HOME

பெண்ணின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிடுவதாக மிரட்டிய நபர் கைது

பெண்ணின் அந்தரங்க வீடியோவை சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாக மிரட்டி பணம் கேட்ட நபர் கைது.

 

தாம்பரம் பகுதியில் வசிக்கும் 29 வயதான பெண்மணி தனியார் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். பெண்மணி திருமணத்திற்கு முன்பு தன்னுடன் வேலை செய்த சந்தியராஜ் என்பருடன் நெருக்கமாக பழகியுள்ளார். இருவரும் பழகியபோது எடுத்த அந்தரங்க வீடியோவை, தற்போது சந்தியராஜ் சமூக வலைதளத்தில் வெளியிட்டு விடுவதாகவும், வெளியிடாமல் இருக்க பணம் கேட்டு மிரட்டி வந்துள்ளார். இது குறித்து மேற்படி பெண்மணி S-11 தாம்பரம் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

S-11 தாம்பரம் காவல் நிலைய போலீசார் விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட சந்தியராஜ், வ/31, த/பெ.ஆனந்தன், எண்.11, சுப்பிரமணியன் கோயில் 2வது தெரு, ராஜாஜி நகர், பல்லாவரம் என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட சந்தியராஜ் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார்.

 

 

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *