Home

கஞ்சா எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்கள் கைது.

ஆட்டோவில் கஞ்சா எடுத்து வந்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்கள் கைது. 15 கிலோ கஞ்சா பறிமுதல் .

 

 

சென்னை பெருநகரில் “போதை தடுப்புக்கான நடவடிக்கை” (Drive against Drugs) மூலம் கஞ்சா மற்றும் போதை பொருட்கள் கடத்தி வருபவர்களையும், விற்பனை செய்பவர்களையும் கண்டறிந்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ் குமார் அகர்வால், இ.கா.ப., அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான காவல் குழுவினர் தீவிரமாக கண்காணித்து, கஞ்சா, போதை பொருட்கள் விற்பனை செய்பவர்கள் மற்றும் சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்களை கைது செய்து நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக, J-9துரைப்பாக்கம் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில், இன்று (18.04.2021) அதிகாலை பெருங்குடி, OMR, அப்பல்லோ சிக்னல் அருகே வாகன தணிக்கையில் ஈடுபட்டிருந்த போது, அங்கு வந்த ஆட்டோவை நிறுத்தி விசாரணை செய்தனர். மேலும் ஆட்டோவில் சவாரி செய்த வடமாநிலத்தைச் சேர்ந்த 2 நபர்களிடம் விசாரணை செய்த போது, அவர்கள் முன்னுக்குப்பின் முரணாக பதில் கூறினர். சந்தேகத்தின் பேரில் அவர்கள் வைத்திருந்த பையை சோதனை செய்த போது, அதில் கஞ்சா பொட்டலங்கள் மறைத்து எடுத்து வந்தது தெரியவந்தது. அதன் பேரில் இருவரையும் துரைப்பாக்கம் காவல் நிலையத்திற்கு அழைத்து வந்து விசாரணை செய்தனர்.

J-9 துரைப்பாக்கம் காவல் நிலைய போலீசார் விசாரணையில் பிடிபட்ட நபர்கள் சானிகெமுன்டு, வ/19, த/பெ.தாமுகெமுன்டு, ஆன்ட்ரால்ஹால் கிராமம், மல்கங்கிரி மாவட்டம், ஓடிசா மாநிலம் மற்றொருவர் 17 வயது இளஞ்சிறார் என்பது தெரியவந்தது. அவர்களிடமிருந்து 15 கிலோ கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது.

தொடர்ந்து விசாரணை நடைபெற்று வரும் நிலையில், விசாரணைக்குப் பின்னர் சானி கெமுன்டு நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்படவுள்ளார். 17 வயது இளஞ்சிறார் சிறுவர் கூர்நோக்கு இல்லத்தில் சேர்க்கப்படவுள்ளார்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *