Home

மீன்பிடி துறைமுகம் பகுதியில் வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது.  

மீன்பிடி துறைமுகம் பகுதியில் வாலிபர் கொலை வழக்கில் தலைமறைவு குற்றவாளி கைது.

சென்னை, இராயபுரம், புது காமராஜர் நகர், 2வது தெரு, எண்.5 என்ற முகவரியில் வசிக்கும் வீரப்பன், வ/51, த/பெ.அம்பலவாணன் என்பவர் கடந்த 21.04.2021 மதியம் N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட ஜீரோகேட் கடற்கரை மணற் பரப்பில் நடந்து சென்று கொண்டிருந்த போது, மணற்பரப்பில் 25 வயது மதிக்கத்தக்க வாலிபர் மண்ணில் புதைந்த நிலையில் இறந்து கிடந்ததை கண்டுள்ளார். உடனே வீரப்பன் இது குறித்து N-4 மீன்பிடி துறைமுகம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று சந்தேக மரணம் 174 Crpc பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொண்டனர்

N-4 மீன் பிடிதுறைமுகம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினரின் விசாரணையில் இறந்து கிடந்த நபர் அப்புனு (எ) செல்வகுமார், வ/24, த/பெ.ஆனந்தன், எண்.364, ஜெ.பிளாக், தாழங்குப்பம், சென்னை-57 என்பது தெரியவந்தது. மேலும் போலீசாரின் தீவிர விசாரணையில் கொலையுண்ட அப்புனு (எ) செல்வகுமார் தனது நண்பர்களுடன் சேர்ந்து 13.04.2021 அன்று எண்ணூர் பகுதியில் டிரில்லிங் மெஷினை வாடகைக்கு தர மறுத்த லோகேஷ் என்பவரை தாக்கிவிட்டு தப்பிச்சென்றுள்ளனர். இது குறித்து லோகேஷ் எண்ணூர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளார்.

இந்நிலையில் அப்புனு (எ) செல்வகுமார் கடந்த 15.04.2021 அன்று இரவு 8.00 மணியளவில் தனது நண்பர்களான 1.தினேஷ் (எ) முட்டை பானை தினேஷ் 2.நிஷாந்தன், 3.முத்தமிழ், 4.ஶ்ரீதர் 5.வெற்றிவேல், 6.சந்தோஷ் 7.அர்ஜுன் ஆகியோருடன் சேர்ந்து மீன்பிடி துறைமுகம், ஜீரோ கேட் பகுதியில் உள்ள மணற் பரப்பில் அமர்ந்து மது அருந்தியுள்ளார். குடிபோதையில் அப்புனு (எ) செல்வகுமார் லோகேஷை தாக்கிய வழக்கில் தான் எண்ணூர் காவல் நிலையத்தில் சரண் அடைய போவதாக கூறியுள்ளார். இதனால்ஆத்திரமடைந்த மேற்படி 7 நபர்களும் சேர்ந்து பீர் பாட்டிலை உடைத்து அப்புனு (எ) செல்வகுமாரை தாக்கியுள்ளனர். தாக்குதலில் பலத்த காயமடைந்த அப்புனு ( எ) செல்வகுமார் சம்பவயிடத்திலே இறந்துள்ளார். உடனே மேற்படி 7 நபர்களும் சேர்ந்து அப்புனு (எ) செல்வகுமார் பிரேதத்தை மணற்பரப்பில் சிறிய அளவில் குழி தோண்டி புதைத்து விட்டு அங்கிருந்து தப்பிச்சென்றது தெரியவந்தது. அதன் பேரில் சந்தேக மரண வழக்கு , கொலை வழக்காக மாற்றம் செய்யப்பட்டு குற்றவாளிகள் 1.தினேஷ் (எ) முட்டை பானை தினேஷ், வ/25 2.நிஷாந்தன், வ/25 3.முத்தமிழ்,வ/21 4.ஶ்ரீதர், வ/27, ஆகிய 4 நபர்கள் கடந்த 22.04.2021 அன்று கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டனர் தலைமறைவான வெற்றிவேல், சந்தோஷ், அர்ஜுன் ஆகிய 3 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவந்தனர்.

இந்நிலையில் மேற்படி கொலை வழக்கில் சம்பந்தப்பட்டு தலைமறைவாகயிருந்த வெற்றிவேல், வ/33, த/பெ.வடிவேல், எண்.90, 4 வது பிளாக், காசிமேடு என்பவரை இன்று (24.04.2021) கைது செய்தனர்

விசாரணைக்குப் பின்னர் கைது செய்யப்பட்ட வெற்றிவேல் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *