செங்குன்றம் பகுதியில் இருவேறு சம்பவங்களில் கத்தியைக் காட்டி வழிப்பறியில் ஈடுபட்ட 2 சகோதரர்கள் உட்பட 6 நபர்கள் கைது. 2 செல்போன்கள், 1 இருசக்கர வாகனம் மற்றும் பணம் ரூ.500/- பறிமுதல்

சென்னை, செங்குன்றத்தைச் சேர்ந்த ஈஸ்வர் என்பவர் கொசப்பூர், செட்டிமேடு மெயின் ரோட்டில் ராம்தேவ் மெட்டல் என்ற நிறுவனம் நடத்தி வருகிறார். மேற்படி நிறுவனத்தில் பணிபுரிந்து வரும் வடமாநிலத்தைச் சேர்ந்த ஹமீது மற்றும் 2 நபர்கள் இந்நிறுவனத்தின் மாடியில் தங்கி வருகின்றனர். ஹமீது மற்றும் 2 பணியாளர்களும், நேற்று (23.5.2021) இரவு மாடியில் தூங்கிக் கொண்டிருந்தபோது, இன்று (24.5.2021) அதிகாலை சுமார் 03.00 மணியளவில் 4 நபர்கள் மேற்படி நிறுவனத்தின் மாடிக்கு சென்று அங்கு தூங்கிக் கொண்டிருந்த ஹமீது மற்றும் 2 நபர்களையும் கத்தியைக் காட்டி மிரட்டியும், கையால் தாக்கியும், ஹமீது வைத்திருந்த 1 செல்போன், பணம் ரூ.500/- மற்றும் ஹமீதின் இருசக்கர வாகனம் ஆகியவற்றை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர்.

இது குறித்து மேற்படி நிறுவனத்தின் உரிமையாளர் ஈஸ்வர், M-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது. M-4 செங்குன்றம் காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவ இடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து, குற்றவாளிகளின் அடையாளங்களை கேட்டறிந்து, மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட 1.ஹரிபிரசாத், வ/19, த/பெ.ஜெகநாதன், சேனியம்மன் கோயில் தெரு, தண்டையார்பேட்டை, 2.சாதிக்பாஷா, வ/23, த/பெ.ரியாஸ், காந்திஜி தெரு, சர்மா நகர், இவரது சகோதரர் 3.நசீர்பாஷா, வ/23, த/பெ.ரியாஸ், அதே முகவரி, 4.பலூன் (எ) ரமேஷ், வ/24, த/பெ.சேகர், கருணாநிதி 4வது தெரு, அண்ணாநகர், கொருக்குப்பேட்டை ஆகிய 4 நபர்களை இன்று (24.5.2021) கைது செய்தனர். அவர்களிடமிருந்து ஹமீதின் 1 செல்போன், பணம் ரூ.500/- மற்றும் இருசக்கர வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டது.

இதே போல, இராமநாதபுரம் மாவட்டத்தைச் சேர்ந்த ராமலிங்கம், வ/37, த/பெ.தில்லைநாயகம் என்ற லாரி ஓட்டுநர், நேற்று (23.5.2021) இரவு அவர் ஓட்டி வந்த லாரியை செங்குன்றம், வடபெரும்பாக்கம், லட்சுமி பெட்ரோல் பங்க் அருகே நிறுத்திவிட்டு, லாரியில் தூங்கிக் கொண்டிருந்தாபோது, இன்று (24.5.2021) அதிகாலை சுமார் 04.00 மணியளவில் 2 நபர்கள் லாரியில் படுத்திருந்த ராமலிங்கத்திடம் கத்தியைக் காட்டி மிரட்டி, அவர் வைத்திருந்த 1 செல்போனை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து ராமலிங்கம் M-4 செங்குன்றம் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின்பேரில், வழக்குப் பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

M-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு மேற்படி வழிப்பறியில் ஈடுபட்ட 1.அன்பு, வ/23, த/பெ.பாஸ்கரன், எண்.15/7, துர்காதேவி நகர் மெயின் ரோடு, தண்டையார்பேட்டடை, 2.ஶ்ரீநாத், வ/23, த/பெ.தம்பிமோகன், எண்.28, மூலக்கடை 4வது தெரு, பெரியார் நகர், சென்னை-60 ஆகிய 2 நபர்களை இன்று (24.5.2021) கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 1 செல்போன் பறிமுதல் செய்யப்பட்டது.

மேற்படி 2 குற்ற சம்பவங்களில் கைது செய்யப்பட்ட 6 குற்றவாளிகளும் விசாரணைக்குப் பின்னர் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613