Home

சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுமியின் உறவினர் உட்பட 4 நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது. 

கீழ்ப்பாக்கம் காவல் மாவட்டத்தில் சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்த சிறுமியின் உறவினர் உட்பட 4 நபர்கள் போக்சோ சட்டத்தில் கைது.

 

ஹைதராபாத்தில் வசிக்கும் வனஜா (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவர் தனது மகளுக்கு 6 வயதாக இருக்கும் பொழுது வேலைபளுவின் காரணமாக சென்னையில் உள்ள தனது தங்கையின் வீட்டில் விட்டுவிட்டு ஹைதராபாத்தில் பணிசெய்து வந்ததாகவும், இந்நிலையில் சுமார் 1½ வருடங்களுக்கு முன்னர் மீண்டும் தனது மகளுக்கு 13½ வயதாக இருக்கும் போது ஹைதராபாத்திற்கு அழைத்துச் சென்றுள்ளதாகவும் அப்போது தனது மகளின் நடவடிக்கைகளில் மாற்றம் இருப்பதை அறிந்து சிறுமியிடம் கேட்டபோது சென்னையில் வசித்து வந்தபோது சிலர் தனக்கு பாலியல் தொந்தரவு கொடுத்ததாக கூறியுள்ளார். உடனே சிறுமியின் தாயார் வனஜா இதுகுறித்து W-4 AWPS கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில், வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

W-4 AWPS கீழ்ப்பாக்கம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.ஷான் ஜசில், ஆ/வ 47 (சிறுமியின் சித்தப்பா), த/பெ.அல்ஹர், எண்.13, அன்னபூர்ணா ரெசிடென்சி 2வது தளம், வி.வி.கோயில் தெரு, சின்மயாநகர், சாலிகிராமம், சென்னை, 2.ஹென்றிபால், ஆ/வ 38, (சர்ச் பாதிரியார்) த/பெ.ராஜேந்திரன், எண்.7, ராஜாஜி தெரு, தென்பழனி நகர், கொளத்தூர், சென்னை, 3.கிளாரோதேவ், ஆ/வ 23 (சிறுமியின் நாத்தனார் மகன்), தாய்/பெ.ஸ்பந்தனா, எண்.50, கம்பர் தெரு, போஸ்டல் ஆடிட் காலனி, சாலிகிராமம், சென்னை, 4.ஷெகினா ஷான், பெ/வ 38 (சிறுமியின் சித்தி), க/பெ.ஷான் ஜசில், எண்.13, அன்னபூர்ணா ரெசிடென்சி 2வது தளம், வி.வி.கோயில் தெரு, சின்மயாநகர், சாலிகிராமம், சென்னை ஆகிய 4 நபர்களை போக்சோ சட்டத்தில் கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *