பாக்கம் ஆகிய இருவரையும் கைது செய்தனர்.
அவர்களிடமிருந்து 1 செல்போன் மற்றும் குற்றச்செயலுக்கு
பயன்படுத்திய 1 இருசக்கர வாகனம் பறிமுதல் செய்யப்பட்டது.
விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்
செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613