Home

கத்தியுடன் சுற்றித் திரிந்தவரை பிடிக்க சென்ற காவல்

நந்தம்பாக்கம் பகுதியில் கத்தியுடன் சுற்றித் திரிந்தவரை பிடிக்க சென்ற காவல் குழுவினரை தகாத வார்த்தைகளால் பேசி தாக்கிய பழைய குற்றவாளி கைது.

 

S-4 நந்தம்பாக்கம் காவல் நிலைய எல்லைக்குட்பட்ட நேதாஜி நகர் 2வது தெருவில் ஒரு நபர் குடிபோதையில் கத்தியுடன் தகராறு செய்து கொண்டிருப்பதாக நேற்று (20.4.2021) மாலை கட்டுப்பாட்டறையில் இருந்து கிடைத்த தகவலின்பேரில், S-4 நந்தம்பாக்கம் சுற்றுக் காவல் ரோந்து வாகன பொறுப்பு உதவி ஆய்வாளர் விவேகானந்தர் மற்றும் காவல் வாகன ஓட்டுநர் காவலர் சக்திவேல் ஆகியோர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்றபோது, அங்கு ஒரு நபர் கத்தியை வைத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டு கொண்டிருந்தார். உடனே, காவல் குழுவினர் 2 பேரும் அந்த நபரை பிடிக்க முற்பட்டபோது, அந்த நபர் உதவி ஆய்வாளர் விவேகானந்தரின் சீருடையை கிழித்து கையால் தாக்கினார். மேலும், இதனை தடுக்க சென்ற காவலர் சக்திவேலையும் அந்த நபர் தாக்கிவிட்டு தப்ப முயன்றபோது, இருவரும் சேர்ந்து அந்த நபரை மடக்கிப் பிடித்து, கத்தியை பறிமுதல் செய்து, S-4 நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் ஒப்படைத்து, மருத்துவமனையில் சிகிச்சை பெற்றனர்.

மேலும், இச்சம்பவம் குறித்து S-4 நந்தம்பாக்கம் காவல் நிலையத்தில் வழக்குப் பதிவு செய்து, காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் விசாரணை செய்ததில், பிடிபட்ட நபர் செந்தில்குமார், வ/38, த/பெ.மோகன், எண்.4/92, மாங்காளியம்மன் கோயில் தெரு, புனித தோமையர்மலை, சென்னை என்பதும், குடிபோதையில் கத்தியை வைத்துக் கொண்டு ரகளையில் ஈடுபட்டபோது பிடிக்க சென்ற உதவி ஆய்வாளர் மற்றும் காவலரை தகாத வார்த்தைகளால் பேசி, கையால் தாக்கியதும் தெரியவந்தது. அதன்பேரில், எதிரி செந்தில் குமார் கைது செய்யப்பட்டார்.

மேலும் விசாரணையில் எதிரி செந்தில்குமார் மீது S-1 புனித தோமையர்மலை காவல் நிலையத்தில் ஒரு கொலை முயற்சி வழக்கு உட்பட 2 குற்ற வழக்குகள் உள்ளது தெரியவந்தது.

விசாரணைக்குப் பின்னர் எதிரி செந்தில்குமார் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *