Home

இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கல்லை எடுத்து தலையில் தாக்கிய 2 நபர்கள் கைது .

ஆர்.கே.நகர் பகுதியில் இருசக்கர வாகனம் நிறுத்துவதில் ஏற்பட்ட தகராறில் கல்லை எடுத்து தலையில் தாக்கிய 2 நபர்கள் கைது .

 

சென்னை, தண்டையார்பேட்டை, நேதாஜிநகர், எண்.123/35 என்ற முகவரியில் வசித்து வரும் மருதுபாண்டி, வ/50, த/பெ.ராமு என்பவர் வசித்து வருகிறார். மருதுபாண்டி நேற்று (20.04.2021) இரவு ஆர்.கே.நகர் EH Road, ECI பள்ளி அருகில் தனது இருசக்கர வாகனத்தை நிறுத்தும் போது ஏற்பட்ட தகராறில் எதிரிகள் யோகேஷ்வரன் மற்றும் தினேஷ் ஆகியோர் கீழே கிடந்த கல்லை எடுத்து மருதுபாண்டியின் தலையில் தாக்கிவிட்டு தப்பிச் சென்றனர். இதில் தலையில் இரத்த காயமடைந்த மருதுபாண்டி மருத்துவமனையில் சிகிச்சை பெற்று, மேற்படி சம்பவம் குறித்து H-6 ஆர்.கே.நகர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

H-6 ஆர்.கே.நகர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர், சம்பவயிடத்திற்கு சென்று தீவிர விசாரணை செய்து, மேற்படி புகார்தாரரின் தலையில் கல்லை எடுத்து தாக்கிய 1.யோகேஷ்வரன், வ/25, த/பெ.தர்மலிங்கம், எண்.25, சத்தியமூர்த்தி தெரு, ஜீவா நகர், 1வது தெரு, கொருக்குப்பேட்டை, சென்னை 2.தினேஷ், வ/25, த/பெ.செந்தாமரை, எண்.28/66, பாலகிருஷ்ணநாயுடு காலனி, 1வது தெரு, காலடிபேட்டை, திருவொற்றியூர், சென்னை ஆகிய இருவரை கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட யோகேஷ்வரன் மற்றும் தினேஷ் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளனர்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *