பேசின் பாலம் பகுதியில் பெண் கொலை செய்யப்பட்ட வழக்கில் ஏற்கனவே 6 நபர்கள் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மேலும் 3 நபர்கள் கைது.

சென்னை, புளியந்தோப்பு, குருசாமி நகரில் வசித்து வந்த சுப்ரியா, பெ/வ.32, க/பெ.ரூபன், என்பவர் 12.4.2021 அன்று இரவு புளியந்தோப்பு, குருசாமி நகர் 9வது தெருவில் மர்ம நபர்களால் கத்தியால் தாக்கி கொலை செய்யப்பட்டார். இது தொடர்பாக P-4 பேசின் பாலம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்யப்பட்டு விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

P-4 பேசின் பாலம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்ததில், இறந்துபோன சுப்ரியாவின் கணவர் ரூபனின் சகோதரர் ரமேஷ் என்பவரை கடந்த 2020ம் ஆண்டு மர்ம நபர்கள் கொலை செய்ததில், சுப்ரியாவுக்கும் பங்கு உள்ளது என எண்ணி அந்த முன்விரோதம் காரணமாக கணவர் ரூபன் மற்றம் அவரது சகோதரர்கள் சேர்ந்து மேற்படி கொலையில் ஈடுபட்டது தெரியவந்தது. அதன்பேரில், காவல் குழுவினர் தீவிர விசாரணை மற்றும் தேடுதலில் ஈடுபட்டு மேற்படி கொலை குற்றத்தில் ஈடுபட்ட சுப்ரியாவின் கணவர் 1.ரூபன், வ/32, த/பெ.எட்வர்டு, ரூபனின் சகோதரர் 2.ராம்கி (எ) ராம்குமார், வ/28, த/பெ.எட்வர்டு, 16 வயது இளஞ்சிறார்கள் 2 நபர்கள் என 4 நபர்கள் 14.4.2021 அன்றும், 5.தினகரன், (ரூபனின் சகோதரர்) வ/40, த/பெ.எட்வர்டு, என்ற குற்றவாளி 16.4.2021 அன்றும், 6.கமலா, பெ/வ.45, க/பெ.ஏழுமலை என்பவர் 06.5.2021 அன்றும் கைது செய்யப்பட்டு, நீதிமன்றக் காவலுக்கும், இளஞ்சிறார்கள் அரசு கூர்நோக்கு இல்லத்திலும் சேர்க்கப்பட்டனர்.

மேலும் காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட இதர எதிரிகள் ரூபனின் சகோதரர்கள் 7.சுதாகர், வ/39, த/பெ.எட்வர்டு, ஆண்டாள்குப்பம், பொன்னேரி தாலுகா, திருவள்ளூர் மாவட்டம், 8.பிரேம் (எ) பிரேம்நாத், வ/31, த/பெ.எட்வர்டு, காவாங்கரை, புழல், 9.கோதண்டம் (எ) கோதண்டராமன், வ/44, த/பெ.ராஜாராம், குருசாமி நகர் 9வது தெரு, புளியந்தோப்பு ஆகிய 3 நபர்களை இன்று (23.5.2021) கைது செய்தனர். விசாரணையில் கைது செய்யப்பட்ட கோதண்டராமன் மீது ஏற்கனவே ஒரு கொலை முயற்சி வழக்கு உள்ளது தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர் 3 குற்றவாளிகளும் இன்று (23.5.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613