Home

கிருமி நாசினி தயாரிக்கும் கூடத்தை காவல் ஆணையாளர் பார்வையிட்டார்.

சென்னை பெருநகர காவல் துறை மற்றும் ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை குழுவினர் இணைந்து கிருமி நாசினி தயாரிக்கும் கூடத்தை காவல் ஆணையாளர் பார்வையிட்டார்.

சென்னை பெருநகர காவல் துறை, ஆயுதப்படை காவல் ஆளிநர்கள், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவ குழுவினருடன் இணைந்து ராஜரத்தினம் மைதான வளாகத்தில் கிருமிநாசினி திரவம் (Liquid Hand sanitizer) தயாரிக்கப்பட்டு காவல் ஆளிநர்கள் பயன்பாட்டிற்காக வழங்கப்பட்டு வருகிறது. இன்று (21.04.2021) மாலை சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள் கிருமி நாசினி தயாரிக்கும் கூடத்திற்கு சென்று அங்கு தயாரிக்கப்பட்ட கிருமி நாசினி திரவங்களை (Liquid Hand sanitizer) பார்வையிட்டார்.

இந்நிகழ்வில் சென்னை பெருநகர காவல் கூடுதல் ஆணையாளர் திரு.T.செந்தில்குமார், இ.கா.ப., (வடக்கு), இணை ஆணையாளர்கள் திரு.V.பாலகிருஷ்ணன், இ.கா.ப, (கிழக்கு மண்டலம்), திருமதி.S.மல்லிகா, இ.கா.ப, (தலைமையிடம்) துணை ஆணையாளர்கள் திரு.P.சாமிநாதன், இ.கா.ப., (காவல் கட்டுப்பாட்டு அறை), திரு.P.பகலவன், இ.கா.ப (திருவல்லிக்கேணி) ஆயுதப்படை துணை ஆணையாளர் திரு.K.சௌந்தராஜன், ராஜீவ்காந்தி அரசு பொதுமருத்துவமனை மருத்துவர்கள் மற்றும் குழுவினர் உடனிருந்தனர்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *