Home

175க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா ரோந்து வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்களின் உத்தரவின் பேரில், சென்னை பெருநகரின் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவின் காவல் துணை ஆணையாளர் அவர்களின் நேரடி கண்காணிப்பின் கீழ் இயங்கி வரும் குழந்தை கடத்தல் தடுப்பு பிரிவு (ACTU), சிறுவர் நல காவல் பிரிவு (JAPU) 1 மற்றும் 2 மற்றும் (IUCAW), 35 அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர்கள் மற்றும் ஆளினர்கள் ஆகியோர் இணைந்து சென்னை பெருநகரின் பல்வேறு இடங்களில் கடந்த 11.04.2021 முதல் 19.04.2021 ஆம் தேதி வரை கொரோனா நோய் தொற்றுப் பரவல், பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றங்கள் ஆகியவற்றைத் தடுக்கும் பொருட்டு தீவிர விழிப்புணர்வு பிரச்சாரங்கள் மற்றும் முகாம்களை நடத்தி வருகின்றனர்.

இந்த விழிப்புணர்வு முகாம்கள் மூலம் மக்கள் மிகுந்த கவனத்துடன் அரசு விதிமுறைகள் மற்றும் பாதுகாப்பு அம்சங்களை முன்பைவிட அதிக கவனமாக கடைப்பிடிக்க வேண்டும் என்றும், இதனால் தமக்கும், தம்மைச் சுற்றியுள்ளவர்களுக்கும் கொரோனா நோய் தொற்று பரவாமல் இருக்கும் என்றும், ஒவ்வொருவரும் எச்சரிக்கையுடன் இருப்பதன் மூலம் பாதுகாப்பான, வளமான சமுதாயத்தை நிலைநிறுத்த முடியும் என்பதும் வலியுறுத்தப்பட்டு வருகிறது. கடந்த 5 தினங்களில் சென்னை பெருநகரில் 175க்கும் மேற்பட்ட இடங்களில் அம்மா ரோந்து வாகனத்தின் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகிறது.

மேலும் எந்த நேரத்திலும் பொது மக்கள் காவல்துறையினரை தயக்கமின்றி நாடலாம் என்றும் சென்னை பெருநகர காவல் ஆணையாளர் அவர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத்தடுப்பு பிரிவு காவல் துணை ஆணையாளர் ஆகியோர் தெரிவித்துள்ளனர்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *