21 வயது தாண்டல.. ஆளுக்கு அரைடஜன் கேஸ்..!

திருட்டு புள்ளிங்கோக்களை அதிரடியாக பிடித்த தனிப்படை.!!

 

புதுச்சேரி மாநிலத்தில் உள்ள வில்லியனூர் கீழ் அஹ்ரகாரம் கிராமத்தை சார்ந்தவர் பரணீதரன் (வயது 19). இவர் புதுச்சேரி தாகூர் கலைக்கல்லூரியில் பி.காம் இரண்டாம் வருடம் பயின்று வருகிறார். கடந்த 21 ஆம் தேதி கிழிஞ்சிக்குப்பம் பகுதியை சார்ந்த தனது மாமா முனியாண்டியுடன் கடலூரில் உள்ள மீன் சந்தைக்கு இருசக்கர வாகனத்தில் சென்றுள்ளார். இருவரும் அங்குள்ள உவவையாறு – அபிஷேப்பாக்கம் பகுதியில் செல்கையில் இருசக்கர வாகனத்தில் வந்த 8 பேர் கொண்ட கும்பல் ரூ.5 ஆயிரத்தை பறித்து சென்றுள்ளது.

 

இந்த விஷயம் தொடர்பாக தவளக்குப்பம் காவல் நிலையத்தில் புகார் அளிக்கப்படவே, இது தொடர்பான வழக்குப்பதிவு செய்த காவல் துறையினர் தனிப்படை அமைத்து விசாரணை மேற்கொண்டு வந்தனர். காவல் ஆய்வாளர் தனசெல்வம் தலைமையிலான தனிப்படை காவல் துறையினர் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

 

இந்நிலையில், அங்குள்ள தவளக்குப்பம் பகுதியில் கண்காணிப்பு பணியில் ஈடுபடுகையில், ஆட்கள் நடமாட்டம் இல்லாத பகுதியில் பதுங்கியிருந்த 8 பேரை தனிப்படை காவல் துறையினர் அதிரடியாக கைது செய்தனர். விசாரணையில், அரியாங்குப்பம் மாஞ்சாலை ராஜி என்ற ரமணா (வயது 26), நல்லவாடு குமரகுரு (வயது 19), தன்னாம்பாளையம் விஷ்ணு (வயது 19), புதுக்கடை ஜெயமூர்த்தி (வயது 21), அர்ஜுன் (வயது 20), கரிக்காலம்பாக்கம் ஏழுமலை (வயது 19), வில்லியனூர் கணவாப்பேட்டை அருண்குமார் (வயது 21) என்பது உறுதியானது.

 

இவர்கள் தான் மேற்கூறிய கல்லூரி மாணவர் பரணீதரன் மற்றும் அவரது மாமா முனியாண்டி ஆகியோரிடம் பணம் பறித்தது என்பதும் தெரியவந்தது. இதுமட்டுமல்லாது கோழிப்பண்ணைகளில் இருக்கும் கேமிராக்களை திருடுதல், கம்பியூட்டர் திருட்டு, இருசக்கர வாகனம் திருட்டு, வழிப்பறி சம்பவம் போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததும் கண்டறியப்பட்டது.

 

தீவிர விசாரணையில் புதுச்சேரி, விழுப்புரம், கடலூர் மாவட்டத்தில் நடைபெற்ற பல கொலை மற்றும் கொள்ளை வழக்குகள் ஏற்கனவே இவர்கள் மீது நிலுவையில் இருப்பதும் உறுதியாகவே அனைவரையும் சிறையில் அடைத்துள்ளனர். இவர்களிடம் இருந்து 10 செல்போன்கள், 4 இரு சக்கர வாகனம், 2 கத்தி போன்றவற்றை பறிமுதல் செய்துள்ளனர். கைதான சில்வண்டுகளில் ராஜி மீது 6 காவல் நிலையத்தில் கொலை, கொள்ளை வழக்கு நிலுவையில் இருப்பதும் உறுதியானது.

By V.BALAMURUGAN 9381811222

Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *


Notice: ob_end_flush(): failed to send buffer of zlib output compression (0) in /home/hyqadrt/public_html/wp-includes/functions.php on line 4613