Home

ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது.

கோயம்பேடு பகுதியில் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்த நபர் கைது. ரூ.1000/-, 1 செல்போன் மற்றும் 1 Mobile Printer பறிமுதல்.

தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் மற்றும் ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை சென்னையில் சட்டவிரோதமாக விற்பனை செய்யும் நபர்களை கண்காணித்து கைது செய்ய சென்னை பெருநகர காவல் ஆணையாளர் திரு.மகேஷ்குமார் அகர்வால், இ.கா.ப, அவர்கள் உத்தரவிட்டதின்பேரில், உதவி ஆணையாளர்களின் நேரடி மேற்பார்வையில், காவல் ஆய்வாளர்கள் தலைமையிலான தனிப்படையினர் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு இது போன்ற சட்ட விரோத செயல்களில் ஈடுபடும் நபர்கள் மீது நடவடிக்கை எடுத்து வருகின்றனர்.

இதன் தொடர்ச்சியாக K-10 கோயம்பேடு காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினருக்கு கிடைத்த ரகசிய தகவலின்பேரில் நேற்று (17.04.2021) மாலை 5.00 மணியளவில் மேட்டுக்குப்பம், எம்.ஜி.ஆர் சாலையில் கண்காணித்தபோது, அங்கு ஒருவர் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகளை விற்பனை செய்து கொண்டிருந்தது தெரியவந்தது.

அதன்பேரில், சட்டவிரோதமாக ஒரு நம்பர் லாட்டரி சீட்டுகள் விற்பனை செய்து கொண்டிருந்த பிரபாகரன், வ/42, த/பெ.சின்னதுரை, எண்.8, 2வது குறுக்குத் தெரு, இந்திரா நகர், ஆழ்வார் திருநகர் என்பவரை கைது செய்தனர். அவரிடமிருந்து ஒரு நம்பர் லாட்டரி விற்ற பணம் ரூ.1000/-, லாட்டரி விற்பனைக்கு பயன்படுத்திய 1 செல்போன் மற்றும் 1 Mobile Printer பறிமுதல் செய்யப்பட்டது

கைது செய்யப்பட்ட பிரபாகரன் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டது.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *