வாங்க மோடி
வணக்கங்க மோடி பாடலுடன் மோடிக்கு வரவேற்பு
கோவை.பிப் 24
சட்டமன்ற தேர்தல் பிரச்சாரத்திற்காக கோவை வரவுள்ள பிரதமர் நரேந்திர மோடியை வரவேற்கும் வகையில் பாஜக தேசிய மகளிரணி தலைவி வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் ‘வாங்க மோடி.. வணக்கங்க மோடி’ என்ற பாடலை வெளியிட்டுள்ளனர். பிரதமர் நரேந்திர மோடி வரும் பிப்ரவரி 25ம் தேதியன்று கோவையில் நடைபெறவுள்ள பொதுக் கூட்டத்திலும், அரசு விழாவிலும் பங்கேற்று உரையாற்ற உள்ளார். கொடீசியா வளாகத்தில் நடைபெறவுள்ள இந்நிகழ்ச்சியில் தமிழக முதலமைச்சர், துணை முதலமைச்சர் உள்ளிட்டோரும் பங்கேற்க உள்ளனர். இந்நிகழ்ச்சிக்கான முன்னேற்பாடுகள், பாதுகாப்பு கட்டடைப்புகள் உள்ளிட்ட பணிகள் தீவிரமாக நடைபெற்று வரும் நிலையில், பிரதமரை கோவைக்கு வரவேற்கும் வகையில் பாஜக தேசிய மகளிர் அணித் தலைவி வானதி சீனிவாசன் தலைமையிலான குழுவினர் வரவேற்பு பாடல் ஒன்றை வெளியிட்டுள்ளனர். ‘வாங்க மோடி.. வணக்கங்க மோடி’ என்று தொடங்கும் இப்பாடலில் இதர பாடகர்களுடன் இணைந்து வானதி சீனிவாசனும் பாடியுள்ளார்.