Home

பாலியல் தொழில் நடத்திய மேலாளர் கைது. 1 செல்போன் பறிமுதல். 5 பெண்கள்

தேனாம்பேட்டை பகுதியில் மசாஜ் சென்டரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மேலாளர் கைது. 1 செல்போன் பறிமுதல். 5 பெண்கள் மீட்கப்பட்டு காப்பகத்தில் ஒப்படைப்பு.

 

சென்னையில் வேலை தேடி கொண்டிருக்கும் பெண்கள் மற்றும் சென்னை நகருக்கு வேலை தேடி வரும் அப்பாவி இளம் பெண்களிடம் தனியார் நிறுவனங்களில் நல்ல சம்பளத்தில் வேலை வாங்கித் தருவதாக ஆசை வார்த்தைகள் கூறி, அவர்களை அழைத்துச் சென்று கட்டாயப்படுத்தி விபச்சாரத் தொழிலில் ஈடுபடுத்தி சிலர் பணம் சம்பாதிப்பதாக கிடைத்த ரகசிய தகவலின் பேரில், மேற்படி குற்றவாளிகளை கைது செய்து நடவடிக்கை எடுக்க சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப அவர்கள் உத்தரவிட்டுள்ளார். அதன்பேரில் காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் ரகசியமாக கண்காணித்து மேற்படி குற்றச் செயல்களில் ஈடுபடும் விபச்சார தரகர்களை கைது செய்து, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

இதன் தொடர்ச்சியாக, தி.நகர், மதுவிலக்கு அமலாக்கப்பிரிவு காவல் ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் மற்றும் E-3 தேனாம்பேட்டை காவல் ஆய்வாளர் தலைமயிலான காவல் குழுவினருக்கு நேற்று (20.4.2021) மதியம் கிடைத்த ரகசிய தகவலின்பேரில், தி.நகர், டாக்டர் டி.என்.ரோடு 2வது தெருவிலுள்ள, RJ ரெசிடென்சி என்ற முகவரியிலுள்ள மசாஜ் சென்டரில் கண்காணித்தபோது, அங்கு பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்தியது உறுதி செய்யப்பட்டது.

பெண் காவலர்கள் உள்ளிட்ட காவல் குழுவினர் சோதனைகள் மேற்கொண்டு, மசாஜ் சென்டர் என்ற பெயரில் பெண்களை வைத்து பாலியல் தொழில் நடத்திய மசாஜ் சென்டரின் மேலாளர் பெபின், வ/35, த/பெ.குஞ்சுமோன், சிம்கோ பிளாட், பஜனை கோயில் 2வது தெரு, வடபழனி என்பவரை கைது செய்து, 1 செல்போன் பறிமுதல் செய்தனர். மேலும், மேற்படி இடத்தில் பாலியல் தொழிலில் ஈடுபடுத்த வைத்திருந்த 5 பெண்கள் மீட்கப்பட்டனர்.

கைது செய்யப்பட்ட பிபின் மற்றும் மீட்கப்பட்ட 5 பெண்கள் உரிய சட்ட நடவடிக்கைக்காக இன்று (21.4.2021) நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட உள்ளனர்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *