HOME

செயின் பறிப்பில் ஈடுபட்ட 1 பெண் உட்பட இருவர் கைது. 5 சவரன்  தங்கச்செயின் மீட்கப்பட்டது.

வேளச்சேரி பகுதியில் செயின் பறிப்பில் ஈடுபட்ட 1 பெண் உட்பட இருவர் கைது. 5 சவரன்  தங்கச்செயின் மீட்கப்பட்டது.

 

 சென்னை, பள்ளிக்கரணை, மயிலை பாலாஜிநகர், எண்.75 என்ற முகவரியில் அஸ்வின், வ/24, த/பெ.முருகன் என்பவர் வசித்து வருகிறார். இவர் கோடம்பாக்கத்தில் உள்ள தனியார் பைனான்ஸ் நிறுவனத்தில் வேலை செய்து வருகிறார். அஸ்வின் நேற்று (19.04.2021) அதிகாலை வேளச்சேரி, 100 அடி ரோடு, மருதுபாண்டியர் சாலை சந்திப்பில் அவருக்கு அறிமுகமான செல்வி (எ) சம்சத் பேகம் என்பவருடன் பேசிக்கொண்டிருந்தபோது, செல்வி (எ) சம்சத் பேகம்  என்பவர் பணம் கேட்கவே வாய்தகராறு ஏற்பட்டு, மேற்படி செல்வி (எ) சம்சத் பேகம் மற்றும் அவரது கூட்டாளியான விஜய்காந்தி என்பவரும் சேர்ந்து அஸ்வின் கழுத்தில் அணிந்திருந்த 5 சவரன் தங்கச்செயினை பறித்துக் கொண்டு தப்பிச் சென்றனர். இது குறித்து அஸ்வின் J-7 வேளச்சேரி காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்து விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

J-7 வேளச்சேரி காவல் நிலைய குற்றப்பிரிவு ஆய்வாளர்  தலைமையிலான காவல் குழுவினர் சம்பவயிடத்திற்கு சென்று விசாரணை செய்து, தீவிர தேடுதலில் ஈடுபட்டு, மேற்படி புகார்தாரரிடம் தங்கச்செயினை பறித்துச் சென்ற 1.செல்வி (எ) சம்சத் பேகம், பெ/வ 24, த/பெ.காதர் மொய்தீன், எண்.23/27, கம்பர் தெரு, வேளச்சேரி, சென்னை, 2.விஜய்காந்தி, ஆ/வ 19, த/பெ.வில்லாயிரம்மூர்த்தி, எண்.8 பெரியார்நகர், பேபிநகர், வேளச்சேரி, சென்னை ஆகிய இருவரையும் கைது செய்தனர். அவர்களிடமிருந்து புகார்தாரரின் 5 சவரன் தங்கச்செயின் மீட்கப்பட்டது.

 விசாரணைக்குப் பின்னர், கைது செய்யப்பட்ட செல்வி (எ) சம்சத் பேகம் மற்றும் விஜய்காந்தி  ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *