HOME

திருவொற்றியூர் பகுதியில் இருவேறு சம்பவங்களில் 2 குற்றவாளிகள் போக்சோ சட்டத்தில் கைது.

திருவொற்றியூர் பகுதியில் இருவேறு சம்பவங்களில் 2 குற்றவாளிகள் போக்சோ சட்டத்தில் கைது.

 

சென்னை, திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் கவிதா, (பெயர் மாற்றப்பட்டுள்ளது) என்பவரின் 17 வயது மகள் முகநூல் மூலம் அறிமுகமான கிருஷ்ணகிரி பகுதியைச்சேர்ந்த வெங்கடேஷ் என்பவரை காதலித்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 11.4.2021 அன்று வெங்கடேஷ் மேற்படி சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி தனது சொந்த ஊரான கிருஷ்ணகிரிக்கு அழைத்து சென்றுள்ளார். இது குறித்து சிறுமியின் தாய் W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல்நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் கடத்தல் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது,

W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து, 17 வயது சிறுமியிடம் திருமணம் செய்து கொள்வதாக ஆசை வார்த்தை கூறி கிருஷ்ணகிரிக்கு கடத்தி சென்ற வெங்கடேஷ், வ/24, த/பெ.வேலு, சாலை நயன் தெரு, பர்கூர், கிருஷ்ணகிரி மாவட்டம் என்பவரை கைது செய்தனர்.

 

மேலும் மற்றும் ஒரு வழக்கில் திருவொற்றியூர் பகுதியில் வசிக்கும் 30 வயதான பெண்மணி கருத்து வேறுபாடு காரணமாக தனது கணவரை பிரிந்து 17 வயது பெண் குழந்தையுடன் வசித்து வருகிறார். மேற்படி பெண்மணி தன்னுடன் வேலை செய்யும் தாமோதரன் வ/33 என்பவருடன் தொடர்பில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் கடந்த 20.3.2021 அன்று தாமோதரன், 17 வயது சிறுமிக்கு பாலியல் தொந்தரவு கொடுத்துள்ளார். சிறுமி தனது பாட்டியிடம் நடந்த சம்பவத்தை கூறியுள்ளார். சிறுமியின் பாட்டி W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் கொடுத்த புகாரின் பேரில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்கு பதிவு செய்து விசாரணை செய்யப்பட்டது.

W-14 திருவொற்றியூர் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர விசாரணை செய்து மேற்படி வழக்கில் சம்பந்தப்பட்ட தாமோதரன், வ/33, த/பெ.குப்புசாமி, எண்.16/1, சாத்தங்காடு நெடுஞ்சாலை, திருவொற்றியூர் என்பவரை கைது செய்தனர்.

கைது செய்யப்பட்ட வெங்கடேஷ் மற்றும் தாமோதரன் ஆகிய இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர் செய்யப்பட்டு நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டனர்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *