HOME

15 வயது சிறுமியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி கையை பிடித்து இழுத்து தொந்தரவு செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது. 

மாதவரம் காவல் மாவட்டத்தில் 15 வயது சிறுமியை காதலிக்க சொல்லி வற்புறுத்தி கையை பிடித்து இழுத்து தொந்தரவு செய்த நபர் போக்சோ சட்டத்தில் கைது.

 

 

சென்னை, மாதவரம் காவல் மாவட்டத்தில் வசிக்கும் 15 வயது சிறுமி 10ம் வகுப்பு படித்து வருகிறார். கடந்த 12.4.2021 அன்று சிறுமி கடைக்கு சென்றபோது, கந்தன் என்ற நபர் சிறுமியிடம் காதலிக்க சொல்லி வற்புறுத்தி, கையை பிடித்து இழுத்து தகராறு செய்தபோது, சிறுமி சத்தம் போடவே கந்தன் தப்பியோடிவிட்டார். இது குறித்து சிறுமி தனது தாயிடம் கூறவே, சிறுமியின் தாய் W-33 மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் புகார் கொடுத்ததின் பேரில் விசாரணை மேற்கொள்ளப்பட்டது.

W-33 மாதவரம் அனைத்து மகளிர் காவல் நிலைய ஆய்வாளர் தலைமையிலான காவல் குழுவினர் தீவிர தேடுதலில் ஈடுபட்டு கந்தனை பிடித்து விசாரணை செய்தபோது, கந்தன் மேற்படி சிறுமியை அடிக்கடி பின் தொடர்ந்து சென்று சிறுமியை காதலிப்பதாகவும், தன்னை காதலிக்கும்படியும் தொந்தரவு செய்து வந்த நிலையில், சம்பவத்தன்று சிறுமி கடைக்கு சென்றபோது, கந்தன் சிறுமியின் கையை பிடித்து இழுத்து காதலிக்க சொல்லி வற்புறுத்தி தகராறு செய்ததும் தெரியவந்தது.

அதன்பேரி, W-33 மாதவரம் அனைத்து மகளிர் நிலையத்தில் போக்சோ சட்டப்பிரிவில் வழக்குப் பதிவு செய்து, எதிரி கந்தன், வ/34, த/பெ.மூர்த்தி, எண்.1,048, 3வது மெயின் ரோடு, எம்.எம்.டி.ஏ., மாத்தூர், சென்னை என்பவரை நேற்று (16.4.2021) கைது செய்தனர்.

விசாரணைக்குப் பின்னர் எதிரி கந்தன் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு, நீதிமன்ற உத்தரவுப்படி சிறையில் அடைக்கப்பட்டார்.

 

V.BALAMURUGAN 9381811222
Arasumalar.com Amtv.asia Arjunatv.in மக்கள் வெளிச்சம்
http://arasumalar.com%20

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *