செங்குன்றம் பகுதியில் சட்ட விரோதமாக காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த நபர் கைது. 160 மதுபாட்டில்கள் மற்றும் 1 கார் பறிமுதல்

 

 

சென்னையில் போதை பொருட்கள் வைத்திருப்பவர்கள், சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்திருப்பவர்கள் மற்றும் விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.சங்கர் ஜிவால், இ.கா.ப,. அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தங்களது காவல் நிலைய எல்லைக்குட்பட்ட பகுதிகளில் தீவிரமாக கண்காணித்து சட்ட விரோத செயல்களில் ஈடுபடுபவர்களை கைது செய்து வருகின்றனர். மேலும், முழுஊரடங்கையொட்டி சட்டவிரோதமாக மதுபாட்டில்கள் பதுக்கி வைத்து விற்பனை செய்பவர்களை தொடர்ந்து கண்காணித்து நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது.

இதன் தொடர்ச்சியாக, M-4 செங்குன்றம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின் பேரில், காவல் குழுவினர் நேற்று (22.05.2021) இரவு சுமார் 11.30 மணியளவில், செங்குன்றம், ஆலமரம் சந்திப்பு அருகே வாகனத் தணிக்கையில் ஈடுபட்டிருந்தபோது, அவ்வழியே வேகமாக வந்த மாருதி ஸ்விப்ட் காரை நிறுத்தி விசாரணை செய்தபோது, காரை ஓட்டி வந்த நபர் முன்னுக்குப் பின் முரணாக பதிலளித்தார். சந்தேகத்தின்பேரில், காரை சோதனை செய்தபோது, காரில் மதுபாட்டில்கள் பெருமளவு பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக காரில் மதுபாட்டில்கள் கடத்தி வந்த இளமாறன், வ/34, த/பெ.ராஜேந்திரன், எண்.10/16, அன்னை தெரசா தெரு, பவானி நகர், செங்குன்றம் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து காரில் கடத்தி வந்த 180 மி.லி. அளவு கொண்ட 160 மதுபாட்டில்கள் மற்றும் குற்றச் செயலுக்கு பயன்படுத்திய 1 கார் பறிமுதல் செய்யப்பட்டது.

விசாரணைக்குப் பின்னர் வழக்குப் பதிவு செய்து, குற்றவாளி இளமாறன் மீது உரிய சட்ட நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

 

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613