Home

பெண்ணை தாக்கிய 4 நபர்கள் கைது.

எம்.கே.பி நகர் பகுதியில் பெண்ணை தாக்கிய 4 நபர்கள் கைது.

 

சென்னை, வியாசர்பாடி, பி.வி. காலனி, 30வது தெரு, எண்.1090, என்ற முகவரியில் மகாலட்சுமி, வ/25, க/பெ.மணிகண்டன் என்பவர் வசித்து வருகிறார். மகாலட்சுமி நேற்று (20.04.2021) இரவு சுமார் 7.30 மணியளவில் தனது வீட்டிற்கு வெளியே நின்று கொண்டிருந்த போது, அங்கு வந்த 7 பேர் கும்பல் மகாலட்சுமியிடம், உங்கள் கொளுந்தன் கார்த்திக் எங்கே என்று கேட்டு தகராறு செய்து கார்த்திக்கை தேடியுள்ளனர். கார்த்திக் கிடைக்காததால், கார்த்திக்கின் அண்ணி மகாலட்சுமியை தாக்கிவிட்டு அங்கிருந்து தப்பியுள்ளனர். இது குறித்து மகாலட்சுமி P-5 M.K.B நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

 

P-5 M.K.B நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான போலீசார் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட 1.ஹரிஹரன், வ/23, த/பெ.சீனிவாசன், எண்.96, கட்டபொம்மன் தெரு, கண்ணதாசன் நகர், தாம்பரம் 2.தினேஷ், வ/21, த/பெ.ரவிக்குமார், எண்.8/55, 3 வது தெரு, பாரதி நகர், வியாசர்பாடி 3.விஜய், வ/21, த/பெ.பிரபாகரன், எண்.135, சத்தியமூர்த்தி தெரு, கக்கன்ஜி காலனி, வியாசர்பாடி 4.கார்த்திக், வ/27, த/பெ.வெங்கடேசன், எண்.42, சக்திவேல் தெரு, சத்தியவாணி முத்து நகர், வியாசர்பாடி ஆகிய நான்கு நபர்களை கைது செய்தனர். அவர்களிடமிருந்து 1 கத்தி பறிமுதல் செய்யப்பட்டது. மேலும் விசாரணையில் கைது செய்யப்பட்ட ஹரிஹரனுக்கும், கார்த்திக் என்பவருக்கும் ஏற்கனவே முன்விரோதம் இருந்து வந்துள்ளது. சம்பவத்தன்று ஹரிஹரன் தனது கூட்டாளிகளுடன் கார்த்திக்கை தாக்குவதற்கு சென்ற போது, கார்த்திக் கிடைக்காததால் அவரது அண்ணி மகாலட்சுமியை தாக்கிவிட்டு தப்பிச்சென்றது தெரியவந்தது. மேற்படி சம்பவத்தில் ஈடுபட்டு தலைமறைவாகவுள்ள சஞ்சய், முகேஷ், புருஷோத் ஆகிய 3 குற்றவாளிகளை போலீசார் தீவிரமாக தேடிவருகின்றனர்.

கைது செய்யப்பட்ட 4 நபர்களும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *