HOME

இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கை…!

இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கை…!

 

சென்னை பெருநகர காவல் நிலைய எல்லைக்குட்பட்ட W-22 மயிலாப்பூர் அனைத்து மகளிர் காவல் நிலைய குற்ற எண். 18/2016, U/s. 5 (K) (i) and 14 of POCSO Act 2012 & 506 (ii) IPC யின் படி 17.06.2016 அன்று வழக்கு பதிவு செய்யப்பட்டு துரிதமாக புலன் விசாரணை மேற்கொள்ளப்பட்டது. இவ்வழக்கில் காவல் துணை ஆணையாளர் (பெண்கள் மற்றும் குழந்தைகளுக்கெதிரான குற்றத் தடுப்பு பிரிவு) மற்றும் அவரது குழுவினர் பல்வேறு முயற்சிகளை மேற்கொண்டும் இதுபோன்ற குற்றங்கள் நிகழாமல் இருக்க தக்க நடவடிக்கைகள் எடுத்தும் சீரிய முயற்சிகளை கையாண்டும் எதிரி K.V. இராமானுஜம், வ/63, கைது செய்து நீதிமன்ற காவலுக்கு உட்படுத்தி தண்டனை பெற்றுத்தரப்பட்டது.

இவ்வழக்கின் குற்றவாளியான K.V. இராமானுஜம், வ/63, த/பெ. சீனிவாச அய்யங்கார், எண். 16/7, கோர்நாட் கேஸ்டல், மார்வாடி தோட்டம், மயிலாப்பூர், சென்னை என்பவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனையும் ரூ. 30,000/- அபராதமும் விதிக்கப்பட்டது. மேலும் அபராத தொகையிலிருந்து ரூ.20,000/- பாதிக்கப்பட்ட பெண் குழந்தைக்கு வழங்கிடவும் மற்றும் இழப்பீட்டுத் தொகை ரூபாய் இரண்டு லட்சம் வழங்குவதற்கும் பரிந்துரைத்து போக்சோ சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கி உத்தரவிட்டது. மேற்படி குற்றவாளிக்கு சிறை தண்டனை அளிக்கப்பட்டதன் பேரில் குற்றவாளி சிறையில் அடைக்கப்பட்டார்.

மேலும் இவ்வழக்கில் புலன்விசாரணை செய்து குற்றவாளிக்கு தண்டனை பெற்றுத்தர சிறப்பாக பணியாற்றிய அனைவரையும் காவல் உயரதிகாரிகள் பாராட்டினார்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *